Friday 16 June 2017

புதுப்பட அறிமுகம் & ஆய்வரங்கம் New Film Introduction & Analysis Meet



திரைப்பட இலக்கியச் சங்கமம் புதுப்பட அறிமுகம் & ஆய்வரங்கம்
(நல்ல படங்களை ஊக்குவிக்கும் முயற்சி)

நாள்: 1-7-2017 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம்: மஹாமஹல், 17 அண்ணா மெயின்ரோடு, கணேஷ் பவன் அருகில், எம்.ஜி.ஆர் நகர், சென்னை-78

அறிமுகம்: இந்த வாரம் வெளிவந்த படங்கள்
ஆய்வரங்கம்: ஒரு கிடாயின் கருணை மனு
கலந்துரையாடல்: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர்

திரைப்பட, இலக்கிய உலக நணபர்களே வாருங்கள்
படைப்புகளை விமர்சிப்போம்… படைப்பாளிகளை பாராட்டுவோம்..

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence – New Film Introduction & Analysis Meet
(An attempt to promote good films)

Date: 1-7-2017 Saturday 6 PM

Venue: Maha Mahal, 17 Anna Main Road, Near Ganesh Bhavan, MGR Nagar, Chennai-78

Introduction: The films released in this week
Analysis: Oru Kitayin Karunaimanu
Discussion: The director and crew of ‘Oru Kitayin Karunaimanu’  


Come on friends of Film and Literature world..
Let us criticize the creations.. and appreciate the creators..

With love

Kamalabala B.Vijayan

Tuesday 13 June 2017

Postponement

Because of unexpected circumstances, I am cancelling all the programs to start freshly soon

Thursday 8 June 2017

New Film Introduction & Analysis Meet



திரைப்பட இலக்கியச் சங்கமம் புதுப்பட அறிமுகம் & ஆய்வரங்கம்
(வாரம் ஒரு படத்தை ஊக்குவிக்கும் முயற்சி)

நாள்: 17-6-2017 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம்: மஹாமஹல், 17 அண்ணா மெயின்ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், கணேஷ் பவன் அருகில், சென்னை-78

படங்கள்: தொண்டன், ஒரு கிடாயின் கருணை மனு

கலந்துரையாடல்: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர்.

திரைப்பட, இலக்கிய உலக நணபர்களே வாருங்கள்
படைப்புகளை விமர்சிப்போம்… படைப்பாளிகளை பாராட்டுவோம்..

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence – New Film Introduction & Analysis Meet
(An attempt to promote a film per week)

Date: 17-6-2017 Saturday 6 PM

Venue: Maha Mahal, 17 Anna Main Road, Near MGR Nagar Ganesh Bhavan, Chennai-78

Films: Thondan, Oru Kitayin Karunai Manu

Discussion: With the director and crew of ‘Oru Kitayin Karunai Manu’

Come on friends of Film and Literature world..
Let us criticize the films.. appreciate the creators..

With love
Kamalabala B.Vijayan



Saturday 3 June 2017

Work.. Service.. Need..






Film Literature Confluence has been working as an attempt to make a bridge between film and literature worlds, especially to make a contact between the persons working in film field and literary people. It had been became successful up to a limit.
Still I couldn’t involve in this effort fulltime and couldn’t bring it to the next level. I am conducting this only because of my passion and as a service, but didn’t develop it to a movement or institute. My works related to films are the reason for that! 
When allocate time for those works, this service becomes slow. When allocate time to the service, the work had got delayed. Now only I came to understand how to unite both of them and going in a same pace.
The service should be a part of the work or the work should be a part of the service. Along with that, the works of both should be shared among some friends. Now I am going to do this.
The next step of my job is to co-ordinate some selected friends for making the story ‘Ponniyin Selvan’ into a film. (This is dream, hard work, experience and clarity got from these for many years). This work has to be done very carefully. For that I have to find a few assistants. And work together in full pace.
The next step of my service is to join all the friends and well-wishers in to the ‘Cine Artists Circle’ commenced by our confluence. Some friends should be appointed to co-ordinate the continuous programs and an Advisory committee should be made from the friends and well-wishers to select the films, short films and design the programs.
For that, only one thing is needed. I have to meet the friends and film lovers as a first step. If I could meet the persons who really had interest in the activities of this confluence, I could select the persons who are ready to help and interested to work, then I can concentrate on my job, even when conducting the programs successfully.
Many friends are used to come to our confluence meets. And congratulate me! But, I don’t understand who will come and when will come every time. I couldn’t find fully whether they are coming by real interest, for entertainment or time pass, or only for the sake of my invitation. I also didn’t care about all these up to this moment!  
But, these questions are arising in the mind when think of developing the confluence to the next level and think of conducting the programs of films and short film continuously.
More than that, to make the friends think this confluence is useful for them, to make them come to the program even by inviting through a single sms or email, they should feel that they are also a part of this set up.
Only for that I am inviting all the friends to join the Cine Artists Circle. When you join, make your friends also to join this..

Let us join together.. and win together..

வேலை.. சேவை.. தேவை..








திரைப்பட உலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஒரு பாலம் அமைக்கும் சிறு  முயற்சியாக, முக்கியமாக திரைப்படத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு நல்ல தொடர்பினை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகத்தான் திரைப்பட இலக்கியச் சங்கமம் செயல்பட்டு வருகிறது. அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுவருகிறது.
இருப்பினும் நினைத்தபடி முழுமூச்சாக அதில் என்னால் ஈடுபடவும், அதை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லவும் முடியவில்லை. இதை ஒரு சேவையாக, என்னுடைய ஆர்வத்தினால் மட்டுமே நடத்திவருகிறேனே தவிர, இதை முறையாக ஒரு இயக்கமாகவோ அல்லது நிறுவனமாகவோ நான் இதுவரை வளர்க்கவில்லை. என்னுடைய திரைப்படப் பணிகள்தான் இதற்கு காரணம்.
அந்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்கும்போது இந்த சேவை சற்று வேகம் குறைகிறது. இந்த சேவைக்காக சற்று நேரம் ஒதுக்கும்போது வேலைகள் தாமதமாகின்றன. இவை இரண்டையும் இணைத்து ஒரே வேகத்தில் செல்வது எப்படி என்று தற்பொழுதுதான் தெரியவருகிறது.
சேவையை வேலையின் ஒரு பகுதியாக மாற்றவேண்டும், அல்லது வேலையை சேவையின் ஒரு பகுதியாக மாற்றவேண்டும். அத்துடன் இரண்டிற்குமான பணிகளை நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதைத்தான் நான் இப்பொழுது செய்ய உள்ளேன்.
என்னுடைய வேலையில் அடுத்தபடி பொன்னியின் செல்வன்கதையை படமாக்க தேவையான நண்பர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஒருங்கிணைப்பது. (இது பல வருட கனவு, உழைப்பு, அனுபவம், இவை தந்த தெளிவு). இந்த பணியை மிகவும் கவனமாக செய்யவேண்டியுள்ளது. அதற்காக எனக்கென்று சில உதவியாளர்களை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிணைந்து முழுவேகத்துடன் பணியாற்றவேண்டும்.
சேவையின் அடுத்தகட்டம், சங்கமத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திரைக் கலைஞர்கள் வட்டத்தில்நண்பர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் இணைப்பது. தொடர்ந்து வரும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க சில நண்பர்களை பணியமர்த்தவேண்டும். திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்வு மற்றும் நிகழ்வின் வடிவமைப்பு பற்றி கருத்துக்களை பரிமாற நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளிலிருந்து ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்கவேண்டும்.
அதற்கு தற்பொழுது தேவை ஒரே விஷயம்தான். நண்பர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் முதலில் சந்திக்க வேண்டும். உண்மையில் இந்த சங்கமத்தின் மீது பற்றுகொண்டவர்களை சந்திக்க முடிந்தால், உதவி செய்பவர்களையும் பணியாற்ற ஆர்வம் கொண்டவர்களையும் தேர்வு செய்துவிட்டால், பிறகு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியபடியே என் வேலையில் கவனம் செலுத்த முடியும்.
நண்பர்கள் பலரும் திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்கு வருவதுண்டு. பாராட்டுவதுண்டு. ஆனால் யார் யார் எப்பொழுதெல்லாம் வருவார்கள் என்றே புரியவில்லை. உண்மையில் ஆர்வமாக இருக்கிறார்களா, பொழுதுபோக்கிற்காக வருகிறார்களா, என்னுடைய அழைப்பிற்காக மட்டுமே வருகிறார்களா என்பது போன்ற விஷயங்கள் முழுமையாக இதுவரை புலப்படவில்லை. நானும் அதைப்பற்றியெல்லாம் யோசித்ததுமில்லை!
ஆனால் தற்பொழுது சங்கமத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்க்க வேண்டும், தொடர்ந்து திரைப்படம் மற்றும் குறும்படம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று முயற்சி செய்யும்போதுதான் இந்த கேள்விகள் மனதிற்குள் எழ ஆரம்பித்துள்ளன.
அதுமட்டுமின்றி நண்பர்கள் இந்த சங்கமத்தை தங்களுடைய நலன் சார்ந்தது என்று நினைக்க வேண்டுமென்றால், ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அழைத்தாலும் நிகழ்வுகளுக்கு வரவேண்டும் என்றால் தாங்களும் இந்த அமைப்பில் ஒரு அங்கமாக இருப்பதாக அவர்கள் மனதில் தோன்ற வேண்டும்.
அதன்பொருட்டுதான் தற்பொழுது திரைக்கலைஞர்கள் வட்டத்தில் நண்பர்கள் அனைவரையும் இணைந்திட அழைக்கிறேன். நீங்கள் இணைவதோடு உங்கள் நண்பர்ளையும் இணைத்திடுங்கள்..

அனைவரும் ஒன்று கூடலாம்ஒவ்வொருவரும் வெற்றிபெறலாம்…    

Thursday 1 June 2017

A Request.. ஒரு விண்ணப்பம்...





நண்பர்களே..
அடுத்த குறும்பட ஆய்வரங்கம் (மாதம் ஒரு முறை) மற்றும் திரைப்பட அறிமுக அரங்கம் (வாரம் ஒரு முறை) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன் நண்பர்கள் அனைவரையும் திரைக் கலைஞர்கள் வட்டத்தில் இணைக்கவேண்டியுள்ளது..
இந்த நிகழ்வுகளுக்கு யாரையெல்லாம் அழைப்பது, அப்படி அழைப்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய இது மிகவும் அவசியமாக இருக்கிறது..
அதனால் நண்பர்களே, உடனே இந்த நட்பு வட்டத்தில் இணைந்திடுங்கள்..
உங்கள் நண்பர்களையும் இணைத்திடுங்கள்..
மேலும் விபரங்கள் அடுத்த பதிவுகளில்..

Friends…
All preparations are going on to conduct the next Short Film Analysis Meet (Once in a month) and Film Introduction Meet (Once in a week). Along with that, all the friends should be enrolled in the Cine Artists Circle.
This is very much required to decide the matters like ‘Whom to be invited?’ and ‘How to be invited?’
So friends, please join this friendship circle immediately and make your friends also to join..

More details in coming posts