Thursday, 31 May 2018

ORU KUPPAIK KATHAI ஒரு குப்பைக் கதை - ஆய்வரங்கம்




திரைப்படஇலக்கியச்சங்கமம்
புதுப்பட அறிமுகம் & ஆய்வரங்கம் 

படம்: ஒரு குப்பைக் கதை  

கலந்து கொள்பவர்கள்: தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலைஞர்கள்..

3-6-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6  மணி

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

அனைவரும் வாருங்கள்அனுமதி இலவசம்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence
New Film Introduction & Analysis

Film: ORU KUPPAIK KATHAI

Participants: Producer, Director and Artists

Date: 3-6-2018  Sunday 6 PM

Venue: Discovery Book Palace, Munusamy Road, KK nagar, Chennai

All are welcome.. Entry free..

With love
KamalabalaB.Vijayan


Saturday, 5 May 2018

கோவை சிறப்புச் சந்திப்பு COIMBATORE SPECIAL MEET – 2




திரைப்படஇலக்கியச்சங்கமம்
கோவை சிறப்புச் சந்திப்பு 2

கலந்துரையாடல் மற்றும் முதல்கட்ட நேர்முகத்தேர்வு

27-5-2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 11.00 மணி
ப்ரோசோன் மால், கோவை


நடிகர்கள்/உதவி எழுத்தாளர்கள்/உதவி இயக்குநர்கள்/தொழில்நுட்பக் கலஞர்கள்/மாணவர்கள் அனைவரும் வாருங்கள்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence

COIMBATORE SPECIAL MEET – 2

Interaction and Preliminary Interview

27-5-2018  Sunday  11.00 AM
Prozon Mall, Coimbatore

Welcome Artistes/Asst.Writers/Asst.Directors/Technicians/Students


With love
KamalabalaB.Vijayan

Tuesday, 10 April 2018

திரைப்பட சிறப்பு வகுப்பு Cinema Special Class: 3+4




திரைப்படஇலக்கியச்சங்கமம்
திரைப்பட சிறப்பு வகுப்பு : 3+4 (கோவை & சென்னை)

தலைப்பு:
சிறிய பட்ஜெட்டில் வெற்றிப்படம் எடுப்பது எப்படி


கோவை: 29-4-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி
சென்னை: 6-5-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி

10.30 AM: வகுப்பு
11.30 AM: கலந்துரையாடல்
12.30 PM: புதிய திட்டங்களுக்கான நடிகர்கள்/உதவி  இயக்குநர்கள்/உதவி எழுத்தாளர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான வழிகாட்டுதல்/தேர்வு
1.30 PM: மதிய உணவு

அனுமதி கட்டணம்: ரூ.300/- மட்டும்
இடம் பற்றிய விபரங்கள் தொலைபேசி/மின்னஞ்சல்/முகநூல் மூலமாக தெரிவிக்கப்படும்

அனைவரும் வாருங்கள்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்




Film Literature Confluence

CINEMA SPECIAL CLASS – 3+4 (Coimbatore & Chennai)

Topic: HOW TO MAKE HIT MOVIES WITH LOW BUDGET

Coimbatore: 29-4-2018  Sunday  10.30 AM
Chennai:        6-5-2018  Sunday  10.30 AM

10.30 AM: Class
11.30 AM: Discussion
12.30 PM: Guidance/Selection of Artistes/Asst. Directors/Asst. Writers/Technicians for the new projects)
1.30 PM:      Lunch

Entry Fee: Rs 300/- only
The details of the venue will be informed by call/email/facebook

All are welcome...

With love
KamalabalaB.Vijayan


Thursday, 29 March 2018

தேநீர் சந்திப்பு – 3-4-18 கோவை




திரைப்பட இலக்கியச் சங்கமம்

நண்பர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு – 3-4-18 கோவை

நண்பர்களே,

நமது சங்கமத்தின் சார்பில் சென்னையில் மட்டுமின்றி மற்ற ஊர்களிலும் நிகழ்வுகளை நடத்த விரும்புகிறோம்.. அதன் ஒரு பகுதியாக கோவையில்
3-4-2018, செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணிக்கு நண்பர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு நடக்க இருக்கிறது.

இடம்: ‘கோவை சினி மாஸ்’ அலுவலகம்,
புதிய கோகுலம், 3/580, 1A1GVL நகர், போஸ்டல் காலனி எதிரில்,

பேரூர் செட்டிபாளையம், கோவை – 641010

(கடந்த முறை என்னை பார்க்க வந்தும் சில நண்பர்களை என்னால் பார்க்க முடியாமல் போனது.. மன்னிக்க வேண்டுகிறேன்.. அவர்களை தற்பொழுது பிரத்தியேகமாக அழைக்கிறேன்.)

இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ள நண்பர்களே வாருங்கள்..   

திரைப்படம், இலக்கியம், கோவையிலேயே திரைப்படம் எடுப்பது எப்படி போன்ற விஷயங்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டியும் கலந்துரையாடலாம்..



அன்புடன்
கமலபாலா பா.விஜயன்

Thursday, 22 March 2018

புரவலர்கள் - சந்தாதாரர்கள் Patrons - Subscribers…




PATRONS

(These are the persons helped me financially now and then to conduct the Film Literature Confluence up to 2016)

Late Mr.Rama Narayanan
Kirubakaran
Sukimurthy
B.J.Rajahravi
Jaffer Mohammed
Shankar @ Vijay Prakash
A.Samy
Faizal
S.S.Manian
Tamilamuthan
Chinnadurai
VPC Ravi
Suresh Mendon


(These are the persons donated to Film Literature Confluence then after...)

Geethanjali Priyadarshini
Venkatesh Chakravarthy
Velkannan
Jayaraj Subramaniam
Rangareddy.M
Venkat Malluri
PonPuvaneswaran
R.Panneerselvam


SUBSCRIBERS

T.R.Udhaya
M.Kannan
S.Balu
Albee Fariah
T.Selva


(All are welcome to join this list…  Donate to make the confluence more bigger and effective.. and to reach the targets of the Confluence..)

Wednesday, 21 March 2018

திரைப்பட சிறப்பு வகுப்பு Cinema Special Class - 2




திரைப்படஇலக்கியச்சங்கமம்
திரைப்பட சிறப்பு வகுப்பு - 2

தலைப்பு:
சிறிய பட்ஜெட்டில் வெற்றிப்படம் எடுப்பது எப்படி, அத்தியாயம்: 2

1-4-2018 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30 மணி

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

5.30: வகுப்பு
7.00: கலந்துரையாடல்

7.30: சங்கமத்தின் புதிய திட்டங்களுக்கான நடிகர்கள்/உதவி  இயக்குநர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு

அனைவரும் வாருங்கள்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence

CINEMA SPECIAL CLASS - 2

Topic: HOW TO MAKE HIT MOVIES WITH LOW BUDGET, Chapter: 2

Date: 1-4-2018  Sunday, 5.30 PM

Venue: Discovery Book Palace, Munusamy Rod, KK nagar, Chennai

5.30: Class
7.00: Discussion

7.30: Selection of Artistes/Asst.Directors/Technicians for the new projects of the Confluence)

All are welcome...

With love
KamalabalaB.Vijayan

*************************************** 


Welcome  ARTISTES/ WRITERS/ DIRECTORS/ PRODUCERS/ TECHNICIANS/ ASSISTANTS/ CRITICS/ STUDENTS

Join as friends and patrons of FILM LITERATURE CONFLUENCE..

To know about Cinema,
From a different point of view..
From the knowledge off the experience and research for many years..


For Story/Screenplay/Dialogues according to the Budget & Stars...  For guidance from Script to Screen, Registration to Release...

For Making films to learn and Learning to make films...   For promoting good films, new creators and producers... 

To make a friendship circle in the film field...    To unite literature and commercial films together..   To publish books.. 

To achieve in film field.. To get chance for your talents.. 

To bring film and film making to your areas..  To Make Hit Movies with Low Budget...

Monday, 5 March 2018

திரைப்பட சிறப்பு வகுப்பு CINEMA SPECIAL CLASS




திரைப்படஇலக்கியச்சங்கமம்
திரைப்பட சிறப்பு வகுப்பு

தலைப்பு:
சிறிய பட்ஜெட்டில் வெற்றிப்படம் எடுப்பது எப்படி, அத்தியாயம்: 1

11-3-2018 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30 மணி

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

அனைவரும் வாருங்கள்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence
CINEMA SPECIAL CLASS

Topic: HOW TO MAKE HIT MOVIES WITH LOW BUDGET, Chapter: 1

Date: 11-3-2018  Sunday, 10.30 AM

Venue: Discovery Book Palace, Munusamy Rod, KK nagar, Chennai

All are welcome..

With love
KamalabalaB.Vijayan



Welcome film students, short film makers and film lovers...
To know and Discuss...
How to make small budget films..
How to combine short films into feature films..


To know..
How to make a Feature Film with low budget..

To know about Cinema,
From a different point of view..
From the knowledge off the experience and research for many years..


Thursday, 22 February 2018

6 ATHIYAYAM meet - video invitation


https://www.youtube.com/edit?o=U&video_id=DGSrk_nZh1c



திரைப்படஇலக்கியச்சங்கமம்
6 அத்தியாயம் - சிறப்பு ஆய்வரங்கம் & கலந்துரையாடல் 

படம்: 6 அத்தியாயம்

கலந்து கொள்பவர்கள்: தயாரிப்பாளர், இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள்..

25-2-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

அனைவரும் வாருங்கள்அனுமதி இலவசம்


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்


Film Literature Confluence
6 Athiyaayam – Special Seminar & Discussion

Film: 6 ATHIYAAYAM

Participants: Producer, Directors and Artists

Date: 25-2-2018  Sunday 10.30 AM

Venue: Discovery Book Palace, Munusamy Rod, KK nagar, Chennai

All are welcome.. Entry free..

With love
KamalabalaB.Vijayan


******************************* 

Welcome film students, short film makers and film lovers...
To know and Discuss...
How to make small budget films..
How to combine short films into feature films..
On the basis of '6 Athiyaayam', the new attempt in that style…

To know..

How to make a Feature Film with the budget of short films..

******************


கலந்துரையாட விரும்புவர்கள் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வரவும்..

Please watch the film in Theater and come for the discussion..

(Thanks to my friend Suresh Mendon for the video invitation)

Wednesday, 21 February 2018

அருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..


(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...)



திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் – ஒரு பார்வை

திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் 17-12-17 ஞாயிறு அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் வெற்றிகரமாக நடைபெற்றது.

திரைப்பட இலக்கிய சங்கமம் ஒவ்வொரு மாதமும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து அதற்கான ஆய்வரங்கத்தை
நடத்துவார்கள்தேர்ந்தெடுக்கும் படங்கள் க்ளாஸ் மாஸ் என இல்லாமல் எல்லா ஜானர்களிலும் இருக்கும்அந்த வரிசையில் இந்த முறையும் நவம்பர் மாதம் வெளியான அறம்தீரன் அதிகாரம் ஒன்றுவிழித்திரு ஆகிய படங்களுக்கான கலந்துரையாடல்
கூட்டம் நடத்தத்தான் திட்டமிடப்பட்டிருந்ததுஆனால் இந்த வாரம் அருவி வெளியாகி, நல்ல படம் என்று பலதரப்பினராலும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், ஒரு நல்ல விஷயமாக, அந்த படத்திற்கு செய்யும் ஒரு உதவியாக,  உடனடியாக இந்த படத்திற்கு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டதுஇதை நிகழ்ச்சியில் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கமலபாலா பா.விஜயன் அவர்கள் நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிவித்தார். நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்இயக்குநர்தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதில் நடித்திருந்த நடிகர்கள் பங்கெடுத்திருந்தனர்நிகழ்வை காணவந்த பலரும் கடைசி வரைக்கும் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு அரங்கம் நிறைந்திருந்தது.

முதல் நிகழ்வாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநரின் அப்பா மற்றும் சகோதரி அவர்களை அழைத்து கவுரவித்தனர். அரங்கமே எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்ததுஅது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும்புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததுஇயக்குநரும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சியால் நெகிழ்ந்து போனார்.

படக்குழுவினரை அறிமுகம் செய்ய, முக்கியமாக அதில் நடித்திருந்த நடிகர்களை அறிமுகம் செய்ய சிறப்பு விருந்தினராக
வந்திருந்தபடத்தில் இயக்குநராகவே நடித்த கவிதா பாரதி அவர்கள் அழைக்கப்பட்டார்அவரும் நடிகர்கள்தொழில்நுட்ப
கலைஞர்கள்இயக்குநர்தயாரிப்பாளர் என அனைவரையும் அறிமுகப்படுத்தினார்பின்னர் தொகுப்பாளரும்
ஒருங்கிணைப்பாளருமான விஜயன் அவர்கள் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார்முதலில் அதில் நடித்த நடிகர்களை
பேச அழைத்தார்.

முதலில் படத்தில் அருவியின் அப்பாவாக நடித்திருந்த திருநாவுக்கரசர் பேசினார்பின்னர் சாமியராக நடித்திருந்த நடிகர் மற்றும் அதில் அரசியல்வாதியாக நடித்திருந்த மதன் பேசினார்கள்மூவரும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்அதன் பிறகு இணை இயக்குநர்மற்றும் எடிட்டரை பேச அழைத்தனர்ஆனால் அவர்கள் பேசவில்லை.

அதைத் தொடர்ந்து படத்தை பற்றிய ஒரு பாராட்டுரையை எழுத்தாளர் அகர முதல்வன் வழங்கினார்அதைத் தொடர்ந்து கேபிள் சங்கர் அவர்கள் படத்திற்கான பாராட்டையும்விமர்சனத்தையும் ஒரு சேர முன்வைத்தார்அதன் பின் மீண்டும் கவிதா பாரதி பேசினார்ஆனால் இம்முறை சிறப்பு விருந்தினராக பேசினார்படத்தை பற்றியும் அதில் நடித்த
அனுபவங்கள் பற்றியும் குறிப்பிட்டு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்.

கதாநாயகி அதிதி பாலன் அதன் பின் பேச அழைக்கப்பட்டார்படத்தில் பேசியது போல நீளமான வசனங்களாக இல்லாமல் அனைவருக்கும் நன்றி’ தெரிவித்து ஒரு வார்த்தையில் தனது உரையை முடித்தார்அடுத்ததாக இயக்குநர் அருண் பேசினார். பேசுவதற்கு சற்று தயங்கினார். அதனால் கலந்துரையாடலாக நிகழ்வு தொடர்ந்ததுஅரங்கத்தில் அமர்ந்திருந்த
நண்பர்கள் கேள்வி கேட்க அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார் இயக்குநர்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசினார்இயக்குநருக்கும் சேர்த்து படத்தை பற்றிய பல விஷயங்களை எடுத்துரைத்தார்.. படங்களுக்கான கதைத்தேர்வு செய்ததுவெளியிடுவதற்கு எவ்வளவு பொறுமை காத்ததுவிளம்பரம் செய்தது என அனைத்து விபரங்களையும்
தெளிவாக விளக்கினார்ஜோக்கர் முதல் அருவி வரையில் படத்திற்காக தங்கள் கம்பனி செய்த விளம்பர செலவுகளை கூட வெளிப்படையாக சொன்னார்.. சமகால திரைப்பட தயாரிப்பு பற்றியும்தயாரிப்பாளர்களின் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்அவரிடமும் நண்பர்கள் கலந்துரையாடினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

அப்படி கேள்வி கேட்கையில் ஒரு நண்பர் இந்த நிகழ்ச்சியை குறித்தும் இதுபோல நிகழ்வுகள் ஏன் பெரிய அளவில் நடப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கையில், திரைப்பட இலக்கிய
சங்கமத்தை பாராட்டியும்இப்படியொரு நிகழ்ச்சி திரைத்துறைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும்இதுபோல நிகழ்ச்சிகளை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதையும்நிகழ்ச்சி நடத்துபவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார்.

அவருடனான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

விசாரணை, ஜோக்கர், அறம் போன்று அவ்வப்போது நல்ல படங்கள் வெளிவரும்போது அந்த படங்களை பாராட்டும் பல நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே நடந்து வருவது அனிவருக்கும் தெரிந்த விழயம் தான்..
ஆனால் இங்கே புதியதாய் வெற்றிபெற்ற இயக்குநரின் பெற்றோரை அழைத்து பாராட்டியது சற்று புதிய அனுபவமாக இருந்ததுமனதிற்கு இதமாகவும் இருந்ததுமேலும் எல்லா பாராட்டு கூட்டங்களிலும் இயக்குநர் மற்றும் நடிகர்களை தான் அனைவரும் அழைப்பார்கள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட.. ஆனால் திரைப்பட இலக்கிய சங்கமத்தில் மட்டும் தான்
இப்படி நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் அழைத்து சிறப்பித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் அதுதான்.
மீண்டும் இதுபோல் ஒரு நல்ல படத்துடன் இந்த சங்கமத்தில் சந்திக்க புதுப்படம் எடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும், தொடர்ந்து நடத்த இந்த சங்கமத்திற்கும் வாழ்த்துக்கள்..

விஜிலா விஜயன்



17-12-17 அன்று நடந்த நிகழ்வில் போடோக்களையும் எடுத்து, நிகழ்வை பற்றிய ஒரு ரிப்போர்ட்டையும் அளித்த விஜிலாவுக்கு நன்றி..
நிகழ்வை படம் பிடித்து தந்த (சற்று தாமதமாக தந்தாலும்..) peoples consent network நந்தகுமாருக்கும் குழுவினருக்கும் நன்றி..
(அவர்களுக்கும் இது ஆரம்பம் தான்.. அதனாலேயே இந்த தாமதம்.. அதுவுமில்லாமல் எஸ்.ஆர்.பிரபு பேசுவது முழுமையாக பதிவாகவில்லை.. பேட்டரி தீர்ந்துவிட்டதாம்.. அதையும் மன்னிப்போம்.. குறிப்பாக பிரபு சாரை மன்னிக்கும்படி கேட்டுகொள்கிறேன்..)

-- கமலபாலா பா.விஜயன்