Saturday 5 March 2016

இறுதிச்சுற்று, விசாரணை மற்றும் சேதுபதி



இதுவரை நடந்த பதினைந்து நிகழ்வுகளில் ஒவ்வொன்றும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிக்கட்டாக இருந்திருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது நடக்க இருக்கும் பதினாறாவது நிகழ்வும் இந்தச் சங்கமத்தை தன் வளர்ச்சிப்பாதையில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பல சோதனை முயற்சிகளுக்குப் பின்னால் சங்கமத்தின் நகழ்ச்சி நிரல் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அடைந்திருப்பது மிகவும் மகிழ்வை தருகிறது. அந்த வடிவத்தின் அடிப்படையில் இந்த சங்கமத்திற்காக 2016 பிப்ரவர மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலிருந்து இறுதிச்சுற்று’, ‘விசாரணை’, ‘சேதுபதிஆகிய மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இறுதிச்சுற்றுபடம் ஜனவரி மாதம் வெளிவந்திருந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தை ஜனவரி மாத நிகழ்வில் தேர்வு செய்ய முடியாமல் போனது. அதனால் அதை இந்த மாதப்படங்களுடன் இணைத்துள்ளோம்.



இறுதிச்சுற்று

இந்த வருடத்தில் வெளிவந்த உண்மையான, தரமான, வெற்றிபெற்ற முதல் தமிழ்படம் என்று இந்த படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். அப்படி விளம்பரம் செய்வதற்கு எல்லா விதத்திலும் தகுதியான படம் தான் இந்த இறுதிச்சுற்று. இந்த படம் நடிப்பு, எழுத்து, இயக்கம், மற்ற தொழில்நுட்பங்கள் அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறது. அது மட்டுமின்றி இதை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து பெரும் வெற்றியையும் பெற்றிருக்கின்றனர். இந்த படத்தை நமது சங்கமத்தில் அலசுவதற்காக தேர்ந்தெடுத்ததில் பெருமைகொள்கிறோம்.




விசாரணை

உலக அளவில் பல விருதுகளை குவித்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த விசாரணை’. இந்த மாதப்படங்களின் தேர்வு பட்டியலில் இதை சேர்த்ததில் எந்த அதிசயமும் இருக்காது. ஏற்கனவே பல மேடைகளில் இந்த படத்தைப்பற்றிய கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் நடந்திருக்கின்றன. நடந்துகொண்டும் இருக்கின்றன. இருப்பினும் மற்ற இருபடங்களுடன் இந்த படத்தையும் நமது சங்கத்தில் பேசுவதற்காக தேர்வு செய்து கவுரப்பதில் பெருமைப்படுகிறோம்.



சேதுபதி

வியாபாரரீதியாக பலபடங்கள் இந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த படங்களிலிருந்து இந்த சேதுபதியை வேறுபடுத்தி காட்டுவது இந்த படத்தை எடுத்த விதமும், இதுபோன்ற போலீஸ் படங்களுக்குள்ளே இது காட்டிய வித்தியாசமும் தான். இந்த படத்தையும் நமது சங்கமத்தின் கலந்துரையாடலுக்கு தேர்வுசெய்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இந்த படங்களின் படைப்பாளிகள், இலக்கியவாதிகள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் இந்த சங்கமத்தில் பங்குகொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து, கலந்துரையாட இருக்கிறார்கள்.
இந்த சங்கமத்தை வெற்றிபெறச்செய்ய நண்பர்கள் அனைவரையும் தங்கள் நண்பர்களுடன் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post