Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts

Tuesday, 3 July 2018

ஆரம்ப காலத் திட்டம் Beginning Schedule







திரைப்படஇலக்கியச்சங்கமம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)

ஆரம்ப காலத் திட்டம்

ஆகஸ்ட்: தேர்வு, பயிலரங்கம் & கதை விவாதம்
செப்டெம்பர், அக்டோபர் & நவம்பர்: தொடர் பயிற்சி (ரிஹேர்சல்)
டிசம்பர்: முன்னேற்பாடுகள்
ஜனவரி: முதல் மேடை




Film Literature Confluence
VANTHIYATHEVAN & KARIKALA NANDHINI
(Twin plays Based on PONNIYIN SELVAN novel by Kalki)


Beginning Schedule

August: Audition, Workshop & Story discussion
September, October & November: Rehearsal
December: Preparations
January: First stage



Monday, 2 July 2018

பொன்னியின் செல்வன் கலைஞர்கள் தேர்வு PONNIYIN SELVAN AUDITION OF ARTISTS




திரைப்படஇலக்கியச்சங்கமம்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
(இரட்டை நாடகங்கள்: வந்தியத்தேவன் & கரிகால நந்தினி)

ஆண்/பெண்/  பகுதி நேர/முழுநேர/   புதுமுக/அனுபவம் வாய்ந்த கலைஞர்களே வாருங்கள்…


* இது தமிழகத்தின் மேடைநாடக கலாச்சாரத்தில் புது ரத்தத்தை ஏற்றுவதற்கான…
* தமிழகத்தில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதற்கான…
* நாடக உலகில் பலதரப்பட்ட படைப்பாளிகளையும் புத்தம்புது உள்ளடக்கங்களையும் கொண்டுவருவதற்கும் வளர்ப்பதற்குமான…
* அனைத்து இடங்களுக்கும் நாடகங்களையும் நாடகக்குழுக்களையும் கொண்டுசெல்வதற்கான…
* மற்றும் திரைத்துறையில் நுழைவதற்காக நடிகர்களையும் படைப்பாளிகளையும் பயிற்றுவிப்பதற்குமான ஒரு முயற்சி…

மேடையிலும் பின்னணியிலும் பணியாற்ற/பயில இணைந்திடுங்கள்…
ஸ்ரீதர்/கே.பாலசந்தர்/சிவாஜி/திலகன் போன்ற முன்னோடிகளை பின்பற்றுங்கள்…
(திரைப்பட/விஸ்காம்/ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் குறும்பட படைப்பாளிகளுக்கு முன்னுரிமை…)

இந்த திட்டம் மாபெறும் வெற்றிபெற புரவலர்களாகஃவிளம்பரதாரர்களாக உதவுங்கள், ஒத்துழைப்பு தாருங்கள்…

கலைஞர்கள் தேர்வு

நாள்: 1-7-2018 மற்றும் 8-7-2018
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 

தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கான பயிலரங்கம்: 21 & 22-7-18
நாடகங்களுக்கான தொடர் பயிற்சி(ரிஹெர்சல்): 23-7-18 முதல்..

இடம் மற்றும் இதர விபரங்களுக்கு அழைக்கவும்: 9445376497


அன்புடன்
கமலபாலா பா.விஜயன்



Film Literature Confluence
VANTHIYATHEVAN & KARIKALA NANDHINI
(Twin plays Based on PONNIYIN SELVAN novel by Kalki

Welcome Male/Female/ New face/Experienced Artists

* An attempt to bring new blood to the theater culture of Tamilnadu..
* to help and develop both Film and Literature fields in Tamil..
* to bring up and promote different creators and fresh contents for theatre..
* to bring stage plays and groups to all areas..
* and to train the actors and creators to enter the film field.. 


Join to work/ learn/ practice on stage and behind stage...
Follow the pioneers like Sridhar/ K.Balachander/ Sivaji/ Thilakan etc...
(Special preference for Film/Viscom/Media students and Short film makers...)
Help and Co-operate as Patrons/ Sponsors to make the project a grand success...



AUDITION OF ARTISTS

Date: 1-7-2018 and 8-7-2018
Sunday 10 AM to 6 PM

Workshop for the selected artists: 21 & 22-7-18
Rehearsal for the plays: 23-7-18 onward

For details of venue and others, call: 9445376497


With love
KamalabalaB.Vijayan

Friday, 27 October 2017

PONNIYIN SELVAN – a new beginning




Dear Friends,

I am very proud to announce that our Film Literature Confluence, which was started with thoughts like, the film and literary fields should be united together and a friendship circle should be developed amongst the film fraternity, had been conducted successfully for the last seven years continuously and the eighth anniversary is going to be conducted in the coming January(2018).
Now, I had planned some new programs to make all understand the works, thoughts and new targets of our confluence. Along with that I had been continued the works of film ‘Ponniyin Selvan’ parallel to those works, as to prove these thoughts in practical. 
But, current situations, a few sweet memories, many souring experiences and the advices of friends and well wishers in recent days, gave me a clarity, confidence and strength to make a way to unite all these works as a single plan to complete.  
As per that plan, all the upcoming programs of our confluence (weekly meets, discussions, classes, seminars etc.) will be based on the script development and production process of the Ponniyin Selvan. The programs will be conducted as an official announcement about these works will be done in the anniversary of our confluence in coming January.
I request the help of all friends, groups and institutions to meet all persons associated with film and literature through these programs.
I am inviting all friends of film and literature, to join me in this new movement, to advice in script development and film production process, to share their experience and to learn. Especially I am inviting the friends who love the novel ‘Ponniyin Selvan’.

Come on.. Let us bring a change in the film field!

With love
Kamalabala B.Vijyan

For more details: www.filmfriendship.com or facebook/Kamalabala B Vijayan

Current Targets of our Confluence:


# Develop professional film writers..
# Learn to make films and make film to learn..
# Unite institutes (students) and film field (creators)..
# Guide and co-ordinate all from ‘Script’ to Screen’..
# Introduce creators to projects and projects to creators..
# Encourage entrepreneurs in film, media and publications..
# Introduce the contents in the book ‘How to Win in Film Field (Part 1: Cinema, the art of Producers)


It is not only for persons already working in film field and persons searching for chance in the field, but also for all who love cinema!

பொன்னியின் செல்வன் – ஒரு புதிய ஆரம்பம்






அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத் துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வரும் ஜனவரி மாதம் (2018) எட்டாவது ஆண்டுவிழாவை கொண்டாட இருப்பது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
தற்பொழுது நமது சங்கமத்தின் செயல்பாடுகளைப்பற்றி, எண்ணங்களைப்பற்றி, புதிய இலக்குகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும். சங்கமத்தின் பயன்களை அணைத்து நண்பர்களிடமும் பரவலாக கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக பல புதிய நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தேன். அத்துடன் இந்த எண்ணங்களை செயல் முறையில் எடுத்துக்காட்டும் விதமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பணிகளையும் இதற்கு இணையாக தொடர்ந்து செய்து வந்தேன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள், சில இனிய நினைவுகள், பல கசப்பான அனுபவங்கள் மற்றும் நண்பர்களும் நலம் விரும்பிகளும் கடந்த சில நாட்களாக தந்த அறிவுரைகள் எல்லாம் சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தெளிவையும், தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்து, தற்பொழுது இந்த பணிகளை ஒன்றிணைத்து ஒரே திட்டமாக செய்து முடிக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளது,
இதன்படி நமது சங்கமத்தின் அடுத்த நிகழ்வுகள் (வார சந்திப்பு, கலந்துரையாடல், வகுப்புகள், ஆய்வரங்கம் போன்றவை) அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை முன் நிறுத்தியே நடத்தப்பட உள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் சங்கமத்தின் எட்டாவது ஆண்டுவிழாவில் இந்த பணிகளைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடும் விதமாக இந்த நிகழ்வுகள் இருக்கும்.
இந்த நிகழ்வுகதள் வழியாக திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் நண்பர்களை சந்திக்க நண்பர்கள், குழுக்கள், நிறுவனங்கள் என அனைவரிடமும் உதவியை நாடுகிறேன்.  
இந்த புதிய இயக்கத்தில் ஒன்றிணைந்து பயணிக்க,  திரைக்கதை அமைப்பிலும், படத்தயாரிப்பு பணிகளிலும் அறிவுரைகள் வழங்க, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, இணைந்து பணியாற்ற, கற்றுக்கொள்ள அனைத்து திரைப்பட மற்றும் இலக்கிய நண்பர்களையும் அழைக்கிறேன். குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நேசிக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

வாருங்கள்.. திரைத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவோம்!

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்

மேலும் விபரங்களுக்கு: www.filmfriendship.com அல்லது facebook/Kamalabala B Vijayan


நமது சங்கமத்தின் தற்பொழுதைய இலக்குகள்:

# தொழில்முறை திரைப்பட எழுத்தாளர்களை வளர்ப்பது..
# படம் எடுப்பதற்காக கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொள்வதற்காக படம் எடுப்பது..
# கல்வி நிறுவனங்களையும் (மாணவர்கள்) திரைத்துறையையும் (படைப்பாளிகள்) இணைப்பது..
# ‘திரைக்கதை’ முதல் ‘திரை’ வரையில் அனைத்திற்கும் வழிகாட்டுவது மற்றும் ஒருங்கிணைப்பது..
# திட்டங்களுக்காக படைப்பாளிகளையும், படைப்பாளிகளுக்காக தயாரிப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்வது..
# திரைப்படம், ஊடகம் மற்றும் பதிப்பகத் துறைகளில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது..
# திரைப்படத் துறையில் வெற்றிபெறுவது எப்படி (பாகம் 1: திரைப்படம்- தயாரிப்பாளர்களின் கலை) – நூலில் சொன்ன கருத்துக்களை அனைவருக்கும் அறிமுகம் செய்வது..

இது ஏற்கனவே திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் திரைத்துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்கும் மட்டுமானதல்ல, திரைப்படத்தை விரும்பும் அனைவருக்குமானது!


Sunday, 20 August 2017

பொன்னியின் செல்வன் 1



இதுவரை எடுக்கப்பட்ட / வெளிவந்த படங்களுக்கு மட்டுமே விழா எடுத்துள்ளோம்..
முதன்முறையாக எடுக்கப்படாத / எடுக்க வேண்டிய படம் பற்றி ஒரு கலந்துரையாடல்

Friday, 26 May 2017

பொன்னியின் செல்வன் - பிள்ளையார் சுழி




தெலுங்கில் ராஜமௌலி எடுத்த ‘பாகுபலி 1 மற்றும் 2’ இந்திய திரை உலகத்தையே கலக்கிவிட்டது. தற்பொழுது பட்ஜெட் படம் என்றால் இனி பாகுபலி படங்களுடன் ஒப்பிடாமல் இருக்க யாராலும் முடியாது.
பலரும் பாகுபலியின் வெற்றியை பின்பற்றி பெரும்பட்ஜெட் படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ரெண்டாமூழம் (மகாபாரதம்)’ 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. தமிழில் ‘சங்கமித்ரா’ ஆரம்பித்துவிட்டார்கள்.
‘எந்திரன் 2.0’ விரைவில் வெளியாக இருக்கிறது. அது வெற்றிபெற்றால் பெரிய பட்ஜெட் படங்களில் வருகை இன்னும் அதிகரிக்கும்.

இப்படி பெரியபட்ஜெட் படங்கள் பற்றி பேசும்போதெல்லாம் தமிழ் ரசிகர்கள் மனதில் எழும் ஒரு பெயர்தான் ‘பொன்னியின் செல்வன்’.
ஏன் இந்த கதையை யாரும் பிரம்மாண்டமான ஒரு படமாக எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவது சகஜம்.

அந்த கேள்விக்கான ஒரு பதில்தான் இந்த முயற்சி. இது ஒரு நாளில் எடுத்த முடிவு அல்ல. பல வருடங்கள் யோசித்து வரைவுசெய்யப்பட்ட ஒரு திட்டம்.

இது காலத்தின் கட்டாயம். இது பற்றிய கூடுதல் விபரங்கள் தொடரும் பதிவுகளில்…