Wednesday, 28 August 2019

பொன்னியின் செல்வன் தொடர்கதை அறிமுகம்




வணக்கம்.

நண்பர்களே இப்பொழுது சினிமா இலக்கிய வட்டாரங்களில் ஒரு நல்ல செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கிறார் என்பதுதான். இதற்கு முன்பும் பல கலைஞர்களும் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்து கமலஹாசன் போன்ற பல கலைஞர்களும் இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
நானும் என்னுடைய பாணியில் இந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை எழுதி அதை படமாக்குவதற்காக பல நண்பர்களையும் சந்தித்து வந்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அதாவது சில வருடங்களுக்கு முன்பாகவே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இந்த நாவலை படமாக எடுக்கிறார் என்ற செய்தி நண்பர்கள் மூலமாக எனக்கு தெரிந்தது. அதனாலேயே நான் என்;னுடைய பணியை சற்று விலக்கிவைத்து, விலக்கிவைத்தேன் என்றால் தள்ளிவைத்தேன். முதலில் அவர் படம் எடுத்து முடிக்கட்டும். காரணம் நம்மைவிட அதிகமான அனுபவமும், வாய்ப்புக்களும் அனைத்தும் உள்ளவர் மணிரத்னம் அவர்கள். அவர் எடுத்து முடித்தபின் நம்முடைய பணியை நாம் மீண்டும் எடுப்போம் என்று அதை தள்ளிவைத்தேன்.
இப்பொழுது அவர் இந்த படத்தை எடுக்கும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வரும் செய்தி எடுத்துக்காட்டுகின்றன. ஆனந்தவிகடன் போன்ற பெரிய பத்திரிகைகளிலும் இதை பற்றிய குறிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஆனந்தவிகடனில் இதைப்பற்றி குறிப்பிடும்போது, இந்த பொன்னியில் செல்வன் கதையை பற்றியும், கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றியும் சொல்லும்போது ஒரு பெரிய பிழை ஏற்பட்டிருக்கிறது. அதை நண்பர்கள் கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நானும் கவனித்தேன்.
இந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த நண்பர் ஆனந்தவிகடனில் குறிப்பிடும்போது, கண்டிப்பாக அந்த கதையைப் பற்றி மறந்திருப்பார். அவர் முன்பு எப்போதோ அந்த புத்தகத்தை படித்திருப்பார். மீண்டும் படிப்பதற்கோ இல்லை புரட்டிப்பார்ப்பதற்கோ அவருக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்படி மீண்டும் பொன்னியில் செல்வன் நாவலை படிக்கவேண்டிய அவசியம் இருப்பவர்கள், ஆசைப்படுபவர்கள், ஆனால் நேரமும் வாய்ப்பும் இல்லாதவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி தமிழ் மட்டுமல்ல, மாற்றுமொழிகளில்; கூட நண்பர்கள் நிறையபேர் இந்த பொன்னியில் செல்வனைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியும், கேட்டால் புரியும். ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது. இப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதமாக இந்த பொன்னியின் செல்வன் நாவலை ஒரு தொடர்கதையாக சொல்லலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்.
இது அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்ல, நான் செயல்முறை சினிமா பயிலகம் என்ற அமைப்பின் மூலமாக திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அதன் முதல்படி ஒரு கதையை மறு வாசித்தல் செய்வதுதான். அப்படி கதையை மறுவாசித்தல் செய்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாகவும் இந்த முயற்சியை நான் முன்னெடுக்கிறேன். (இந்த வலைதளத்தில் வாசிப்பதற்காக பதிவேற்றும் பொழுது கல்கியின் எழுத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன்.. ஆனால் கதை சொன்னதற்கு ஏற்ப அங்காங்கே சற்று சுருக்கியிருக்கிறேன்.) என்னுடைய மற்ற திரைப்பட பணிகளுக்கு மத்தியில் இந்த முயற்சியையும் சேர்த்து செய்வதற்கு எனக்கு உதவி செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இந்த முயற்சியை பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய அமரர் கல்கி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post