Thursday 25 July 2013

invitation for expo

Dear friends

I got a few passes for
the 7th International Show for Production - Broadcast - Theatre - Professional Sound & Light Expo Industry, on 26,27 and 28th July 2013 at Chennai Nandampakkam Trade centre. For more details visit: www.cinematoday.in

Interested friends, please contact me for the passes

Vijayan
9445376497

Sunday 21 July 2013

Again a break...

Dear friends

sorry for the break again.
After conducting the 11th film literature confluence successfully, i had to concentrate on some family works and then fell sick for the last week. In the meantime think of many practical matters related to this site and decided to redesign the pages and posts.
That works are going now and I hope to restart the blogging very soon

Saturday 13 July 2013

Today


This is to remind you friends,

11th Film Literature Confluence

Today
6 PM
at
Music Union Hall, Vadapalani
Chennai
Near Kamala Theatre

Friday 12 July 2013

Thursday 11 July 2013

Invitation to Colleges


Dear sir/Madam,
As an attempt to unite film and literature fields together, and to make a friendship circle among the film people, we are conducting Film Literature Confluence () for the last two years.
We conducted the confluences ten times so far. And the 11th Film Literature Confluence is going to be conducted on 13-7-13, Saturday, at 6 pm (venue: Music Union Hall, Arcot Road, Vadapalani, near Kamala Theatre).
This confluence will be very useful for the students, especially viscom students. This event will give the students an exposure to the practical media and give contact with the film people.
So please forward this invitation to your students as they can use this opportunity.

With regards
Vijayan.B

(For Film Literature Confluence)

சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு


நான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்படத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தி வருகின்றேன். இதில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறையைச் சார்ந்த பிரமுகர்களும் நண்பர்களும் பங்குபெற்று வருகின்றனர்.
     கடந்த இரண்டு வருடங்களில் நான் இந்த சங்கமத்தை பத்து முறை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன்.
இந்த முறை வரும் சனிக்கிழமை மாலை நடக்க இருக்கும் சங்கமத்தில் 2013 பிப்ரவரி 14 முதல் ஜூன் 30 வரையில் (கடந்த சங்கமம் முதல் இந்த சங்கமம் வரையில்) வெளியான தமிழ் படங்கள் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.  இந்த காலகட்டத்தில் மொத்தம் 62 படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன! இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் முழுவதுமாக விவாதிப்பது கடினம் என்பது மட்டுமல்ல தேவையற்றதும் கூட. அதனால் இந்த சங்கமத்தில் விவாதிப்பதற்காக சில படங்களை மட்டும் தேர்ந்தேடுத்த்துள்ளேன்.

தேர்ந்தெடுத்த படங்கள்:

வனயுத்தம்
ஹரிதாஸ்
பரதேசி
சென்னையில் ஒரு நாள்
உதயம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா
குட்டிப்புலி
நேரம்
எதிர்நீச்சல்
சூதுகவ்வும்
தில்லு முல்லு மற்றும்
தீயா வேலை செய்யணும் குமாரு.

இந்த படங்களின் படைப்பாளிகளே, தயாரிப்பாளர்களே ..
இந்த நிகழ்வில் உங்களுடைய படத்தைப்பற்றி பேச இருப்பதால் நீங்களும் இந்த சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன்.
இதையே எங்கள் அழைப்பிதழாக ஏற்று இந்த சங்கமத்தில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

என்னுடைய தொலைபேசி எண் 9445376497. மேலும் விபரங்களுக்கு www.filmfriendship.com

Wednesday 10 July 2013

2013 பிப்ரவரி 14 முதல் ஜூன் 30 வரையில் வெளியான தமிழ் படங்கள்


நேசம் நேசப்படும்
சில்லுன்னு ஒரு சந்திப்பு
வனயுத்தம்
அமீரின் ஆதி பகவன்
அறியாதவன் புரியாதவன்
ஹரிதாஸ்
பாட்டி
ஆண்டவபெருமால்
சுடச்சுட
சந்தமாமா
லொள்ளுதாதா பராக் பராக்
நான்காம் பிறை
வெள்ளச்சி
மதில்மேல் பூனை
ஒன்பதில குரு
பேசாமல் பேசினால்
சுண்டாட்டம்
கருடப்பார்வை
கரும்புள்ளி
பரதேசி
வத்திக்குச்சி
கண் பேசும் வார்த்தைகள்
கந்தா
கருப்பம்பட்டி
மறந்தேன் மன்னித்தேன்
நானும் என் ஜமுனாவும்
அழகன் அழகி
சென்னையில் ஒரு நாள்
பிப்ரவரி 31
கேடி பில்லா கில்லாடி ரங்கா
கீரிப்புள்ள
சேட்டை
வெக்கத்தை கேட்டால் என்ன தருவாய்
மறுவிசாரணை
நினைவுகள் அழிவதில்லை
மாமன் மச்சான்
உனக்கு 20 எனக்கு 40
கெளரவம்
இரு கில்லாடிகள்
திருமதி தமிழ்
உதயம்
நான் ராஜாவாக போகிறேன்
ஒருவர் மீது இருவர் சாய்ந்து
யாருடா மகேஷ்
எதிர்நீச்சல்
மூன்று பேர் மூன்று காதல்
சூது கவ்வும்
நாகராஜசோழன் MA MLA
நேரம்
மாசாணி
கல்லாப்பெட்டி
கோக்டைல்
குட்டிப்புலி
இசக்கி
அந்தரங்கம்
யமுனா
சொல்லமாட்டேன்
தீயா வேல செய்யணும் குமாரு
தில்லுமுல்லு
தீக்குளிக்கும் பச்சைமரம்
அன்னக்கொடி

துள்ளிவிளையாடு

Tuesday 9 July 2013

நம்பிக்கை- தன்னம்பிக்கை


நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் ஆரம்பிக்கும்போது முதலில் சங்கமம் நடத்துவதற்கான மண்டபத்தையும் தேதியையும் நிச்சயித்தபின் தான் அனைவரையும் அழைக்க ஆரம்பித்தேன். அப்போது சிறப்பு விருந்தினர்களாக யாரையுமே நான் அழைத்திருக்கவில்லை.
அனால் என்னுடைய இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்று திரு பாலுமகேந்திரா அவர்கள் தானாகவே முன்வந்து இந்த சங்கமத்தை சிறப்பித்தார்கள்.
அதற்குப்பின் பல பிரமுகர்களை தொடர்ந்து நடந்த  சங்கமங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தேன். அவர்களும் வந்து சிறப்பித்தார்கள். அதிலும் பலரும் நான் தொலைப்பேசி வழியாக அழைத்ததுமே வண்டு சிறப்பித்தார்கள்.
அந்த சமயத்தில் தான் கடந்த வாரம் பதினோராவது சங்கமத்திற்கு இயக்குனர் திரு விகரமன் அவர்களை அழைக்க சென்றிருந்தேன். அவரும் விழாவிற்கு வர ஒப்புக்கொண்டார். ஆனால் குறிப்பிட்ட நாளில் ஒரு வேளை வெளியூர் செல்ல வேண்டிவருமோ என தயங்கினார். அழைப்பிதழில் பெயர் போடவேண்டம் நான் வருகிறேன் என்றார். அதைக்கேட்டு நான் சற்று தயங்க, உடனே அவர் “கல்யாணத்திற்கு அழைக்கும்போது யாரும் விருந்தினார்கள் பெயர் போடுவதில்லை, அதுபோல நீங்களும் ஒரு நல்ல விஷயத்தை செய்கிறீர்கள் அதில் பெயர் போடவேண்டிய அவசியமில்லை, நானே வருகிறேன் என்றார்!
  திரையுலகில் நட்புக்கு புது இலக்கணம் (பது வசந்தம்) படைத்த விக்ரமன் அவர்கள் வந்தால் முதன் முதலாக நடக்கவிருக்கும் திரைப்படத் தொழமைச் சங்ககமத்திற்கு பொருத்தமாக இருக்குமே என்றுதான் அவரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்ததைகள் தன்னம்பிக்கைக்கு புது இலக்கணமாக தெரிந்தது.
அவர் தந்த நம்பிக்கை எனக்குள் இருந்த தன்னம்பிக்கையை மேலும் தூண்டிவிட்டது. முதல் சங்கமத்தை நடத்திய அதே தைரியத்தை என் உள்ளத்தில் மிண்டும் விதைத்தது. அதனாலேயே தற்பொழுது நடக்க இருக்கும் சங்கமத்திற்கான அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயர் போடாமலேயே விட்டிருக்கிறேன்.

சினிமாவை நேசிக்கும் அனைவரும் இலக்கியத்தை மதிக்கும் அனைவரும் இந்த சங்கமத்தில் பங்குபெறுவார்கள் என்று நம்புகிறேன். இருதுறைகளிலும் உள்ள பிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக வந்து கவுரவிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை ஊட்டிய திரு விகரமன் அவர்களுக்கு நன்றி.   

நிகழ்ச்சி நிரல்


திரைப்பட இலக்கியச் சங்கமம் இதுவரை பத்து முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்காக தயாரிக்கும் முன்னோட்டமாகவே (டிரைலர்) இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த சங்கமங்களை கருத்தரங்கமாகவும், கலந்துரையாடலாகவும், தலைப்பு கொடுத்து பேசியும், தலைப்பு எதுவுமில்லாமல் பேசியும் இதுவரை நடத்திப் பார்த்துவிட்டேன்.
மற்ற பல விஷயங்களைப் போலவே இந்த விஷயத்திலும் சங்கமத்தைப் பார்க்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அவற்றைத் தொகுத்து, அதற்கு ஏற்றார்போல எல்லோரும் ரசிக்கும்படியாகவும், விரும்பும் படியாகவும், பயனுள்ளதாகவும் ஆன ஒரு நிகழச்சியாக இதை தொடர்ந்து  நடத்த முடிவு செய்துள்ளேன்.
     முதலில் ஒவ்வொரு சங்கமத்தையும் திரைப்பட கலைஞர் (படைப்பாளி, நடிகர், தயாரிப்பாளர் அல்லது தொழில் நுட்பக்கலைஞர்) ஒருவருடைய சாதனைகளை அல்லது எழுத்தாளர் ஒருவருடைய படைப்புக்களை நினைவுகூறும் விதமாகமும் பாராட்டும் விதமாகவும்  நடத்த  திட்டமிட்டேன்.
     அதற்கு ஏற்றாற்போல ஒரு தலைப்பில் திரைப்படக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் மற்ற துறையினரும் பேசும்படி செய்தேன். தலைப்புகளும் பேச்சுக்களும் வித்தியாசமான கோணத்தில் இருப்பது நல்லது என்று நினைத்தேன். அதற்காக எல்லாமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மரபுகளை மீற உத்தேசிக்கவில்லை. இதுவரை இல்லாத முறையில் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதால் மட்டுமல்ல, இதுவரை யாரும் பார்த்திராத, பார்க்காமல் விட்டுப்போன, பார்க்க மறந்த விஷயத்தை சுட்டிக்காட்டவும் அதுவழி இன்றைய ரசிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அந்த கலைஞர்களையும் படைப்புகளையும் அறிமுகம் செய்வதும் தான் இதன் நோக்கம்.
     இதன் முதல் கட்டமாகத்தான் ஐந்தாவது சங்கமத்தில் ஸ்ரீதரின் சித்திரங்கள் என்ற தலைப்பில் இயக்குநர் ஸ்ரீதரைப்பற்றி அனைவரும் பேசினார்கள்.
     முதலில் யாருடைய படைப்புகளைப்பற்றி பேசலாம் என்று பல நண்பர்களிடம் கேட்டபோது, கிருஷணன் பஞ்சு முதல் மணிரத்னம் வரை- பல பெயர்களை சொன்னாலும்- அதிகமானவர்கள் விரும்பியது ஸ்ரீதருடைய படங்களைத்தான். (சிலர் அவருடைய படங்களை பார்த்திருக்கவில்லை என்றாலும் கூட). அதனால் தான் ஸ்ரீதரின் படங்களை முதலில் தேர்ந்தெடுத்தேன்.
பிரபலமானவர்களைப்பற்றியும் இன்னும் பிரபல மாகியிருக்க வேண்டியவர்களைப்பற்றியும் அவர்களுடைய படைப்புகள் பற்றியும் தொடர்நது வரும் சங்கமங்களில் அலசினோம். அதற்காக, 'முதலில் இவர், அடுத்ததுதான் இவர்என்று யாரையும் வரிசைப்படுத்துவதில்லை.
அடுத்த சங்கமம் 'உலக சினிமாவில் கலைஞர்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் முதல் பகுதியாக உலக சினிமா அரங்கில் கலைஞரின் படைப்புகள் பெற்ற இடம், கௌரவம் பற்றிய ஆய்வாகவும், உலக சினிமாக்களுக்கும் அந்த படைப்புகளுக்கும் உள்ள ஒப்பீடாகவும் இருக்கவேண்டும் என்றும் நினைத்தேன். அது  தமிழ் சினிமாவில் அந்த படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்திய ஏக்கம், இலக்கியங்களில் ஏற்படுத்திய மாற்றம் போன்றவற்றை விளக்கும் விதமாக இருக்கும், கடைசியாக அந்த படைப்புகள் தற்கால சினிமாவிலும் இலக்கியத்திலும் சமூகத்திலும் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அலசுவதாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் இந்த சங்கமங்களுக்கு நான் நினைத்தபடி போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பதாலேயே என்னமோ இதை அரசியலாக நினைத்து, அல்லது அரசியலாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயோ நிறைய நண்பர்கள் அதில் பங்குபெறவில்லை.
அதுவுமின்றி ஒவ்வொரு படைப்பாளியின் படங்களைப்பற்றி பேசுவது புதுமையல்ல, அது பல இடங்களில் பல தளங்களில் அவ்வப்போது நடைபெறுவதுதான் என்ற எண்ணமும் பல நண்பர்கள் வெளிப்படுத்தினார்கள்.
திரைப்படத்துறைக்கு வரும் புதியவர்களுக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கும் பயனுள்ளதான ஒரு நிகழ்வாக இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை வளர்க்க வேண்டும் என்ற கோணத்தில் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தேன்.
அதுவுமின்றி திரைப்பட இலக்கியம் என்றதும் நமக்கு சம்பந்தப்பட்டதல்ல என்று பல கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த சங்கமத்திற்கு வர தயங்குவதை கண்டேன். இந்த குறையை தீர்க்க தற்பொழுது ஒரு வழி கிடைத்துவிட்டது. அதுதான் திரைப்பட தோழமை சங்கமம். மாதம் ஒரு முறை திரைப்பட இலக்கியச்சங்கமத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு திரைப்பட தோழமைச்சங்கம்த்தையும் நடத்த முடிவு செய்துள்ளேன்.   

திரைப்பட தோழமைச் சங்கமம் என்றாலே இப்படிப்பட்ட நிகழ்வுதான் என்று சொல்லும் வண்ணம் தற்பொழுது நிகழ்ச்சி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு சங்கமத்திலும் கடந்த சங்கத்திற்கும் தற்பொழுதைய சங்கமத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி இந்த சங்கமங்களில் விவாதிக்கப்படுகிறது. 

காணிக்கை


ஒரு சாதாரண இணை இயக்குநரான நான் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஆரம்பித்து  பத்து முறை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு, தற்பொழுது பதினோராவது சங்கமத்தை நடத்துகிறேன் என்றால் இந்த வெற்றிக்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டுமல்ல. பலருடைய உதவியும் ஊக்கமும் ஒத்துழைப்பும்தான்!
இதுவரை நடந்த சங்கமங்களில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள் அனைவரும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என் முயற்சியை ஊக்கப்படுத்த வந்தார்கள். அவர்களுக்கு சிலநேரங்களில் டீ கூட கொடுக்க என்னால் முடிந்ததில்லை. இருந்தாலும் அவர்கள் என்மீது காட்டிய அன்பிற்கு இணையே கிடையாது. அந்த அன்பும் பாராட்டும் தான் என்னுடைய அடுத்தகட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இவர்களில் இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்களுடைய உதவியை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது. திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் சிறப்பு விருந்தினர் இவர்தான். வழக்கமாக எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் விழா நடத்துபவர்கள் அழைத்தால் மட்டுமே வந்து சிறப்பிப்பார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக யாரையும் அழைக்காமல்தான் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல்சங்கமத்தை நடத்த முடிவெடுத்தேன். பிறகு மற்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினேன். அப்படியே என்னுடைய உதவியாளர் மூலமாக பாலுமகேந்திரா சினிமாப்பட்டறைக்கும் பொதுவாக அழைப்பிதழை கொடுத்தனுப்பினேன். அதை பார்த்த திரு பாலுமகேந்திரா அவர்கள் என்னுடைய உதவியாளரை அழைத்துப்பேசி தானாகவே இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக்கொண்டார்! அதன்பிறகுதான் நான் மற்ற விருந்தினர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று பலரும் பேசுவார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு சிறு முயற்சி எடுத்தால்,  அதற்கு அழைத்தாலே வந்து பங்கு பெற பலரும் தயங்குவார்கள். அப்படியிருக்க, அழைக்காமலேயே, இந்த சங்கமத்தை நடத்தும் நான் யார் என்றுகூட தெரியாமலேயே இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக் கொண்ட அவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
அடுத்த்தாக நான் குறிப்பிடவேண்டிய மிக முக்கியமானவர் திரு ஆர்.சி.சக்தி அவர்கள்! இவரை நான் நமது சங்கமத்திற்கு அழைக்கச் சென்றபோது வர சம்மதித்த்து பெரய விஷயமல்ல. ஆனால் சங்கமத்திற்கு வரும்நாளில் காலையில் அவருக்கு டயாலிசிஸ் என்ற சிகிச்சை நடந்தது. அப்படியிருந்தும் அவர் விழாவுக்கு சொன்னபடி வந்தார்! இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வராமல் இருக்க ஜலதோம் பிடித்தாலே அதை காரணமாக சொல்வது பொதுவான வழக்கம்தான். அப்படியிருக்க இந்த நிலையில் இவர் என் நிகழ்வுக்கு வந்த்தை எப்படி பாராட்டுவது!
நல்ல படங்கள் மீது வர்கள் கொண்ட அன்பு, இலக்கியத்தின் மீது வர்கள் கொண்ட ஆசை,  இவை இரண்டையும் இணைப்பதற்காக வர்கள் காட்டிய அக்கறை, இவற்றைக்கண்டு  வியந்தேன். இவர்கள் எமது சிறப்பு விருந்தினர்களில் சிறப்பு விருந்தினர்கள்! அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் முடியாது.
அந்த துரோணாச்சாரிர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.

                               அன்பு ஏகலைவன்

                               விஜயன்.B (கமலாபாலா)

Sunday 7 July 2013

11-வது திரைப்பட இலக்கியச் சங்கமம்



     நான் திரைப்படத்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்படத்துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தி வருகின்றேன். இதில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறையைச் சார்ந்த பிரமுகர்களும் நண்பர்களும் பங்குபெற்று வருகின்றனர்.
     கடந்த இரண்டு வருடங்களில் நான் இந்த சங்கமத்தை பத்து முறை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன்.
     தற்பொழுது இம்முயற்சியை மேலும் பயனுள்ளதாக்கிட, இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து மாதம் ஒரு முறை திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்த திட்டமிட்டுள்ளேன். இச்சங்கமம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் படத்தின் தரத்தை உயர்த்த உதவியாக இருக்கும்.
     அத்துடன் தற்பொழுது திரைப்படத்துறையைச் சார்ந்த (தொலைக்காட்சி, குறும்படம், ஆவணப்படம் உட்பட) பல்வேறு தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கியத் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு திரைப்படத் தோழமைச் சங்கமம் நடத்த விரும்புகிறேன்.
     இச்சங்கமம் திரைத்துறையில் வெற்றிபெற்றவர்களுக்கும் வெற்றிபெற விரும்புவர்களுக்கும் மத்தியில் ஒரு உறவை ஏற்படுத்தி, அனைவரும் வெற்றிபெற உதவியாக இருக்கும்,
     தயாரிப்பாளர்களை இயக்குநர்கள் சந்திக்க,
     இயக்குநர்களை தயாரிப்பாளர்கள் சந்திக்க,
     தொழில்நுட்பக் கலைஞர்களை இயக்குநர்கள் சந்திக்க,
     இயக்குநர்களை தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்க,
     இயக்குநர்களை நடிகர்கள் சந்திக்க,
     நடிகர்களை இயக்குநர்கள் சந்திக்க,
     எழுத்தாளர்களை திரைத்துறையினர் சந்திக்க,
     திரைத்துறையினரை எழுத்தாளர்கள் சந்திக்க,
     திரைத்துறையினரை திரைப்பட மாணவர்கள் சந்திக்க,
     நண்பர்களை நண்பர்கள் சந்திக்க,
     புதிய நண்பர்களை அறிமுகம் செய்திட,
திறமைசாலிகளைத் தேடும் படைப்பாளிகளுக்கும், வாய்ப்புக்களைத் தேடும் திறமைசாலிகளுக்கும் இந்த சங்கமங்களும் வலைதளமும் உதவியாக இருக்கும்.
11-வது திரைப்பட இலக்கியச் சங்கமமும் முதல் திரைப்படத் தோழமைச் சங்கமமும் வருகின்ற   
13-7-13
சனிக்கிழமை,
மாலை 6 மணிக்கு
சென்னை, வடபழனி, ஆற்காடு சாலையில் (கமலா தியேட்டர் அருகில்) உள்ள திரை இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
          

நமது சங்கமங்களில் சிறப்பு விருந்தினர்கள்
இதுவரையில்
    
திரு பாலுமகேந்திரா          திரு ஆர்.சி.சக்தி
திரு என்.கே.விஸ்வநாதன்    திரு ஆர்.கே.செல்வமணி
திரு பிறைசூடன்              திரு கே.குணா
திரு மு.களஞ்சியம்           திரு ஜி.தனஞ்சயன்     
திரு கவிதாபாரதி             திரு சீனு ராமசாமி       
திரு வ.கௌதமன்    திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன்
திரு பாலி ஸ்ரீரங்கம்           திரு தாமிரா       
திரு தமிழ்மகன்               திரு எஸ்.ராமகிருஷ்ணன்
திரு பாஸ்கர்சக்தி           திரு பெருதுளசிபழனிவேல்
திரு விஜயமுரளி             திரு ஐகோ         
திரு பாலமுரளிவர்மன்       திரு கேபிள்சங்கர்  
திரு சுரேகா                  திரு மதுமதி
மற்றும்                   திரு புண்ணியா

இன்று முதல்
இவர்களுடன் நீங்களும்


தலைப்பு
தமிழ்ப்படங்கள்
2013 பிப்ரவரி முதல் ஜூன் வரை
(வனயுத்தம், ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், உதயம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டிப்புலி, நேரம், எதிர்நீச்சல், சூதுகவ்வும், தில்லு முல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு)


இம்முயற்சியை வெற்றிபெறச்செய்ய, ஊக்குவிக்க, வாழ்த்த திரைத்துறை மற்றும் இலக்கியத்துரையைச் சார்ந்தவர்களும் நல்ல திரைப்படங்களை விரும்பும் அனைவரும் வாருங்கள்.

நன்றியுடன்
விஜயன்.B (கமலாபாலா)
தொலைபேசி: 9445376497



(இந்த சங்கமங்களை மென்மேலும் வெற்றிபெறச் செய்ய, அன்பிற்குரிய நண்பர்களாகவும் மதிப்பிற்குரிய புரவலர்களாகவும் இன்றே இணைந்திடுவீர். மேலும் விபரங்களுக்கு www.filmfriendship.com வலைத்தளத்தைப் பார்க்கவும்.)