Tuesday 22 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் – 9

                                                          Marx- Jenni

ஒரு அப்பாவி கன்னிப்பெண்
-         ஒரு கதைப்பாடல்

கன்னிப்பெண் நிற்கிறாள் அழகின்றி
மௌனமாய் பின்வாங்குவதுபோல,
தேவதைகளுக்கென்பதுபோல
இனிமைதரும் இந்த ஆத்மா
சின்னாபின்னமானது கஷ்டபாரங்களால்!

ஒற்றைக்கதிரும் ஜொலிப்பதில்லை அங்கே
தட்டுத்தடுமாறி விழும் அலைகள்!
நீங்களங்கே அன்புதுக்கங்கள் இரண்டையும்
தங்களுக்குள் ஏமாற்றி விளையாடுகிறீர்.

அமைதியாய் அடக்கமாய் கம்பீரமானவள் அவள்,
சொர்க்கத்திற்கு என்றும் நம்பிக்கையானவள்,
பேரழகுகள் நூற்றெடுத்த நித்திய
பரிசுத்த உருவம்- அதுதான் அவள்!

ஒரு படைக்குதிரைமேல் வருகிறான்
ஒரு படைவீரன் அப்பொழுது, அவன்
ஜொலிக்கும் கண்களில் ஒரு அன்புக்கடல்
அலையடித்து ஆர்ப்பரிக்கிறது!

அன்பு கடைகிறது கன்னிமனம், ஆனால்
மிகுந்த வேகத்தில் அவன் பாய்ந்து வருகிறான்,
போரில் வெற்றிபெற பேராசை, இல்லை
ஒரு எண்ணம் சற்றிங்கு நின்றுசெல்ல.

எல்லா மனசாந்தியும் இழந்தன, சொர்க்க
மெல்லம் எங்கேயோ மறைந்தது, இதயம்
துக்கத்திற்கான சிம்மாசனமானது, கன்னி
மோகங்களை குடித்து சோர்ந்துவிடுகிறாள்!

பிறகு பகல்முடிவுக்கு வந்திட, வீட்டின்
திண்ணையில், யேசுவின் புண்ணிய உருவத்தின்
முன்னால் தலைகுனிந்து முட்டியிட்டு
கன்னியவள் மீண்டும் ஒருமுறை வேண்டுகிறாள்!
மற்றொருவரப்பொழுது ஓடிவந்து
சேர்ந்திடுகிறார் கன்னியின் இதயத்தை
உடனே தன்னுடையது மட்டுமாய் மாற்றிட!
அவள் எவ்வளவு வெறுத்து மறுத்தாலும்!

எனக்கென்றைக்கும் எனக்காக நீ உன்
அன்பை சமர்ப்பித்தாய், பிறகு நீ எதற்கு
உன் ஆத்மாவை சொர்க்கத்திற்கு முன்
நிறுத்துகிறாய்? வெறும் நாடகம் எதற்கு?

பயந்து நடுங்கி குளிh;ந்து துடித்தவள்
ஓடி வெளியில் இருட்டில் மறைகிறாள்,
கரையாம்பல்பு+போல வெண்மை கைகள்
அழுத்தி நசுக்குகிறாள், கண்ணீர் பொழிகிறாள்!
எரியும் தீயில் என் மார்பு கொதிக்கிறது,
முற்றும் எதிர்பார்ப்பில் இதயமும்

அப்படி இழந்தேன் நான் சொர்க்கமும்!
நன்றாக எனக்கு தெரியும் இன்றதெல்லாம்!
கடவுளிடம் நன்றியிருந்த ஒரு அப்பாவி
ஆத்மாவுக்கு நரகமானது இந்த விதி!

என்ன உயரம்! தெய்வீக உயரம் அந்த
கண்களில் காண்பது எவ்வளவு ஆழம்!
எவ்வளவு நல்லவன் எவ்வளவு அழகானவன்
அவர், அந்த கருணை பார்வை ஒரு
நாளும் என்மீது விழவில்லை ஆசை
அறுந்து உருகட்டும் நான் என்னுயிர் கெடும்வரை!
எவ்வளவு மென்மையான தன்கரம் இன்னொரு
கைத்தலத்தை நாளை அணைக்கலாம்
இன்னொருவருடன் ஆனந்தம் பங்குபோடலாம்!
எதுவும் மனப்பு+ர்வமல்லாமலே அவரிந்த
துக்கத்தை என்மீதுவைக்கிறார் ஏராளமாய்!

முழுமனதுடன் விடைசொல்லலாமென்
ஆத்மாவிடமென் எதிர்பார்ப்புகளுடனும்
சிறிதென்னை பார்த்திருந்தால் அவா;
என்முன்னால் தன்னிதயம் திறந்தால்!

புன்னகை பொழிந்தவர் அங்கில்லையென்றால்
சொர்க்கமும் உற்சாகம் இல்லாமல்போகும்,
துக்கங்களால் தீபிடித்து நிற்கும் ஒரு
திசையாக மாறிடும் கஷ்டங்களின் தரிசுநிலம்..

இதயத்தின் ரத்தத்தில் மூழ்கும் ஒரு அக்னியை,
உள்ளங்கை பூவிடும் இனிமைசுகத்தை,
எல்லாம் குளிரச்செய்தவளை இந்த ஆர்ப்பரிக்கும்
வள்ளம் விடுவித்திருந்தால்

முடிந்தவரை பலமாக அந்த நீர்வீழ்ச்சியில்
ஓடிக்குதித்து விழுகிறாள், இரவின் மிகக்
குளிர்ந்த கருப்பு கரங்களில் நேராக
விழுகிறாள் நொடியில் மறைகிறாள்!

எரியும் நெருப்புபோலிருந்த இதயம்
ஒரேயடியாக குளிர்ந்துபோனது!
கன்னியின் பார்வையாம் ஒளியின் எல்லையை
ஒன்றாக மூடிப்போர்த்தியது மேகங்கள்!

வெளிறி வண்ணமற்ற இனிமையான அவளுடைய
உதடுகள், மென்மையில்லையென்றாலும்
தெய்வீகஒளி எழும் அவளுடைய உடல்
தவறி சூனியமல்லாதிடத்தில் விழுகிறது.

இல்லை ஒரு இலைகூட அடர்ந்து விழ
வில்லை விருட்ச சிகரங்களிலிருந்து
சொர்க்கமும் பூமியும் காதைமூடி அப்படி
நிற்கிறது அவளை எழுப்பாமல்!

அவளுடைய வெறும் எலும்புக்கூடு
பாறைகள்சேர்ந்த திசையில் முட்டிமோதுவதற்கு
கடலாகாய அலைகள் மாமலை
அடிவாரங்கள் எல்லாம் கடந்து சென்றது!

அப்படைவீரனோ தன்னுடைய புது
காதலை கட்டி அணைக்கிறான்.
சித்தேன் இனிமையாக பாடுகிறது,

உண்மைக் காதலின் அனுபவத்தைப்பற்றி..!

Monday 21 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் – 8



பைத்தியக்காரி
-         ஒரு கதைப்பாடல்

நிலவில் ஒருவள் நடனம் ஆடுகிறாள்,
இருட்டில் நிழலாக மறைந்து போகிறாள்,
மேலாடையில் அடங்காத மார்பின் இரு
கண்கள் மின்னிஜொலிக்கிறது,
பாறையில் கொத்திவைத்த வைரங்கள்போல!

நீலக்கடலே! அருகில் வா நீ !
உனக்கு தருகிறேன் ஒரு நறுமுத்தம்!
செவ்விளநீர்பு+ தொடுத்த ஒரு
கிரிடமெனக்கு அணிவித்திடு நீ- ஹரி-
நீலநிறம் சோ;த்த ஒரு மேலாடை
எனக்கு நெசவு செய்துகொடு!

நல்ல தங்கமும் மாணிக்கச்செங்கல்லும்
கொண்டுவருகிறேன் நான்!
அதில் என் ரத்தமும் துடிக்கிறது, சிறு
சூடுதரும் தன்மார்பில் அன்பை அணிவித்து
கடலுக்குள்ளே கொண்டு செல்கிறேன்!

உனக்காக பாடுவேன் நான் !
அலையும் காற்றும் அதில் துள்ளும்!
குதித்து உயர்ந்திடும் நானும் நடனமாடும்
நேரத்தில் காற்றும் அலையும்
அழுத கண்ணீர் பெய்யட்டும்

ஒரு செவ்விளநீர்கிளையெடுத்து அவள்
மரகதநீல நிறங்கள் எழும் ஒரு
நாடாவை அதன்மேல் கட்டிய
சாதாரணமான ஒரு பார்வையும் பார்த்து
சோம்பல் கைகளிலிருந்தது வழுக்கி
விழுவதையறிந்து நிற்கிறேன்!

ஆழமான நீல இதயத்திற்கு அலை
ஒலியாகச்செல்ல சிறகை தா.
அம்மா, உனக்கு தெரியவில்லையா
நான் உன் மகனுக்கு தந்த பூவலங்காரம்?”

நீர்க்கடலை அவள் செவ்விளநீர்
ஒவ்வொன்றாய் போட்டலங்கரித்தாள்,
மாயமாம் நம்பிக்கையால் ஆகாதவிதம்!
முடியும்வரை பெருமையுடன் பைத்தியமாக

அவள் ஆடுகிறாள் ஒவ்வொரு இரவும்!

காரல் மார்க்சின் கவிதைகள் – 7



ஓடிப்போகலாம்
-   ஒரு கதைப்பாடல்

இரும்பால் உருவாக்கிய முன்கதவுபக்கம்
நிற்கிறான் அந்த படைவீரன்.

அன்பான அழகான பெண்ணவள்
அவ்வழியை பார்த்து நிற்கிறாள்.

அன்பான ஏய், படைவீரனே!
கீழே எந்தவழி நான் வருவேன்?”

எங்கும் அமைதியின் குளிர்ந்த
இருளின் முடி ஆட்சியாம்!
நானிதை வீசித்தருகிறேன், பிடித்துக்கொள்,
உன் உயிரை காப்பாற்ற இது உதவும்!
மேலே இதன் ஒரு முனையை இறுக்குகிறேன்,
இந்த கயிற்றின்வழியாக கீழே இறங்கலாம்!

ஏய்! படைவீரனே! உன்னருகில் நான்
பறந்து வந்துகொண்டிருக்கிறேன்..
இன்றொரு திருடனைப்போல! காதலுக்காக
நான் என்னதான் செய்யமாட்டேன்!

அருமைக்காதலியே, நீ அடைவதிப்பொழுது
உன்னுடைய சொந்தம்தான்!
ஆடிமறைந்து செல்லும் நிழல்களைப்போல
நாம் ஓடி தப்பித்துவிடுவோமே!

ஏய், படைவீரனே! கீழே கும்மிருள் எல்லாம்
கலைந்துவிடப்போகிறது!
என் ஐம்பொறிகள் சுற்றுகிறதே!
இனி என்னால் செல்ல முடியாது!

நீ இப்பொழுதில் விட்டுவிடுகிறாயா!
நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்!
ஒன்றுமில்லா பயங்களால், இருந்தும், உன்
உள்ளம் நடுங்குகிறதா!

ஏய் படைவீரனே!
ஏய் படைமறவனே!
தீயிடம் நீ விளையாடுகிறாய்!
இருந்தாலும், நீ, ஆமாம்
நீ மட்டும்தான் என் நெஞ்சில்
குடியிருக்கும் மோகம்!
அன்பான பாதைகளே விடை தாருங்கள்
விடைதாருங்கள் ஒரேயடியாக!

இனியென் பாதங்கள் சுற்றியலையாதிங்கே!
நான் போய் வரட்டுமா?..”

என்னுள்ளம் கவர்ந்த உன்னிடம்
நான் எப்படி சண்டையிடுவேன்?
அன்புகெண்டவர்களே! உங்களனைவருக்கும்
நான் வாழ்த்துகிறேன் சுபராத்திரி!..

பிறகு, முகூர்த்தத்திற்காக காத்திருக்கவில்லை,
தயங்கி அவள் நிற்கவுமில்லை!
குதித்துப்பிடித்தாள் அவள் அந்தக்கயிற்றை
கீழே இறங்கிடத்தான்!
பாதிவழி ஊர்ந்திறங்கவில்லை அதற்கு
முன்னவள் பயந்துநடுங்கினாள்!
பதட்டத்துடன் பார்வை, கை ஓய்ந்துபோகிறது
பிடிவழுக்கி மரணத்தின் மார்பில் விழுவதற்கா!..

அன்பு படைவீரனே! இன்னொருமுறை உன்
சிறுசூட்டை என் உடலுக்கு தா!

உன் கரங்களில் விழுந்துகிடந்த
ஒரு திருப்தியில் மரணத்தை ஏற்கலாம்
முகர்வேன் நான் உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்,
இனிமையாம் மௌனத்தில் நான் மறைவேன்!

அந்த படைவீரன் கட்டி அணைத்தான்
மென்மையான அவ்வுடலை.
தன்மார்பில் அவன் பலமாக அழுத்துகிறான்
காதலியை நிறைந்த அன்புடன்.
ஒன்று சேர்ந்தது இரு இதயங்கள்! இறுக்கி
யழுத்தும் பரபரப்பில் கொடுமையானதொரு
வலி! துளைத்தேறுகிறது உள்ளே!

அவ்வளவு உண்மையாம்,
அவ்வளவு கருணை நிறைந்ததாம்
அன்பே! விடை கொடுத்திடு!

நில்! வருகிறேன் உன் பின்னாலேயே
நான் எட்டிவிட்டேன், மிக அருகில்..

அமர அக்னியின் நொடிமின்னல்! அதற்குள்ளே

அவர்களின் ஆத்மாக்கள் பயணம் ஆரம்பித்தன!

Sunday 20 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 6


மந்திரவீணை

காதில் அவ்வளவழகாக அபூர்வமாக
பாடுகிறது ஆனந்தமாம்
வீணைபோல, நடுங்கும் கம்பிபோல!

விழுந்துறங்கும் பாடகனை எழுப்புகிறது:
உன் இதயத்திடம் ஏனிதுபோல
பயந்து துடிக்கிறது?”

என்ன அது கேட்கின்ற ஒலிகள்? நட்சத்திர
ராசியின் லயம்நிறைந்த சங்கீதமும்
ஆழுகின்ற ஆத்மாக்களின் நாதமும் போல?
அவன் எழுகிறான் தன்னுள்ளேயிருந்தொரு
அலையைப்போல துள்ளியெழுகிறான்!
நிழல்எழும் திசையில் அந்தமுகம்
திரும்புகிறது தங்கக்கம்பிகள் காண்கிறது.
வந்துவிடு பாடகா! மேலேயும் கீழேயும்
அடியெடுத்துவைத்திடு, காற்றில் உயர்ந்தும்
இங்கே தாழ்ந்தும் அசைந்திடு! ஆனால்
உன் விரல்களால் தொடமுடியாது வீணையை

அவனதை காண்கிறான்: கம்பிகளாய் பரவி
வளர்கிறது, தன்னுடைய ஆத்மாவிற்கு மடியின்
ஆழத்தில் பதட்டத்தை ஏற்றுகிறான்!
வளர்கிறது காற்றில் அந்த ஒலி
பின்தொடர்கிறான் அவனின்று அதன்
மந்திரசக்தியால் பயத்தின் தொடர்கள்
ஏறியிறங்குகிறான், இங்கேயும்
அங்கேயும் எங்கேயும்!
நிறுத்துகிறான் அவன், ஆடியலைந்து
விசாலமாம் முன்கதவை திறக்கிறான்.
உள்ளேயிருந்துவரும் சங்கீதத்தின் அலையின்
வேகத்தில் அவன் பாய்ந்தொழுகுகிறானா?

அங்கே ஏழுவண்ண ஒளிமின்னும்
வீணையை பார்க்கிறான், இரவுபகல்
இணையில்லா சங்கீதநிதியாக! ஆனால்
அங்கே யாருமில்லை அதைமீட்ட!
ஆசையைப்போல அழலைப்போல அந்த
வீணை அவனை கட்டியணைக்கிறது,
வீங்கி மார்பகம் வீங்கி துடிக்கிறது இதயம்!
கட்டுப்பாட்டை இழந்ததுபோல!
இந்த வீணை பாடுவது இன்றென்
உயிரில்தான் அதன் பெருந்துயரம்
நான்தான் என் ஆத்மாவிலிருந்துதான்
இந்த பாடலின் புதுவெள்ளமும்!
அவன் ஒரு ஆனந்ததாண்டவத்தில், வீணையின்
சிறுகம்பிகளை உடைத்தெடுக்கிறான்,
நடுங்குகிறது உரத்த ஸ்வரங்கள் அந்த
மலைமேலே எழுந்த நீர்அருவிகள்
கடைசியில் ஆழத்தில் வந்துவிழுவதுபோல!
பரவுகிறது என் பாடல் எங்கும்!
ரத்தமும் குதித்து வந்து ஓழுகுகிறது!
இதயத்தையாளும் ஆசைதுக்கங்கள்
அதைவிட சக்திவாய்ந்ததல்ல என்றுமே!

அவன் அதன்பின் இவ்வுலகை பார்த்ததில்லை!

Saturday 19 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 5



முடிவுரைகீதம் - ஜென்னிக்கு

உன்னிடம் சொல்கிறேன் செல்லமே,
இன்னுமொரு விஷயம், ஆனந்தமாம்
இந்த விடைபெறும் கவிதையும்
பாடி நான் விடைபெறுகிறேன்,
கடைசியிலிந்த வெள்ளியலைகள்
துடித்துருண்டு சேரும்நேரம்,
அதன் ராகத்தில் என் ஜென்னியின் சங்கீதம்,
உள்கடலின்மேலேயென்பதுபோல
வேகத்தில்பாய்ந்தும், விழும்போது
மங்கியபடியும், சிற்றருவியை,
காட்டுத்தலங்களை கடந்துவரும் இந்த
வாழ்வின் வேகயாமங்களுக்கும் அவசரமாம்,
உன்னில் முழுமையின் எல்லையை
கண்டுபிடிக்கும்வரை! உலர்ந்துவிழும்
அக்னியாடை வீரமாமென் உடலில் அணிவிக்கிறது, ஒளிமாற்றமாகும் இதயத்தடம் கவுரமானசிகரம்,
பந்தத்தை அறுத்தல்!
ஆகாயங்களில் தடையின்றி பயணிப்பேன் நான்!
வலிகள் சிதறியது உன் முக பிரசாதத்தால்,
வாழ்க்கைத்தோழியின் நேராக

என்கனவுகள் ஜொலிக்கிறது!

காரல் மார்க்சின் கவிதைகள் - 4


மூன்று

மீண்டும் ஒருமுறை நடுங்கிமரத்த
இவ்வெண்தாள்கள் பறந்துபறந்து
உன்பக்கத்தில் வந்துவிட்டால்!
மூடபயங்களால், விரகத்தின் வருத்தத்தால்,
குறைந்து விட்டதென் உணர்ச்சியாக,
வெறுமனே என் ஆத்மவஞ்சனையின்
மென்மையான கற்பனைகளில்
இன்றந்த வீரப்பாதைகளில் தனியாக அலைகிறது!
உயரத்தை வெற்றிபெற என்னால் முடிவதில்லை!
நம்பிக்கை இனி மிச்சமில்லை கொஞ்சமும்!
ஆசைகள் அடர்த்தியாய் வாழுமென்
அன்பில்லத்தில் நானொவ்வொரு
திசையிலிருந்து வரும்போது, அழகியே,
புணர்ச்சிமாலைகள் உன்னில் அணிவிக்க
காத்திருப்பான் காதலன் மிகப்பெருமையுடன்!
பிறகு? வருத்த ஞாபகங்கள் இடித்தீயாக
என்மீதப்போது விழுந்துருண்டு செல்லும்!

நான்கு

அதை நீ பொறுத்திடு,
ஆபத்தைத்தருபவனின் தூற்றல்!
அபராதம் ஏற்கமுடியாத ஆத்மாவுக்கு ஆசைகள்!
பாடகனின் திறமை சுட்டெரியட்டும்,
சொந்த பேராசைகளின் சிறுசுடர்கள் பறந்தசெல்ல!
அமைதி, பதட்டம், நானின்றெனக்கு எதிராக
நிற்கமுடியுமா? பாடகனின் பெயரையும்
ஏளனம் செய்யவேண்டுமா?
நேசிக்காமல் இருக்கணுமா,அன்பே,
உன்முகமொருமுறை பார்த்தபின்?
ஆத்மாவின் பிரம்மைகள் இன்றிவ்வளவுயரத்தில்
ஆசையை நடத்துகிறது,
எனக்குமேல் மகோன்னதமாக 
நிற்கிறாய் நீ!
உன் கண்ணீர்த்துளிகளை மட்டும் ஆசைப்படுகிறேன் நான்! என் கீதங்களை நீமட்டும் ரசித்ததினால்,
அவற்றிற்கிந்த அழகும்
இவ்வலங்காரங்களும்!
இனிமேலிவையெல்லாம்
சென்று மறையட்டும் சுத்த சூனியத்தில்!

                                                --1936 அக்டோபர்

Wednesday 16 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 3




மீண்டும் ஜென்னிக்கு

ஒன்று

நீயெடுத்துக்கொள், அன்பு உன்
பாதங்களில் சமர்ப்பிக்கும்
இந்த கீதங்களையெல்லாம்
என்னிலிருந்தெடுத்துக்கொள்;!

ஒழுகிவருகிறது இதோ அந்த
ஆத்மா அந்த கீதங்களில்,
ஒரு வாத்திய ராகத்தில், ஒளியில்!
இந்தபாட்டின் எதிரொலிக்காகத்தானென்றால்,
எதிர்பார்ப்பை அன்பாம் தலங்களில்
உருக்கியெழுப்பிட, தன்மானமாக
உன் இதயத்திடம் அசைந்தாடுவதற்கு
தகுந்தபடியென் நாடியை துடிக்கவைக்க!
லாகவத்துடன் வெற்றி உன்னையும்
ஏற்றிச்சென்றிட, தூரத்தில் நின்றபடி
நான்அதன் சாட்சியாகிறேன் அப்போது!
மிகுந்த பயமின்மையுடன் போராடுவேன்
நான், குதித்து வருமென் ராகாலாபனை!
சுதந்திரமானபோது முன்னால்வரும்,
உருவமாற்றம்பெற்ற என் சங்கீதம்!
இனிமை துக்கங்களில் என் வீணை அழுதிடும்!

இரண்டு

உன் கண்களைப்போல விலை
உயர்ந்ததாக எனக்கொன்றுமில்லை
தூரக்கரைகள், தேசங்களும்,
எல்லாம் காலடியில் கொண்டுவந்து
தூரத்தில் எட்டும்படி கொண்டாடி
ஆனந்தமாக ஆடும்.
பூமியில் புகழ் எதுவும் இணையாகாது
அவற்றிற்கு அந்தவிழி முழுமையொளியாக,
ஆனந்தத்தின் நிறைவில் இதயம் இளம்சூடாகிட
பாட்டில் நிறையும் உணர்ச்சியாம்
அந்தகண்கள் சுரந்த இருட்டில்
உயிர் கொள்ளும் கண்ணீர் பொழிந்திட!
இந்த வீணையின் இனிமைராக
மூச்சின்வழியில் என்னாத்மாவை நான்
ஊதிப் பறக்கவைப்பேன்,
இறக்கும் பெரியவனாகவே நான்
என் லட்சியம் நிறைவேற்ற முடிந்தால்
மிகப்பெரும் அழகான பரிசை அது
பெற்றுவிட்டால், உன்னில்

ஆனந்த வருத்தங்களை ஒரேபோல தாங்கிட !

Tuesday 15 October 2013

Rajinikanth


Name:            Rajnikanth
Address:        1B, Raghavaveera Avenue,
                        Poes Garden, Chennai-600086
Contact No:  24991291,24990278
Email:
In the Field:  Acted in more than 150 films across the languages Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi. Wrote and produced a few films.             

Noted Films: Apoorva Ragangal
Moondru Mudichu
                     Mullum Malarum
                     16 Vayathinile
                     6 Muthal 60 Varai
                     Murattukkalai
                     Annamalai
                     Muthu
Basha
                     Padayappa
Chandramukhi
Sivaji
Enthiran
                       
Awards:         Tamilnadu state awards for best actor-four times
                     Filmfare award
                     Padhmavibhushan, the civilian honour of Indian Government.

Special:         
·        Second highest paid actor in Asia (second to Jackie Chan) and popularly accepted as the Superstar in southern languages and respected throughout the nation.
·        Rajinikanth was born as Shivaji Rao Gaekwad,[5] to mother Jijabai and father Ramoji Rao Gaikwad, a police constable, on 12 December 1950 in the Indian city of Bangalore in Mysore State, present-day Karnataka.
·        He attended the Government Model Primary School at Gavipuram, Bangalore, where he had his primary education in Kannada language.
·        Join the Madras Film Institute
·      Debut as an actor in the National Film Award–winning Tamil film Apoorva Raagangal (1975), directed by K. Balachander.
·        His second film, a Kannada film, Katha Sangama, was directed by Puttanna Kanagal and released in 1976.
·        In the following years, he continued to perform a variety of negative roles.
·        The 1978 film Bhairavi was the first Tamil film to cast Rajinikanth as a main hero.
·        He also got the "superstar" title through the film.
·        In 1983, he starred in his first Bollywood film, Andha Kanoon.
·        Rajinikanth wrote his first screenplay for the film Valli (1993).

·        His film ‘Muthu’ became the first Tamil film to be dubbed into Japanese, as Mutu: Odoru Maharaja.


காரல் மார்க்சின் கவிதைகள் -2


ஜென்னிக்கு இரண்டு கீதங்கள்

ஒன்று

ஜென்னி! நீ மீண்டும் மீண்டும் கேட்கலாம்:
ஏன் ஜென்னியை என் கீதங்கள்
முதன்மையாய் அழைக்கிறதென்று?

உனக்காக மட்டும்
வேகமென் நாடிதுடித்திட,
உனக்காக என்கீதங்கள்
நிராசையில் மூழ்கிட,
நீ மட்டும் அவற்றின்
உள்ளத்தூண்டுதல் என்றாகிட,

ஒவ்வொரு வண்ணமும்
உன் பெயரை சொல்லிட,
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்
இனிமை நீ என்றாகிட,
ஒவ்வொரு மூச்சும் கண்ணே,
உன்னிடம் சென்றிட,

அன்புகொள்வது பெயரளவு
இனிமைதான் அதனால்!
அதன் ஆரோகண அவரோகணங்கள்
என்னுடன் அவ்வளவாக உருளுவதால்!
அதவ்வளவழகானது இன்பமானது
ஒளிர்வது, தூரத்தில் துடிக்கிறது
ஆத்மாக்களில் எதிரொலித்து
உருளுவதுபோல தங்கக்கம்பிகள்
இறுக்கிய சித்தேணின் ஸ்வரலயம்போல
மந்திரமாச்சரிய ஆத்மாவின்
உள்ளம்போல அதனால்!

இரண்டு

ஜென்னி! என்றொரே வார்த்தை மட்டுமே
ஒவ்வொரு வரிகளிலும் எழுதி
ஓராயிரம் கட்டுரைகள் படைத்து
முடிக்க என்னால் முடியும்,
அதில் அடங்கிய சிந்தனை உலகம்,
நிரந்;தரவேலை, சஞ்சலமில்லாத ஆசைகள்,
மிகமெல்லிய மோகங்கள்
துடிக்கிற இனியபாடல்களும்

உயர்ந்த ஒளி மண்டலங்கள்
தன் ஒளியெல்லாம், உள்ளத்தில்
பதட்டம்தரும் வருத்தமெல்லாம்,
தெய்வீக ஆனந்தங்களெல்லாம்,
என்னறிவெல்லாம், என் வாழ்க்கையின் சொந்தமானதெல்லாமெல்லாம்!

தூரநட்சத்திரங்களில் என்னாலதை படிக்கமுடியும்!
பரந்த பேரண்டத்தின் மத்தியிலிருந்தெழுந்த
கோஷங்களிலிருந்து என்னிடமது வந்துசேர்கிறது!
வரும் நூற்றாண்டுகள் சாட்சியாகட்டும்,
நான் அதையொரு பல்லவியாக
இங்கே குறிக்கிறேன்,
அன்புதான் ஜென்னி!
ஜென்னியென்பது அன்பின் பெயர்!

-- 1936 நவம்பர்