Sunday 18 May 2014

எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்




முன்னே குறிப்பிட்டது N;;பால் - நடிப்பு, ஒளிப்பதிவு, இசை போன்ற கலைகளையும் வசனம் பாடல்கள் போன்ற இலக்கியத்தையும் படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்ற தொழில் நுட்பத்தையும் - திரைக்கதை எழுத்தாளன் கற்பனையில் இணைக்க, அதை வெற்றிகரமாக இயக்குநர் காட்சிப்படுத்த தயாரிப்பாளர் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் திரைப்படம்.
திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற மூன்று பேரும்தான் திரைப்படத்தின் உயிர், இயக்கம், உடல் என விளங்குகின்றனர். உயிரும் இயக்கமும் இருந்து உடல் இல்லையென்றால் யாராலும் பார்க்க முடியாது. உயிரும் உடலும் இருந்து இயக்கம் இல்லையேல் ரசிக்க முடியாது. உடலும் இயக்கமும் இருந்து உயிர் இல்லையென்றால் என்ன இருந்தும் பயனில்லை. இதுபோலத்தான் திரைப்படத்திலும் திரைக்கதை எழுத்தாளர் - இயக்குநர்- தயாரிப்பாளர் ஆகியோரின் பங்கும். இவர்களில் ஒருவர் சரியில்லை என்றாலும் மொத்தத்தில் படம் தோல்விதான்.
உலகில் எங்கும் உள்ளது போல நம் நாட்டிலும் முன்பு திரைப்படங்களை தயாரித்தவர்கள்தான் இயக்கியும் வந்தனர். அவர்களேதான் ஸ்டுடியோ அதிபர்களாகவும் இருந்தனர். மற்ற அனைவரும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர்.
காலப்போக்கில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் தனித்தனியாக தங்கள் பணிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதே வேளையில் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்பட்டு வந்தனர். அதுதான் சினிமாவின் பொற்காலம்.
நாளடைவில் நாயகர்கள் இவர்களைவிட புகழ்பெற்று வளர, இவா;கள் அந்த நடிகர்களை சார்ந்து படங்களை எடுக்க ஆரம்பிக்க, திரைத்துறையில் நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இருப்பினும் ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு அவர்களுக்கே உரிய மரியாதை கிடைத்து வந்தது.
பிறகு ஒரு காலகட்டத்தில் இயக்குநர்கள்தான் சினிமாவின் ஆணிவேர் என்ற எண்ணம் வளர்ந்தது. அதற்கேற்ப பல இயக்குநர்கள் தங்கள் திறமையைக் காட்டி சாதனைகளும் படைக்க சினிமாவில் இயக்குநர்களின் ஆதிக்கம் மேலோங்கியது.
படத்தின் உயிராக விளங்கும் எழுத்தாளர்கள் இவர்களின் அதிகாரத்தின் கீழ் காணமல் போயின. (மலையாளம் போன்ற ஒரு சில துறைகள் இதற்கு விதிவிலக்கு.)
தற்பொழுது கடந்த இருபது வருடங்களாக மீண்டும் நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது.
படங்களுக்கு உயிர் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கும் உடலாக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இங்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் திரைத்துறைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு இளைஞனும் நடிகராக வேண்டும் அல்லது இயக்குநராக வேண்டும் என்றே தங்கள் படிப்பை முடித்தும் முடிக்காமலும் தலைநகரங்களை நோக்கி வண்டி ஏறுகின்றனர். அது முடியாதவர்கள் ஏதாவது தொழில் நுட்பத்தை கற்று அந்த வழியாக திரைத்துறையில் வெற்றி பெற முயற்சி செய்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழில் எழுத்தாளர் என்றாலே அது வசனம் எழுதுபவர் என்றாகி விட்டது. தயாரிப்பாளர் இயக்குநர்களை படத்தின் கேப்டனாக மாற்ற, சில நட்சத்திரங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பைத் தர அவர்கள் இந்த நட்சத்திரங்கள் சொன்னபடி நடக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவே மற்றவர்களுக்கு மரியாதை இல்லாமல் போனதற்கு காரணமாக மாறியது.
திரைத்துறையில் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் அல்லது தயாரிப்பாளராக நிறைய நல்ல படங்களை எடுத்து வெற்றி பெறவேண்டும் என்று யாரும் வருவதில்லை. இதுதான் திரை உலகின் சாபம். இதற்கு காரணம் ஒன்றுதான். திரைத்துறையின் ஆணிவேர்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு என்ற மூன்றிற்கும் முதன்மையான மரியாதை கிடைக்காததுதான் அது. அப்படி எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திரைத்துறையில் முதல் மரியாதை கிடைத்தால் அதுதான் திரையுலகின் பொற்காலம்.



Writer, Director, Producer



As said above, when the writer unite the arts like acting, cenematogrphy, music etc. in cinema, and  technology like editing and sound recording etc., the director visualize them successfully, the producer bring it to the public.
The writer, the director and the producer are the soul, movement and body of cinema. Even if there is soul and movement,  but no body, nobody can see it. If there is soul and body, but no movement, nodody can enjoy. If there is body and movement, but not soul, there is no use. The importance of writer, director and producer is also like this. If ano one among them lacks, the film will be a flop by all means.
As usual in the world, the producers are worked as directors in the beginning. They were the studio owners. All others were under the control of them.
As time passed, producers, directors and screen writers start to excel in their own works. At the same time, they cooperate with one another. That was the golden period of cinema.
In the later years, stars became popular these three, these persons start to make films based on the stars. So the power of actors dominates others in the film industry. Still a few producers got respect as they deserved.
Then a thought rised that the directors are the back bone of films. And some directors prove their talent and achieve many records. So the domination of directors rised in the field.
The writers, who are the soul of the film found vanished under the power of directors. (A few fields like Malayalam are only exemptions)
Now, for the last twenty years, the domination of actors rised again and stand still today.
Here get no respect for the writers who gave soul and the producers who are the body of films. Only because of that, every youth came to the capitals of the industry after their studies or before itself, want to be a actor or director. A few can’t do it. So they turned towards the any technology  and try to succeed in that way.
Currently in Tamil film field, writer became only a dialogue writer.When the producers made the directors the captian of the films; some stars use that situation for their selfishness. As they give chance to the new directors, that  directors have to work as the stars told. It is happening till today. This is the main reason to destroy the respect I the field.
Nobody came to become a screen writer of producer or to make some good films. This is the curse of the film world. There is only one reason for that. That is, there is no respect for the writing, direction and production. When the writer, director and producer will get the prime respect, that will be the folden period of cinema.


சுதந்திர சினிமா



சிறிய வர்த்தகமாக ஆரம்பித்த சினிமா நாளடைவில் வெகுஜனங்களை சென்றடைய, உலகில் உள்ள அனைவரும் சினிமாவை காசு கொடுத்து பார்த்து ரசிக்க ஆரம்பிக்க, சினிமா வர்த்தகத்தின் மதிப்பு வளர ஆரம்பித்தது. அதற்கேற்ப அதை தயாரிக்கும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.
ஒரு படம் தயாரிக்கவே நிறைய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உழைப்பு தேவைப்பட்டது. இவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்க படப்பிடிப்பு நிலையங்கள், ஸ்டுடியோக்கள் உருவாக ஆரம்பித்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிக்கும் சினிமாத்துறைக்கென்றே ஒவ்வொரு தலைமை இடங்கள் உருவாக ஆரம்பித்தது.
தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப சௌகரியங்களுக்காக அந்த தலைமை இடங்களில் ஸ்டுடியோக்கள் நிறைய உருவாகி வளர்ந்தது. தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ அதிபர்களானார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் கலைஞர்கள், தொழில்நுட்பம் அனைத்தும் இருந்தது. அவற்றைக்கொண்டு தொடர்ந்து படங்கள் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளுக்கு வினியோகிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது.
நாளடைவில் ஸ்டுடியோக்கள் அல்லாத தயாரிப்பு நிறுவனங்கள் உருவாகியது. கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் படங்களைவிட பெயர் வாங்க ஆரம்பித்தார்கள்.
நிரந்தர ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக ஸ்டுடியோக்கள் அல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. பலரும் ஸ்டுடியோ வேலைகளை பார்க்க நிரந்தர ஸ்டுடியோவில் உள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற தொழில் நுட்பத் தளங்களை வாடகைக்கு எடுக்கும் முறை நிலவில் வந்தது. 
கலைஞர்களை நிரந்தரமாக மாதச்சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யும் முறை இல்லாமல் போயி படத்துக்கு படம் ஒப்பந்தம் செய்து பணியாற்றும் முறை நிலவில் வந்தது. இதனால் பல திறமையான கலைஞர்களுக்கும் பல படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையும் அமோகமாக வளர்ச்சியடைந்தது.
சினிமா என்பது ஒரு பெரிய வியாபாரம் என்றாகிவிட அதன் பகுதிகளான தயாரிப்பு, வினியோகம், திரையிடல் என்பது எல்லாமே ஒரு சில பிரபலங்களின் வட்டத்துக்குள்ளேயே இருக்க நேரிட்டது. இப்போதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் புதியதாக சினிமாவில் சாதிக்கவரும் துடிப்பான கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் கையிலிருக்கும் சிறு முதலீட்டில் இந்த ஸ்டுடியோ அல்லது பெரிய நட்சத்திரங்களின் துணையில்லாமல் மிகவும் சிறிய பட்ஜெட்டில் படமெடுத்து தங்கள் திறமையை வெளிகாட்ட ஆரம்பித்தனர். இப்படி சுதந்திரமாக எடுக்கும் படங்களை சுதந்திர சினிமா என்று அழைத்தனர்.
ஹாலிவுட்டில் இது போன்ற சுதந்திர சினிமாக்களை இன்டீஸ் என்று அழைக்கின்றனர். இந்த படங்களுக்காகவே தனிப்பட்ட விழாக்களும் வியாபாரச் சந்தையும் நடைபெற்று வருகின்றன. அதுபோல அவ்வப்போது நம் நாட்டிலும் பல சுதந்திர சினிமாக்கள் உருவாகி வந்தது. இன்றும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அவற்றில் பலவும் வெற்றி பெற்று அதில் பணியாற்றிய நடிகர்களும் இயக்குநர்களும் பெரும் புகழ் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் இது போன்ற சுதந்திர சினிமாக்கள்தான் திறைத்துறையில் பல சாதனையாளர்களை வளர்த்து வந்தது. வளர்த்தும் வருகின்றது.


Independent Cinema



When the cinema started as a small business and reached ore public in short time, all in the world started to enjoy films by paying cash, the volume of cinema business started to grow.  Many things changed in the style of producucing films also according to that.
Hardwork of many artistes and technicians needed for producing even a single film. To consolidate all these people in one place, shooting complexes and studios started to flourish. Capitals for film industry were started to form in the state capitals for each country and for each language.
Mnay studios founded in those capitals for the assistance of production and other technical aids. Producers became studio owners. The artistes, technology and all were under the control of the producers. With these facilities, films are continuously produced, distributed to the theatres and released.
In due course, production companies apart from studios also were formed. Creators, artists, technicians started to get names better than the films.
The number of films produced by the production companies became more than the films produced by the studios and started grow more. The process of using the shooting floors and other facilities in the permanent studios on rental basis to make films became popular.
Appointing artistes on monthly basis was replaced by fixing them on contract basis for film by film. So, many brilliant artistes gor chance to work in many more films. Film industry developed rapidly.
As the cinema became a huge business, production, distribution, releasing and all were under the control of a few popular personalities. Still today it is in the same manner.
In this time, the new talented artists and producers came to achieve in the film field, started to make films with low budget and without the help of these studios and big stars. And they show their talent to the world. These films made independently were started to call as independent films.
In Hollywood, the films like these are called as ‘Indies’. There are special festivals and markets for these films. Many independent films were made often in our country. And the process is going on today also.
Among that films, many became hits and the artistes and directors worked in those films became very popular. Really, these films only brought many acheivers in the film industry and bringing up today also.


Saturday 17 May 2014

வர்த்தக சினிமா



திரைப்படத் தொழில்நுட்பத்தை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்து, அதை தொடர்ந்து லூமியர் சகோதரர்கள் திரைப்படத்தை திரையிடும் வித்தையை கண்டுபிடித்து, முதன் முதலில் ஒரு படத்தை மற்றவர்கள் பார்ப்பதற்காக திரையிட்டு, அதை பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்தார்களோ அன்றே சினிமா என்பது வர்த்தகம் ஆகிவிட்டது.
தங்கள் மனத்திருப்திக்காக சிலர் குறும்படங்கள் எடுப்பதுண்டு. தங்கள் கையிலிருந்து பணம் சிலவு பண்ணி எடுக்கும் அந்த படங்கள் வியாபார நோக்கு கொண்டவையாக இருக்காது. 
சிலர் இதேபோல் சில செய்திப்படங்களை எடுப்பதுண்டு. இதையும் வியாபாரப் படம் என்று சொல்லுவதற்கில்லை. சில குறும்படங்களும் செய்திப்படங்களும் தயாரித்தவர்கள் அதை பல அமைப்புகள் மூலமாகவும் வேறு சில வர்த்தக நிறுவனங்களின் உதவியாலும் வர்த்தக ரீதியில் திரையிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அதை ஒரு பொது விதியாக குறிப்பிட முடியாது.  
சில நேரங்களில் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் ஏதாவது செய்தியை மக்களுக்கு சொல்வதற்கோ பரப்புவதற்கோ செய்திப்படங்களை அல்லது குறும்படங்களை தயாரித்து  வெளியிடுவதுண்டு. இதை பொது மக்களுக்காக செய்யும் ஒரு சேவையாக செய்கின்றனர்.
சில நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக திரைப்படங்களை எடுத்து மக்களிடம் நேரடியாகவோ மற்ற ஊடகங்கள் மூலமாகவோ கொண்டு செல்வதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றையும் சாதாரணமாக மக்கள் திரைப்படங்கள் என்று சொல்வதில்லை. கதைப்படங்களைத்தான் வழக்கமாக மக்கள் திரைப்படங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
பொதுமக்கள் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி பார்ப்பதற்காகத்தான் எல்லா கதைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே இவை அனைத்தும் வர்த்தக சினிமாக்கள் தான்
சிலர் சினிமாவை கலைப்படம், வர்த்தகப்படம் என்று இரண்டாக பிரித்து பேசுவார்கள். அவர்கள் பார்வையில் கலைப்படம் என்பது கலைத்தரம் வாய்ந்த க்ளீன் படமும், வர்த்தக படம் என்பது மசாலாக்களை நிரப்பிய பொழுது போக்கு படமும்தான்.
ஆனால் உண்மையில் இவை இரண்டும் கலைப்படம்தான்! வர்த்தக படமும்தான்!
கலைப்படம் என்று இவர்கள் கூறும் படங்களை யாரும் மனத்திருப்திக்காக எடுப்பதில்லை. இதையும் காசுக்காக விற்கத்தான் செய்கின்றனர். தியேட்டரில் டிக்கட் வாங்க கூட்டம் வரவில்லை என்றால் திரைப்பட விழாக்களில் பாஸ் வாங்க ஆட்கள் வருவதால்தான் இவை வெற்றி பெறுகின்றன.
பொழுதுபோக்கு மசாலா படங்களில் கலையும் இலக்கியமும் இருக்கிறது. அவற்றின் தரம் வேறாக இருக்கலாம். காரணம் அவை வெகு ஜனங்களின் ரசனைக்காக சில சமரசங்கள் செய்யப்பட்டது என்பதுதான்.
ஒரு விதத்தில் சொன்னால் இரண்டுமே ஹோட்டல் சாப்பாடுதான். ஒன்று தயிர்சாதம் என்றால் இன்னொன்று பிரியாணி. அவ்வளவுதான். சைவ உணவு சாப்பிட விரும்புபவர்கள் தயிர்சாதத்தை வாங்கி சாப்பிடுவார்கள். அசைவ உணவு சாப்பிட விரும்புபவர்கள் பிரியாணி வாங்கி சாப்பிடுவார்கள். சிலர் இரண்டையுமே ரசித்து சாப்பிடுவார்கள். ஆனால் சாப்பாட்டைப் பற்றி பேசும்போது, குறிப்பாக குறை கூறும்போது ஹைதராபாதி பிரியாணியையும் மலபார் பிரியாணியையும் ஒப்பிட்டு பேசலாமே தவிர, பிரியாணியையும் தயிர்சாதத்தையும் ஒப்பிட்டு, அது சிறந்தது இது கேவலமானது என்றெல்லாம் விமர்சனம் செய்வது சரியல்ல.
எல்லா வர்த்தக படங்களும் தயாரிப்பது ஒரே முறையில்தான். அதன் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோரின் ரசனைக்கேற்ப அந்த படத்தின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

படத்தின் கதைக்கேற்ப அதை படமாக்கும் விதத்தில்தான் அது சிறிய பட்ஜெட் படமா பெரிய பட்ஜெட் படமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் சிறிய பட்ஜெட் படமானாலும் பெரிய பட்ஜெட் படமானாலும் எல்லாமே வர்த்தகப் படங்கள்தான்.

Commercial Cinema



When Thomas Alva Edison invent film technique, Lumiere borthers invent the technique of film projection following that, screen a film in front of others for the first time, and started to collect money from the viewers, the cinema became commercial on that day itself.
A few people taking short films for their own satisfaction. The films taken with their own money like that may not be aimed at business.
A few taking some documentaries like this. These are also not commercial films. It is true that producers of a few documentaries and short films are screening the films through many institutions and associations and erning money. But, it cannot be taken as a general rule.
Sometimes the government or social service institutions will produce and release documentaries or short films to tell or propogate any message to the public.
Some institutions used to take films and bring to the public directly or through the medias. These also can’t be treated as ‘Films’. Usually feature films are only referred as ‘films’
All the films are produced only for the public to pay the tickets and watch. So, all these are commercial films.
Some persons split the films in two catogaries ie., art films and commercial films. In their view point art films are clean films with artistic value nad commercial films are entertainers with all mass ingredients.
But, really both of them are art films! and commercial films too!
The art films as they said, not produced by anyone only for satisfaction. These are also made to sell for money. If there is no crowd for purchasing tickets from theatres, the public came to buy passes for the film festivals. That only make them success.
The entertainer mass films have art and literature in them. May be the quality of them different. Because they were done with some compromises to attract more public.
In short, both of them are hotel food. One is Curd rice, other is Biriyani. The vegetarians will like to eat Curd rice. Non vegetarians will like Biriyani. Some persons eat both. When talking about food, especially when criticizing, may compare Hyderabadi Biriyani to Malabar Biriyani, but should nt compare Biryani and Curd rice. It is not fair to criticize that one is good or other is bad.
All the commercial films are produced in same manner. The quality of each one will differ according to the writer, director and producer.
Whether one is small budget film or hig budget film will be decided based on the making according to its content. Even the film is too big in budget or too small, all the films are commercial films.


Wednesday 14 May 2014

திரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்



சில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது என்பதுதான் அவர்களது வாதம்.
வேறு சிலர் திரைப்படம் என்பதே ஒரு இலக்கியம் தான் என்று சொல்கின்றனர். இரண்டையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்பது அவர்களது வாதம். 
இன்னும் சிலர் திரைப்படமும் இலக்கியமும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு துறைகள் என்கிறார்கள். இரண்டையும் இணைத்து பேசவோ ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பேசவோ இயலாது என்கின்றனர்.
திரைப்படம் என்பது அசைவுகளின் படப்பதிவாக மட்டுமே ஆரம்பித்தது. தாமஸ் ஆல்வா எடிசன் சினிமா என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். அதன்பிறகு லூமியர் சகோதரர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை முதன் முதலில் படமாக எடுத்துக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து சினிமா படிப்படியாக வளர்ந்து வந்தது. 
செய்திப்படங்களும் குறும்படங்களும் இருந்தாலும் கதைப்படங்களைத்தான் நாம் இங்கே திரைப்படமாக பார்க்கிறோம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். அந்த வகையில் ஆரம்ப நாட்களில் படங்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் அடிப்படையாக்கி மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. பிறகு சமூக கதைகளை படமாக்க ஆரம்பித்தார்கள். இலக்கியங்கள் வளர வளர அவற்றிலிருந்து கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கினார்கள். பிறகு திரைப்படம் எடுப்பதற்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்ட திரைக்கதைகளை அடிப்படையாக்கி படங்களை எடுத்து வந்தனர். அவை எல்லாம் சரித்திரத்தின் ஒரு பகுதிதான்.
திரைப்படங்கள் வர்த்தகரீதியில் வெற்றி பெற ஆரம்பித்ததும், அதிக எண்ணிக்கையில் வெகு ஜனங்களை ஈர்க்க வேண்டும் என்பது திரைப்படத் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையாக மாறியது.
இதற்காக கதையின் நடையில் மாற்றங்கள் கொண்டு வர ஆரம்பித்தனர். தொடர்ந்து திரைக்கதை என்ற இலக்கிய வடிவம் வளர திரைப்பட இலக்கியம் என்ற ஒரு துறை தனியாக உருவானது.
திரைப்படம் என்பது முற்றிலும் காட்சி வடிவம்தான் என்றாலும் ஒளியுடன் ஒலியும் தொழில் நுட்பத்துடன் இணைந்து வருவதால் திரைப்படத்தின் வெற்றிக்கு கதை, வசனம் மட்டுமல்ல பின்னணி இசையும் மற்ற ஒலிச்சேர்க்கைகளும் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தன.
திரைப்படத்திற்கென்று ஒரு மொழி உருவாகி வளர்ந்தது. அத்துடன் திரைப்பட இசை போன்ற கலைகளும் இணைந்தே வளர்ந்தது.
திரைப்படம் என்பது காட்சிகளையே முதன்மையாக கொண்டது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துக்களை முழுவதுமாக சொல்ல இலக்கியம் அதாவது வசனங்கள் இன்றி அமையாது என்ற நிலை ஏற்பட்டது. மௌனப்படங்களிலிருந்து பேசும் படங்கள் உருவானதும் இந்த நிலை மேலும் வலுப்பெற்றது.
ஒலியின் பங்கு திரைப்படத்தின் தரத்திற்கும் வெற்றிக்கும் பெரிய பக்கபலமாக அமைந்தது. அது திரைப்படங்களில் பின்னணி இசைக்கு மட்டுமன்றி பாடல்களுக்கும் ஒரு இடத்தை கொடுத்தது.
குறிப்பாக நமது இந்திய நாட்டில் திரைப்படப் பாடல்கள் என்பது மிகப்பெரும் சக்தியாகவே வளர்ந்தது. நம் நாட்டில் பல மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசினாலும், பல இடங்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றினாலும் நமது நாடு மொத்தமும் ஒரு ஒற்றுமையை காண முடியும். அதுதான் பாடல்கள்!
உலக சினிமாவில் பல மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களிலும் பாடல்கள் இடம் பெற்று வருவதுண்டு. அந்தந்த நாட்டு கலாச்சாரங்களுக்கு ஏற்ப பாடல்கள் உருவாக்கப் படுகின்றன.
இருந்தாலும் கதையுடன் இணைந்து பாடல்கள் ஒரு படத்தின் முக்கிய நாடியாக திகழ்வது நமது நாட்டில் மட்டும் தான்.
நடிப்பு, ஒளிப்பதிவு, இசை போன்ற கலைகளும் வசனம், பாடல்கள் போன்ற இலக்கியமும் மட்டுமன்றி படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்ற தொழில் நுட்பங்களும் ஒன்றாக கலந்ததுதான் திரைப்படம்
இவற்றை இணைப்பது திரைக்கதை எழுத்தாளரும் வெற்றிபெறச் செய்வது இயக்குநரும்தான்

இந்த எழுத்தாரையும் இயக்குநரையும் சரியாக தேர்ந்தெடுத்து, இந்த கலை-இலக்கிய வடிவத்தை வர்த்தக வடிவமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்லுபவர்தான் படத்தின் தயாரிப்பாளர்.

Film, Literature, Film Literature

Some sholars are saying that the film and literature are totally inseperable.
Some others are saying that film itself a literature. They are saying that there is no need to see the both differently.
A few others are saying that film and literature are entirely different fields. Can’t compare each tother or unite the both.
Cinema was started as just recording the movements visually. Thomas Alva Edison invented the technology of cinema. Lumiere brothers shot the scene of some labours coming out of a factory for the first time. Then the cinema grown up step by step.
Even the documentaries and short films are there, here we describe the feature films only as ‘films’. In that context, only the classics and epics were made as films in the beginning. Then the social subjects were started to be filmed.  As the literature growing up, stories were selected from that for film making. Then started to make special stories written wxclusively for film making. These are all in the history.
When the films are becoming successful commercially, attracting many viewers needed for the growth of film industry.
For that, many changes were started to made in film story telling. Following this, a literary form ‘screenplay’ started to grow. And an field called as film literature become a separate one.
Film is totally a visual media. Still it is jintly came out with light, sound and other technology. So, apart from story and dialogue background music and other sound effects also become important criterias for the success of films.  
A language formed for the cinema and it was started to grow up. And arts like film music also grown up parallelly.
Cinema is basically made on visuals. Still, literature, that means dialogues needed to tell the matters clearly. When films changed to talkies from silent movies, this impact became more evident.
The participation of sound became very big support for the quality and success of films. That gives a place for not only the background music but also for songs in the films.
Especially, in our India, film songs became a very big power itself. Films are being produced in many languages in our nation.
Even the ctitizens talk separate language in each state, even following different culture, we can see a unity across the nation. That is song!
There are songs in films made in many languages in the world. The songs will be made according to the culture of that nations.
Still the songs became inseperable from the story and became like the nerves of a body in our nation.
Not only arts like acting, cinematography, music etc., and literature like dialogues and lyrics, but also technology like editing, cinematography joint together in films.
The screen writer unite all these and the director make them success.

A producer is one who select the writer and director properly, make the art-literature form to a commercial form and bring it to the public.

To Film Friends




I have been conducting this Film Literature Confluence successfully for the past two and a half years continuously with the aim of making a friendship circle amongst the Film Fraternity and also uniting the Film and Literary fields together.
In the confluences, we have been discussing not only about the special, popular and award winning films, but also about good commercial hit films and literary works. We have been discussing not only about quality and literature, but also about the technology, marketing and advertising of the films.
I used to invite a few guest and friends for the function. And many of the friends and others in the film industry participated in the confluences. Of course many of them had idea of film and literature. And they are interested in making the film and literary field united.
But, I want to spread this idea and need of uniting the film and literary fields practically to all from new comers and the film creators who had no good exposure to the literature. They should know the impact of literature on good and hit films. For that I want to make all to unite with this confluence.
I want to share my ideas and intentions to conduct the Film Literature confluence to a wide area. Inviting all to my function is found not enough for that. I think it is better to go the new comers and film lovers to share the ideas than inviting them to the function conducted by me. Hence your help and co-operation hereby solicited.
If any friends group, film clubs, film institutes or any association would like to conduct discussions or meets on any topic related to film and literature, film making marketing of films etc., I will be very happy to participate in that events on behalf of Film Literature Confluence.

So, please conduct a meet related to film and literature and kindly invite to that events.       

திரை நண்பர்களுக்கு


திரைப்படத்துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்க வேண்டும், அத்துடன் திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற லட்சியத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற இந்த நிகழ்;வை நான் கடந்த இரண்டரை வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
இந்த சங்கமத்தில் சிறந்த> புகழ்பெற்ற> விருதுபெற்ற படங்களைப்பற்றியும் இலக்கியங்களைப்பற்றியும் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாக வெற்றிபெற்ற நல்ல படங்களைப்பற்றியும் இலக்;கியங்களைப்பற்றியும் விவாதிக்;கப்படுகின்றது. திரைப்படங்களின் தரம், இலக்கியம் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் தொழில்நுட்பம்> வியாபாரம்> விளம்பரம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்படுகின்றது.
பொதுவாக. சில விருந்தினர்களையும் நண்பர்களையும் தான் இந்த சங்கமத்திற்கு அழைப்பேன். திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நண்பர்களும் மற்றவர்களும் இந்த சங்கமங்களில் பங்குகொண்டனர். அதில் பலரும் திரைப்படம் மற்றும் இலககியம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்கள் தான். அதுவுமின்றி அவர்கள் திரைப்படத்துறையும் இலக்கியத்துறையும் இணையவேண்டும் நினைப்பவர்கள் தான்.
ஆனால். அந்த எண்ணத்தையும் அனைத்து புதுமுகங்கள் மத்தயிலும் இலக்கியத்துறைபற்றி அவ்வளவாக தொடர்பு வைத்துக்கொள்ளாத திரை படைப்பாளிகள் மத்தியிலும் திரைப்படம் இலக்கியத்துறைகளை நடைமுறையில் இணைக்கவேண்டியதின் அவசியத்தையும் பரப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நல்ல மற்றும் வெற்றிப்படங்களில் இலககியத்திற்கு உள்ள தாக்கத்தை அவர்களுக்கு சொல்லி புரியவைக்கவேண்டும். அதற்காக அவர்கள் அனைவரையும் இந்த சங்கமத்தில் இணைக்க ஆசைப்படுகிறேன்.     
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் கருத்துக்களையும் நோக்கத்தையும் பெரிய வட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். அதற்கு அனைவரையும் இந்த சங்கமத்திற்கு அழைப்பது என்பது போதாது. நான் நடத்தும் சங்கமத்திற்கு அவர்களை அழைப்பதை விட புதுமுகங்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம் சென்று இந்த எண்ணங்களை பங்குவைப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். இதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.
ஏதாவது நண்பர்கள் குழு> திரைப்பட மன்றம்> திரைப்பட கல்லூரி> அல்லது ஒரு அமைப்பு திரைப்படத் தயாரிப்பு> திரைப்பட வியாபாரம் போன்று திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமான எந்த ஒரு தலைப்பிலும் கலந்துரையாடல்> கூட்டம் அலலது விவாதம் நடத்துவதாக இருந்தால்> அதில் திரைப்பட இலக்கியச் சங்கமம் சார்பில் பங்கு பெறுவதில் நான் சந்தோஷமாக உள்ளேன்.

அதனால் தயவுசெய்து திரைப்படம் மற்றும் இலக்கியம் சம்பந்தமாக ஒரு நிகழ்வை நடத்துங்கள் அதற்கு என்னை அழையுங்கள்.      

Monday 12 May 2014

திரைப்படம் ஒரு அறிமுகம்




1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே (துரடநள ஆயசநல) என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக உருமாற்றத் திட்டமிட்டார். அதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் (தகடு) இயங்கும் ஒளிபுகாத இருட்டறையாக அமைத்தார். படம் பதியும் தகட்டுச்சுருள், பல்சக்கரங்கள் உதவியுடன் ஒரு வினாடியில் பலமுறை நகர்வதற்கான ஒரு பொறியையும் உள்ளே அமைத்தார். அதைத் துப்பாக்கியின் குதிரைப்பகுதியின் விசையில் இணைத்தார். குதிரையை விரலால் இழுத்தால், தகட்டுச் சுருள் அடுத்தடுத்து நகர்ந்து, வாpசையாகப் படம் பதியுமாறு உருவாக்கினார்.
இந்தக்கேமராவால் வினாடிக்குப் பதினாறு படங்கள் பிடிக்க முடியவில்லை. வெறும் 12 படங்கள் மட்டும் பதிவாகக்கூடிய வேகத்திலேயே அது இருந்தது. எனினும், திரைப்படக் கேமரா கண்டுபிடிப்பில் இது ஒரு மைல்கல் என்று கூறலாம். இதனை வைத்து டாக்டர் மாரே 1889இல் பாhPஸ் நகர விழாவில் மக்களைத் தம் துப்பாக்கிக் கேமராவால் படம்பிடித்து, அந்தப்படத்தை மக்கள் முன் போட்டுக்காட்டினார். அது இயல்பான சலனமாக இருக்கவில்லை. தரம் குறைந்த படப்பிடிப்பு என்றாலும் அதுதான் உலகின் முதல் படப்பிடிப்பு. ஷுட்டிங்-கன்  என்ற வேட்டைத் துப்பாக்கியைக் கேமராவாக உருவாக்கிப் படம் பிடித்ததை நினைவு கூர்வதாகத்தான் இன்றைக்கும் சினிமாப் படபிடிப்பை ஷுட்டிங் என்று அழைக்கிறோம்.
டாக்டர் ஜுல்ஸ் மாரேயின் உதவியாளராக இருந்த ஜர்ஜெஸ் டெமனி என்பவர், அந்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவில் பல முன்னேற்றங்களைச் செய்து வடிவமைத்தார். அப்படியும் வினாடிக்கு 12 படங்களுக்கு மேல் படம் எடுக்க முடியவில்லை. அவர் அதனை காமண்ட் என்பவாpடம் 1893இல் ஒப்படைத்தார்.
இதே காலத்தில் அமொpக்க நியு+யார்க் நகாpல் ஒளி விளக்கு, ஒளிப்படம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் தம் உதவியாளரான கே.எல்.டிக்ஸனுடன் சேர்ந்து சலனப்படக் கேமராவைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக முயன்றார். எட்வர்டு மைபிhpட்ஜின் சாதனைகளும், டாக்டர் மாரே கண்டுபிடித்த வேட்டைத் துப்பாக்கிக் கேமராவும் அவருள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. டாக்டர் மாரேயின் கேமராவால் ஒரு வினாடிக்கு 12 படங்கள் பிடிப்பதே சிரமமாக இருந்தது. சலனப்படம் இயல்பானதாகத் தோன்ற வேண்டுமானால் ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதிவது முக்கியம் என்பதை தாமஸ் ஆல்வா எடிசன் உணர்ந்திருந்தார்.
அந்தக் கேமராவுடன், படம்பிடித்த படச்சுருளைப் போட்டுக்காட்டப் புரஜெக்டர் என்ற படங்காட்டிக் கருவியையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு முயன்றார். எடிசனும் டிக்ஸனும் எடுத்த முயற்சியில் தோல்வியையே சந்தித்தனர். ஒரு வினாடிக்கு 16 படங்களைப் பதியும் கேமராவை உருவாக்குவது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இருந்தாலும் எடிசன் தன் முயற்சியில் பின்வாங்கிவிடவில்லை.
இந்த காலகட்டத்தில்தான், அதாவது 1888-1889 ஆண்டுகளில், ஜார்ஜ் ஈஸ்ட்மென் மற்றும் டாக்டர் ஹன்னி பால்குட்வின் இருவரும் சேர்ந்து செல்லுலாய்டு பிலிம் சுருளைக் கண்டுபிடித்து விற்பனைக்கு விட்டனர். அந்தப்படச்சுருள் இப்போதுள்ள மாதிhpயில்லை. பிலிமின் அகலம் நமது சுட்டு விரல் நீளத்திற்கு இருந்தது.
எடிசன் அந்த செல்லுலாய்டு படச்சுருள்களை வாங்கி ஆராய்ந்தார். அதில் படங்களைப் பதிவுசெய்வது எளிமையாகவும் துல்லியமாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அந்தப் படச்சுருளுக்கு ஏற்பக் கேமராவைத் திருத்தி வடிவமைத்தார். வினாடிக்கு 16 படம் பிடிக்கும் கேமரா தயாரானது.
1891ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் நாள் அந்தக் கேமராவின் உhpமைக்கு எடிசன் விண்ணப்பித்து, 31-08-1891இல் அவர் பெயரில் கேமரா உரிமை பதிவானது.
தாமஸ் ஆல்வா எடிசன் தம் கேமராவில் பெண்களின் நடனத்தை பதிவு செய்தார். ஒரு சர்க்கஸ் கம்பெனியின் அனுமதியோடு, அந்தக் கம்பெனியின் சர்க்கஸ் வித்தைகளைப் படம்பிடித்தார். அன்றைக்குப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரராக இருந்த ஜேம்ஸ் கே.கார்பெட் என்பவரை இன்னொருவரோடு சண்டையிடச் செய்து அந்தக் குத்துச் சண்டைப் பந்தயத்தையும் படம்பிடித்தார். இவ்வாறு மக்கள் விரும்பிப் பார்க்கும் சுவையான நகர்வுக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டார். ஆனால், அந்தப்படங்களை பொதுமக்கள்முன் திரையில் போட்டுக்காட்டும் புரஜெக்டரை அவரால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெட்டிக்குள் படச்சுருளை ஓடவிட்டு, ஒரு லென்ஸ் வழியாக ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். கினிட்டோஸ்கோப் என்று அதற்குப் பெயரிட்டார்.
கினிமாஎன்ற கிரேக்க மொழிச் சொல்லுக்கு அசைவு, நகர்வு, சலனம் என்பது பொருளாகும். கினிமாதான் ஆங்கிலத்தில் சினிமா ஆனது. தாமஸ் ஆல்வா எடிசன் கினிமா என்ற கிரேக்கச் சொல்லை அடிச்சொல்லாக வைத்துக் கினிட்டாஸ்கோப் என்று இதற்குப் பெயர் சூட்டினார்.
இதே காலகட்டத்தில் அமொpக்க ஐக்கிய அரசாங்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றி வந்த சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ் (ஊ.குசயnஉளை துநமெiளெ) என்பவா; சலனப்படத்தின் மீது கொண்ட தணியாத ஆர்வத்தால், பெரிதும் முயன்று வினாடிக்கு 16 படம் பிடிக்கும் கேமராவையும், படங்காட்டும் கருவியான புரஜெக்டரையும் கண்டுபிடித்தார்.
அந்த காலத்தில் உலகின் பலநாடுகளில், செல்லுலாய்டு பிலிமில் பதிந்த ஒளிப்படத்தை மாஜிக் லேண்டர்ன் எனப்படும் விளக்கின் மிகு ஒளியில் திரையில் அசையாத படங்களைக் காட்டிப் பொழுது போக்கி வந்தனர். அதில் வட்டவடிவ அளவில் படம் தொpயும். அதே மாஜிக் லேண்டர்ன் விளக்கைப் பயன்படுத்தி ஜென்கின்ஸ் திரையில் சலனப்படத்தைக் காட்ட முயன்றார்.
இதே சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ்தான் பிற்காலத்தில், அதாவது 1925இல், அமெரிக்காவில் வீடியோவைக் கண்டுபிடித்தவர். இவர் 1894இல், தமது வீட்டில் ஒரு திரைப்படம் காட்டப்போவதாக தன் நெருங்கிய நண்பர்களை அழைத்தார். நண்பர்கள் அனைவரும் அவரது வீட்டில் கூடினர். ஹாலின் ஓரத்தில் ஒரு வௌ;ளைத்திரை கட்டப்பட்டிருந்தது. எதிரே புரஜெக்டர் இருந்தது. நண்பர்கள் புரியாமல் திகைத்துப் பார்த்தபடி இருந்தனர். அவர்களைப் பார்த்து ஜெர்கின்ஸ், ‘இப்போது உங்களுக்கு நாட்டியக்காரிஅன்னபெல்ரி என்ற சினிமாவைக் காட்டப்போகிறேன் என்று கூறி ஹாலின் கதவைப் பூட்டி விளக்குகளை அணைத்தார். திரையில் அழகான இளம்பெண் ஆடினாள். நண்பர்கள் அனைவரும் திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடப் படம்தான் அது. படம் முடிந்ததும் விளக்குகளைப் போட்டார். நண்பர்கள் அதனை நம்ப மறுத்தனர். தங்களுக்குத் தெரியாமல் அந்த ஹாலில் ஒரு பெண்ணை ஒளித்து வைத்து ஆடச்செய்ததாகக் கூறினார்கள். மேஜிக் செய்ததாக சிலர் கூறினர். மொத்தத்தில் அவரை மோசடிக்காரன் என்று குற்றஞ்சாட்டிவிட்டு அவரைத் திட்டியவாறே கலைந்து சென்றனர்.
சில நண்பர்களுக்கு முன் நடந்திருந்தாலும், உண்மையில் மக்கள் முன் திரையில் காட்டிய உலகின் முதல் திரைப்படம் இதுதான். ஆனால் வரலாறு இதனை உலகின் முதல் திரைப்படம் என்று ஏற்கவில்லை. காரணம், இந்த நிகழ்ச்சி முறைப்படி செய்தியாளர்கள் அறிய பதிவுசெய்யப்பட்டு நிகழவில்லை.
அந்;த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸின் அறிவியல் சாதனையை உணராமல் பிதற்றிவிட்டு போனாலும், அவர்களில் ஒருவர் மட்டும் அவரது அறிவியல் திறனை அங்கீகாpத்தார். அவர்தான் தாமஸ் ஆர்வார்ட் என்பவர். அவர் தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர். ஆர்வார்ட் அந்த புரொஜக்டாpல் இன்னும் முன்னேற்றங்களை செய்யலாமே என்று ஜென்கின்ஸை கேட்டபோது, அவர் தன்னிடம் அதற்கு பணமில்லை என்றார். அந்தக் கருவியை தனக்கு விலைக்கு கொடுக்க முடியுமா என்று தாமஸ் ஆர்வார்ட் கேட்டார். வறுமையில் இருந்த ஜென்கின்ஸ் சம்மதித்தார். வெறும் 2500 டாலரைக் கொடுத்துவிட்டு அந்தக் கருவிகளையும் அவற்றின் உரிமைகளையும் ஜென்கின்ஸிடமிருந்து தாமஸ் ஆர்வார்ட் விலைக்கு வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் எடிசனைக் காண ஓடினார். தாமஸ் ஆல்வா எடிசன் வியந்துபோனார். அக்கருவியில் சில முன்னேற்றங்களைச் செய்து உலகின் முதல் திரைப்படத்தை காட்டிவிடலாம் என்று முனைந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக முந்திக்கொண்டனர் லூமியர் சகோதரர்கள்.        
லூமியர் சகோதரர்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியே வரும் தொழிலாளர்களை படம் பிடித்து அதை மற்றவர்களுக்கு இருட்டறையில் படம் போட்டு காட்டினர். சில வினாடிகளே ஓடினாலும் அதுதான் உலகின் முதற் திரைப்படம்.

இதுபோன்ற சிறு சிறு படங்கள் பலவற்றை எடுத்த லூமியர் சகோதரர்கள் படம்பிடித்து அதை உலகில் உள்ள பல நகரங்களுக்கு சென்று மக்கள் முன் திரையிட்டுக் காட்டினார்கள். அதில் ஒரு ப்ளாட்பாமில் வந்து நிற்கும் ரெயிலின் படம் மிகவும் பிரபலமாகியது. பலரையும் திரைப்படத் துறைக்கு ஈர்த்தது.