Sunday 30 August 2015

இலங்கைத் தமிழ் குறும்படங்கள்



இன்று டிஸ்கவரி புக் பாலசில நடந்த இலங்கைத் தமிழ் குறும்படங்கள் திரையிடளுக்குச் சென்றிருந்தேன். உண்மையிலேயே அந்தப் படங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். கடந்த வாரம் பனுவலில் நடந்த திரையிடலுக்கு நண்பர் கவிதா பாரதி அழைத்திருந்தும் செல்ல முடியவில்லை. அந்த வருத்தம் இன்று தீர்ந்தது,
அட்சரம் என்ற தலைப்பில் தொகுத்த ஆறு படங்கள் திரையிடப்பட்டன. ஆரம்பகால படிப்பாளிகள் எடுத்த் படங்கள் என்ற முறையில் இவற்றில் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து குற்றம் கூறி விமர்சனம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக இவற்றை ஒரு அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், இந்த படைப்பாளிகள் அந்த மழலை நிலையை எல்லாம் தாண்டிவிட்டார்கள்.
உண்மையைச்சொன்னால் இங்கு, தமிழ்நாட்டில் எடுக்கப்படும்  குறும்படங்களுக்கு சற்றும் குறையாத தரத்தில் தான் இந்த படங்கள் இருக்கிறது என்று மட்டும் அல்ல, நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று இங்கு சிலர் திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைப்பதற்கு ஒரு வழி என்ற முறையில் எடுக்கும் குறும்படங்களை விட இந்த படங்கள் மிகவும் அழகானவைதான்.
அரசியல். பொருளாதார. சமூக சூழ்நிலைகள் காரணமாக, அவர்களுடைய வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் இவை பிரதிபலிக்கவில்லை என்றாலும், ஆரம்ப கட்டம் என்ற முறையில் அவர்களுடைய வாழ்வியல் சோகங்கள் இந்த படங்களில் இழயோடியிருப்பதை உணரமுடிகிறது,
திரு ட்ராடஸ்கி மருது அவர்கள் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு முன்னரை தந்தது இந்த படங்களை இன்னொரு கோணத்தில் ரசிக்க மேலும் உதவியது. அவருக்கு நன்றி.
இந்த படங்களை திரையிட்ட அமுதன் அவர்களுக்கும் நன்றி.

இந்த படங்களில் பாரறிய அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post