Saturday 15 April 2017

குறும்பட ஆய்வரங்கம்



திரைப்பட இலக்கியச் சங்கமம்
நடத்தும்

6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வு (மே 2017)

குறும்பட ஆய்வரங்கம்

இது விருதுகளை பெறுவதற்கான மேடை மட்டுமல்ல..

உரிய கவுரவத்தை பெற்றுத்தருவதற்கும்திறமைகளை உரிய இடத்தில் கொண்டுசேர்ப்பதற்குமா\ன களம்!

திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுடன் நமது சங்கமத்தின் 6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக குறும்பட ஆய்வரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதல் அரங்கம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. (விழா நடைபெறும் இடம், நாள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.)

இந்த ஆய்வரங்கத்தில் திரையிடுவதற்கான குறும்படங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விழாவில் தங்களது படங்களை திரையிட விரும்புவர்கள் தங்கள் படத்தின் குறுந்தகட்டை (DVD) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பத்தை நேரில் தர தொடர்புகொள்ளவேண்டிய எண்: 9445376497 (கமலபாலா பா.விஜயன்)




(விண்ணப்ப வடிவம்)

திரைப்பட இலக்கியச் சஙகமம்
குறும்பட ஆய்வரங்கத்தில் பங்குபெறுவதற்கான விண்ணப்பம்

குறும்படத்தின் பெயர்:
நிறுவனம்:
தயாரிப்பாளர்:
இயக்குநர்:
எழுத்தாளர்:
----------------
(மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்கள்)

யூட்யூப் லிங்க் (இருந்தால்):
படம் வெளியான ஆண்டு:
இதுவரை பெற்ற விருதுகள்:


திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தும் குறும்பட ஆய்வரங்கத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எங்களது படத்தையும் திரையிட வேண்டுகிறேன். இப்படத்தின் திரையிடல் மற்றும் தொடர்நிகழ்வுகள் சம்பந்தமான முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இந்த சங்கமத்தின் சட்டதிட்டங்களை ஏற்க சம்மதிக்கிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.


தயாரிப்பாளர்/இயக்குநர்

(பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியுடன்)

No comments:

Post a Comment

Let others know your opinions about this post