Friday 13 May 2016

மேதின பாடல்



இந்த உலகில் மதம், நாடு மற்றும் பண்பாடு வித்தியாசமில்லாமல் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் ஒரே திருவிழாநாள் மேதினம் மட்டும்தான். பல நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படுவதில்லை. ஒரு மதத்தை பின்பற்றும் பல நாடுகளில் மற்ற மதங்கள் சம்பந்தமான திருவிழாக்களின் பெயர்கூட தெரியாது. ஆனால், எல்லா நாடுகளும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கான நாளை கொண்டாடுகின்றன.
சாதாரணமாக மேதினத்தையொட்டி எல்லா இடங்களிலும் ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டிலும், அரசியல் காட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்ககள் இதுபோன்ற ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்துகின்றன. இதுபோன்டற விழாக்களில் சாதாரணமாக, திரைப்படப் பாடல்கள் குறிப்பாக சமூகப்பாடல்களும் அரசியல் கட்சிகளின் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல் கட்சிக்கென்று குறிப்பிட்டு ஒரு பாடல் இல்லையென்றாலும், மேதினவிழாக்களில் திரைப்படங்களில் வரும் சமூகப்பாடல்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இந்த விழாக்களில் எம்.ஜி.ஆர். பாடல்கள் தான் பிரபலமாக இருந்தன.
இந்த விஷயத்தில் மேதினத்தை குறிப்பிட்டு திரைப்படங்களில் வந்த சில பாடல்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த பட்டியலில் மிகவும் பிரபலமானது, “சிகப்பு மல்லிபடத்தில் இடம்பெற்றஎரிமலை எப்படி பொறுக்கும்பாடல்தான்!
மேதினத்தை நேரடியாக பாராட்ட இதைவிட சிறந்த ஒரு பாடல் இருக்காது. இந்த பாடலை வைரமுத்து எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள். இந்த படத்தை ஏவிஎம் தயாரிக்க, ராமநாராயணன் அவர்கள் இயக்கியிருந்தார்.
இந்த படத்தை எடுத்ததுபற்றி திரு ராமநாராயணன் என்னிடம் பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார். குறிப்பாக இந்த பாடலை ஒலிப்பதிவு செய்ததுபற்றியும் படமாக்கியதுபற்றியும்! அவற்றைவிட அந்த படம் வெளிவந்த சமயத்தில் அந்த பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி அவர் ஒரு முறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த படத்தை பார்க்க பல கம்யூனிஸ்ட் தோழர்களும் குடும்பத்துடன் கட்டைவண்டிகளை கட்டிக்கொண்டு கிராமங்களிலிருந்து ஒரு ஊர்வலம் போலவே அந்த படம் ஓடும் பக்கத்து பட்டணங்களுக்கு வருவார்களாம்!
அந்த சமயத்தில் எங்கள் ஊரிலும் நான் இதை அனுபவித்திருக்கிறேன். இந்த மேதினம் அந்த மலரும் நினைவுகளை மனதில் கொண்டுவந்திருக்கிறது. அந்த பாடலுக்கு நன்றி! அந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு நன்றி! திரு ராமநாராயணனின் ஆன்மாவுக்கு நன்றி!


No comments:

Post a Comment

Let others know your opinions about this post