Sunday, 7 May 2017

திரைப்பட இலக்கியச் சங்கமம் - மாதவிழா- May 2017




திரைப்பட இலக்கியச் சங்கமம் - மாதவிழா- May 2017
(தொடர் பயிற்சித் திட்டம் ஆரம்பவிழா)

நாள்: 14-5-2017 ஞாயிற்றுக்கிழமை

இடம்: மஹாமஹல், 17 அண்ணா மெயின்ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில், சென்னை-78

காலை 10 மணி: குறும்பட ஆய்வரங்கம்
(திரையிடல் மற்றும் ஆய்வுரை) தேர்ந்தெடுத்த படங்கள்

பிற்பகல் 2 மணி: திரையிடல்
படம்- செம்மீன்
(இந்திய அளவில் சிறந்த படத்திற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்ற முதல் தென்னிந்தியமொழி திரைப்படம்)
கருத்தரங்கம்: செம்மீன் முதல் பாகுபலி வரை

மாலை 6 மணி: திரைப்பட ஆய்வரங்கம் - ஏப்ரல் 2017
படங்கள் - .பாண்டி மற்றும் பாகுபலி-2

(குறும்படங்கள், கருத்துரை வழங்குபவர்கள், விருந்தினர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்..)

திரைப்பட, இலக்கிய உலக நணபர்களே வாருங்கள்
அனைவரும் ஒன்றுகூடுவோம்ஒவ்வொருவரும் வெற்றிபெறுவோம்

அன்புடன்

கமலபாலா பா.விஜயன் 

தொடர் பயிற்சித் திட்டம்




அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும்என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது!

தற்பொழுது, திரைத்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும், திரைத்துறையில் மாற்று சிந்தனைகளுக்கு வழிவகுக்கவேண்டும், திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பது போன்ற மேலும் பல எண்ணங்களுடன் நமது சங்கமம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.   

அந்த இலக்குகளை எட்டுவதற்காக, நமது சங்கமத்தின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாக தொடர் பயிற்சித் திட்டம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! இதன்படி திரைத்துறை மற்றும் இலக்கியத்துறை சார்ந்த அனைவரும் ஒன்றுகூடுவதற்கும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், ஒவ்வொருவரும் வெற்றிபெறுவதற்கும் வழிபிறக்கும்!

இந்த திட்டத்தின்படி வாரம் ஒரு சந்திப்பு, மாதம் ஒரு விழா மற்றும் சில சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி திரைத்துறையில் புதியதாக வரும் எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நடைமுறை சினிமாபற்றிய அறிமுகம் செய்யும் சினிமா ஒரு அறிமுகம்போன்ற வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இவை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும், வெற்றியைத் தேடுபவர்களுக்கும் மிகவும் பயன்தருபவைகளாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் பல புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கவும், தொடர்புகளை வளர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். குறும்படங்கள் திரையிடுவதற்கும் அவற்றைப்பற்றி அலசுவதற்கும், அவற்றை உரிய இடங்களில் கொண்டுசேர்ப்பதற்குமான களமாக இந்த திட்டம் அமையும்.

அனைவரும் திரைப்படத்தை ரசிக்க, திரைப்படங்களைப்பற்றி அறிந்துகொள்ள, திரைப்படம் எடுப்பது எப்படி என கற்றுக்கொள்ள, அதற்கான பயிற்சியெடுக்க, வெற்றிபெற உதவியாக இருக்கும்.


இப்படி அனைவருக்கும் பலன் தரக்கூடிய இந்த திட்டத்தில் இணைந்திடுங்கள்..

 
கமலபாலா பா.விஜயன்

9446376497

Tuesday, 18 April 2017

தொழிலாளர்கள்தின சிறப்பு திரைப்படக் கருத்தரங்கம்







திரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக திரைப்படக் கருத்தரங்கம், திரைப்பட அறிமுகம், திரைப்பட ஆய்வரங்கம், குறும்பட ஆய்வரங்கம் மற்றும் திரைப்பட பயிற்சிப்பட்டறைபோன்ற பல தொடர் நிகழ்வுகளை நடத்த இருக்கிறது.

அதன் முதல்படியாக திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.

இது திரைப்படத்தையும் திரைத்துறையையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் முயற்சி!
திரைஉலகம் அறிந்ததும், அறிய மறந்ததும், அறியவேண்டியதுமான கருத்துக்களை எடுத்துரைக்கும் அரங்கம்!
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கான முதல்படி!

தொழிலாளர்களின் திருவிழா நாளில்,
படைப்பாளிகளின் வாழ்வில் ஒரு மாற்றுப்பார்வை!

திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல,
திரைத்துறையில் வாய்ப்பைத் தேடும் மாணவர்களுக்கும்
திரைப்படத்தை நேசிக்கும் அனைவருக்கும்!
  


தொழிலாளர்கள்தின சிறப்பு திரைப்படக் கருத்தரங்கம் 

நாள்: 1 -5-2017     திங்கட்கிழமை

நேரம்: மாலை 6.00 மணி

இடம்:      டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னனை

தலைப்பு: திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி (திரைப்படத்தையும் திரையுலகையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் முயற்சி)


அனைவரும் வாருங்கள்... வாழ்த்துங்கள்… 


Saturday, 15 April 2017

குறும்பட ஆய்வரங்கம்



திரைப்பட இலக்கியச் சங்கமம்
நடத்தும்

6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வு (மே 2017)

குறும்பட ஆய்வரங்கம்

இது விருதுகளை பெறுவதற்கான மேடை மட்டுமல்ல..

உரிய கவுரவத்தை பெற்றுத்தருவதற்கும்திறமைகளை உரிய இடத்தில் கொண்டுசேர்ப்பதற்குமா\ன களம்!

திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுடன் நமது சங்கமத்தின் 6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக குறும்பட ஆய்வரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதல் அரங்கம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. (விழா நடைபெறும் இடம், நாள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.)

இந்த ஆய்வரங்கத்தில் திரையிடுவதற்கான குறும்படங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விழாவில் தங்களது படங்களை திரையிட விரும்புவர்கள் தங்கள் படத்தின் குறுந்தகட்டை (DVD) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பத்தை நேரில் தர தொடர்புகொள்ளவேண்டிய எண்: 9445376497 (கமலபாலா பா.விஜயன்)




(விண்ணப்ப வடிவம்)

திரைப்பட இலக்கியச் சஙகமம்
குறும்பட ஆய்வரங்கத்தில் பங்குபெறுவதற்கான விண்ணப்பம்

குறும்படத்தின் பெயர்:
நிறுவனம்:
தயாரிப்பாளர்:
இயக்குநர்:
எழுத்தாளர்:
----------------
(மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்கள்)

யூட்யூப் லிங்க் (இருந்தால்):
படம் வெளியான ஆண்டு:
இதுவரை பெற்ற விருதுகள்:


திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தும் குறும்பட ஆய்வரங்கத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எங்களது படத்தையும் திரையிட வேண்டுகிறேன். இப்படத்தின் திரையிடல் மற்றும் தொடர்நிகழ்வுகள் சம்பந்தமான முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இந்த சங்கமத்தின் சட்டதிட்டங்களை ஏற்க சம்மதிக்கிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.


தயாரிப்பாளர்/இயக்குநர்

(பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியுடன்)

Friday, 7 April 2017

திரைப்பட ஆய்வரங்கம் ( March 2017) 2nd day



திரைப்பட இலக்கியச் சங்கமம்
மற்றும்
டிஸ்கவரி புக் பேலஸ்
இணைந்து நடத்தும்

திரைப்பட ஆய்வரங்கம் ( March 2017)

நாள்: 8 -4-2017     சனிக்கிழமை

நேரம்: மாலை 6.00 மணி மதல் 9.00 மணி வரை

இடம்:      டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னனை

படங்கள்: கடுகு, அட்டு

வரவேற்பு: வேடியப்பன்

கருத்துரை: பாக்கியம் சங்கர், யுவகிருஷ்ணா, விஜய் மகேந்திரன்

கலந்துரையாடல்: இயக்குனர்கள் விஜய் மில்டன், ரத்தன் லிங்கா


நன்றி: கமலபாலா பா.விஜயன்