Sunday 15 January 2017

பஷீர் - ஒரு வேண்டுகோள்...


https://www.youtube.com/watch?v=3ngiip7REj0




நண்பர்களே, என்னுடைய படைப்புகளின் வழியே பஷீர்என்ற நூல் இம்முறை சென்னை புத்தக விழாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்த நூல் புத்தகவிழாவில் 134, 135, 215, 216-ம் எண் அரங்கில் கிடைக்கும்.

இதை தொடர்ந்து, பதிப்பிப்பதற்கு தயாராக நான் எழுதி வைத்திருக்கும் நூல்கள்:

கேரளத்தில் ஒரு ஆப்பிரிக்கா
கலீல் ஜிப்ரானின் கதைகள்
பத்மராஜனின் 2 திரைக்கதைகள்
சேகுவேரா- புரட்சியின் முகம்
காரல் மார்க்சின் கவிதைகள் (திருத்தப்பட்ட மறு பதிப்பு)
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்- திரைக்கதை வடிவம்
பொன்னியின் செல்வன்- திரைக்கதை
திருக்குறள் எளியகுறள் (திருத்தப்பட்ட மறுபதிப்பு)
Thirukkural Eliyakural
மற்றும்
மூன்று புதிய நாவல்கள்

திரைத்துறையில் பணியாற்றிவரும் நான் அந்த பணிகளிலிருந்து சற்று விடுபட்டு திருக்குறளுக்கு குறள் வடிவில் உரை எழுத ஆரம்பித்து, அதுவே இலக்கியத் துறைக்கு என்னை முழுமையாக இழுத்துவிட, ஒரே மூச்சில் இத்தனை நூல்களை (மொழிபெயர்ப்பு, தொகுப்பு மற்றும் புதுபடைப்பு) எழுதிவிட்டேன்.. தற்பொழுது திரும்பி பார்க்கையில் அதற்காக எடுத்துக்கொண்ட காலம் என்பது பல வருடங்கள்..
இவற்றில் நான்கு புத்தகங்கள் கடந்த வருட சென்னை புத்தகவிழாவிற்கு முன்பே பிழைதிருத்தம் முடிந்து பதிப்பிக்க இருந்தவை. சென்னை வெள்ளம் மற்றும் பல காரணங்களால் அவை பதிப்பிக்கப்படாமல் போயின. அவற்றில் படைப்புகளின் வழியே பஷீர்என்ற புத்தகம் மட்டும்தான் இந்த வருடம் வெளிவந்திருக்கிறது.
மற்ற புத்தகங்கள் உரியநேரத்தில் பதிப்பிக்கப்படாமல் போனதிற்கு மோடியின் தாக்குதல்மட்டுமல்ல, நான் மாற்று வழிகளை சிந்திக்கவில்லை என்பதும் ஒரு காரணம்தான். மீண்டும் திரைப்படம் சார்ந்த பணிகளை ஆரம்பித்ததும், தொடர்ந்து திரைப்பட இலக்கியச் சங்கமம்நடத்துவதற்காக நேரத்தை செலவிட்டு வந்ததும் கூட காரணங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
தற்பொழுது திரைத்துறையில் கவனம் செலுத்தியபடியே ஒரு எழுத்தாளனாக, அடுத்தகட்டமாக, நான் செய்யவேண்டிய பணிகளைப்பற்றி யோசிக்கும் பொழுது பல சிந்தனைகளும் கேள்விகளும் மனதிற்குள் எழுகின்றன. அவற்றிற்கு விடை இந்த வருடம் வெளிவந்திருக்கும் என்னுடைய படைப்புகளின் வழியே பஷீர்என்ற நூலுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் ஆதரவில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அதனால் நண்பர்களே, இந்த நூலை படித்து உங்கள் கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் சொல்லுங்கள்.. முடிந்தவரை இந்த நூலை வாங்கி ஆதரவு தாருங்கள்.. (அதுதான் இந்நூலின் பதிப்பகத்தாருக்கும் ஆதரவாக இருக்கும்.) ஒரு எழுத்தாளனாக நான் அடுத்து செய்யவேண்டிய பணிகளை, அவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதை, உங்கள் ஆதரவும் மதிப்பீடுகளும் எனக்கு உணர்த்திவிடும்..
(மறக்க வேண்டாம், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள இந்த நூல் புத்தகவிழாவில் 134, 135, 215, 216-ம் எண் அரங்கில் கிடைக்கும். இன்றுமுதல் மாலை நேரத்தில் நானும் புத்தக விழாவில் இருப்பேன். நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்…)

     

Thursday 5 January 2017

6-வது ஆண்டுவிழா விண்ணப்பம்





நண்பர்களே,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, மாதந்தோறும் நடைபெற்றுவரும்  நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தற்பொழுது ஆறாவது ஆண்டுவிழாவை காண இருக்கிறது.
இந்த ஆண்டுவிழாவில் 2016-ம் ஆண்டில் வெளிவந்த படங்களிலிருந்து மாதந்திர சங்கமத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட இருக்கின்றனர். 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலும் சிறப்பிக்கப்பட இருக்கின்றன.
நண்பர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் உதவியைப் பொருத்து இவ்விழாவிற்கான தேதி, அரங்கம், அழைப்பிதழ் வடிவம், நிகழ்ச்சி நிரல் போன்றவை மாற்றியமைக்கப்படும்.
இந்த முயற்சியை வெற்றிபெறச்செய்ய புரவலர்களாகவும் விளம்பரதாரர்களாகவும் உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்..

--- கமலபாலா பா.விஜயன்

2016-ம் வருடத்தில் நமது மாதாந்திர சங்கமத்திற்காக (மாதம் இரண்டு) தேர்ந்தெடுத்த படங்கள்

அழகுக்குட்டி செல்லம்
கதகளி
ரஜினி முருகன்
தாரை தப்பட்டை
இறுதிச்சுற்று
விசாரணை
சேதுபதி
ஆறாது சினம்
பிச்சைக்காரன்
தோழா
உறியடி
ஒருநாள் கூத்து
அம்மா கணக்கு
ராஜா மந்திரி
அப்பா
கபாலி
ஜோக்கர்
தர்மதுரை
குற்றமே தண்டனை
ஆண்டவன் கட்டளை
அம்மணி
கொடி
மாவீரன் கிட்டு
துருவங்கள் பதினாறு

(சிறப்பு சேர்க்கை: தங்கல்)

உதவித் தொகையை நேரிலோ அல்லது ‘B.Vijayan, SB a/c no: 602852861, Indian Bank, Saligramam Branch, IFSC code IDIB000S082’ என்ற வங்கிகணக்கிலோ செலுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு:
Call: 09445376497
Mail: filmfriendship@gmail.com
Visit: www.filmfriendship.com
          Facebook/Kamalabala B Vijayan

Monday 2 January 2017

பொழுதுபோக்கின் வரலாறு 2





மாற்று எண்ணங்கள்! புதிய கண்டுபிடிப்புகள்!
இவைதான் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் பல துறைகளுக்கு வழிகளை திறந்துவிட்டது.
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர, புதிய புதிய கருவிகள் உருவாக, கலைகளும் இலக்கியங்களும் அந்த கருவிகளை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி மேலும் பல பரிணாமங்களை கண்ட.
குகை ஓவியங்கள், தெருக்கூத்து, ஓலைச்சுவடி என ஆரம்பித்து சிற்பக்கலை, மேடை நாடகம், அச்சிட்ட புத்தகம் என வளர ஆரம்பித்த.
இவை அனைத்துமே மனிதனின் பொழுது போக்குக்காகத்தான் உருவானது. இருப்பினும் சில ஞானிகள் தாங்கள் மனிதகுலத்திற்கு சொல்ல நினைத்ததை எளிமையாக சொல்ல இந்த பொழுதுபோக்கு சாதனங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இவற்றில் புதிய செய்திகளை உள்ளடக்கி அழகுடன் சொல்ல, அவை மேலும் பயனுள்ளதாக மாறியது. காவியங்களும் புராணங்களும் உருவாக ஆரம்பித்தன.
அவற்றில் அழகும் உள்ளடக்கமும் வலுப்பெற, பல இதிகாசங்கள் உருவாகின. இந்த காவியங்களும் புராணங்களும் இதிகாசங்களும் வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி மனித சமுதாயங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
அதன் தொடர்ச்சியாக வந்தவைதான் கூத்து, நாடகங்கள் போன்ற வடிவங்கள். இவற்றில் சில நாடகங்கள் பல சமுதாய புரட்சிகளுக்கும் உறுதுணையாக வளர்ந்தன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் இருந்தது. மற்ற கலை இலக்கிய வடிவங்களைவிட நாடகங்கள் மூலமாக மனிதர்கள் மனிதர்களுடன் நேரடியாகவும், விரைவாகவும் தங்கள் எண்ணங்களை பரிமாற முடிந்தது. வசனம், நடிப்பு, அரங்க அமைப்பு போன்றவை கூட இதில் முக்கிய பங்கு வகித்ததை அறிஞர்கள் புரிந்து கொண்டனர். அவற்றை மேலும் திறமையாக பயன்படுத்த ஆரம்பித்தனர். நாடகம் என்ற இலக்கியத்தை நடனம் போன்ற கலைகளுடன் இணைத்து சிறந்த காட்சி ஊடகமாக மாற்றினார்கள்.
நாடகங்கள் உலகமெங்கம் வெகுவேகமாக வளர்ந்தன. பொழுதுபோக்கு என்ற பெயரிலேயே இவை சமூக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதை உணர்ந்துகொண்ட அறிஞர்கள் நாடகங்களை மென்மேலும் மெருகேற்ற, அவற்றில் விஞ்ஞான, தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதற்கிடையில்தான் ஒளியை பதிவு செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. கேமராவும் சினிமாட்டோகிராபியும் படிப்படியாக வளர்ந்த.
ஆரம்பத்தில் சிறு சிறு சித்திரங்களையும், இயற்கை அழகையும் கேமரா வழியாக பதிவு செய்ய ஆரம்பித்தவர்கள் பிறகு மனிதனின் அசைவுகளை பதிவு செய்ய அரம்பித்தனர். அதில் வெற்றி பெற்றதும் நாடகங்களை படமாக பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சினிமாவளர ஆரம்பித்தது!
இலக்கியங்களை நாடகங்களாக மாற்றி, அவற்றை பதிவு செய்வதற்காகவே நடித்துக்காட்ட ஆரம்பித்தனர். அப்படி படமாக்கிய படங்களைக் காண மக்கள் ஆர்வம் காட்டினார்கள். நாடகங்களை பார்ப்பதைவிட படங்களை பார்ப்பதில் ஒரு புதிய சுகத்தை அனுபவித்தார்கள்.
சினிமாமக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறியது.
புராணங்களை தொடர்ந்து மற்ற எழுத்துக்களும் படமாக்கப்பட்ட. என்றும் புதுமைகளை விரும்பும் மனிதனுக்கு புராணங்கள் மட்டும் பார்த்தால் போதாது என்று தோன்றியது.
புதியதாக படம் எடுப்பதற்காகவே நாடகங்கள் எழுத ஆரம்பித்தனர். திரைப்படத்திற்காக புது புது உக்திகளை கையாண்டு, வசனங்களை விட காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பிக்க, திரைக்கதை என்ற இலக்கியம் வளர ஆரம்பித்தது.
செய்திப்படங்கள், குறும்படங்கள், கதைப்படங்கள் என சினிமா வளர்ந்து விரிந்தது.
இந்த படங்களைக் காண மக்கள் காசுகொடுக்க முன் வர ஆரம்பித்தனர். சினிமா என்ற அதிசயத்தைவியாபாரமாக்கி திரைப்படத்தின் முன்னோடிகள் சம்பாதிக்க ஆரம்பித்தனர். அதைக்கண்ட பலரும் இந்த துறைக்கு வர ஆரம்பித்தனர்.
சினிமாஎன்பது ஒரு வர்த்தகமாக வளர்ந்தது. மற்ற அனைத்து கலைகளையும் இலக்கியங்களையும் தாண்டி பணம் சம்பாதித்து தரும் ஒரு துறையாக மாறியது.
தொடர்ந்து வந்த காலங்களில் கதைப்படங்கள் குறும்படங்களையும் செய்திப்படங்களையும் பின்னுக்கு தள்ளி பெறும் வர்த்தகமாக வளர, சினிமா என்றால் கதைப்படங்கள்என்ற வர்த்தகப்படங்கள்தான் என்ற நிலை பரவலாக உருவாகியது.

திரைப்படத்தை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சியும் சினிமாவின் குழந்தையாகத்தான் வளர்ந்தது.