நான் திரைப்படத்துறையில் இயக்குநராக
பணியாற்றி வருகிறேன். திரைப்படத்துறையில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்கும் முயற்சியாகவும் திரைப்படத்துறையையும்
இலக்கியத்துறையையும் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் திரைப்பட இலக்கியச் சங்கமம்
நடத்தி வருகின்றேன். இதில் திரைப்படம் மற்றும் இலக்கியத் துறையைச் சார்ந்த
பிரமுகர்களும் நண்பர்களும் பங்குபெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில் நான் இந்த
சங்கமத்தை பத்து முறை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன்.
இந்த முறை வரும் சனிக்கிழமை மாலை நடக்க இருக்கும்
சங்கமத்தில் 2013 பிப்ரவரி 14 முதல் ஜூன் 30
வரையில் (கடந்த சங்கமம் முதல் இந்த சங்கமம் வரையில்) வெளியான தமிழ் படங்கள் பற்றி
விவாதிக்க இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் மொத்தம் 62 படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன! இவை எல்லாவற்றையும்
ஒரே நேரத்தில் முழுவதுமாக விவாதிப்பது கடினம் என்பது மட்டுமல்ல தேவையற்றதும் கூட.
அதனால் இந்த சங்கமத்தில் விவாதிப்பதற்காக சில படங்களை மட்டும் தேர்ந்தேடுத்த்துள்ளேன்.
தேர்ந்தெடுத்த
படங்கள்:
வனயுத்தம்
ஹரிதாஸ்
பரதேசி
சென்னையில் ஒரு நாள்
உதயம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா
குட்டிப்புலி
நேரம்
எதிர்நீச்சல்
சூதுகவ்வும்
தில்லு முல்லு மற்றும்
தீயா வேலை செய்யணும் குமாரு.
இந்த படங்களின் படைப்பாளிகளே, தயாரிப்பாளர்களே ..
இந்த நிகழ்வில் உங்களுடைய படத்தைப்பற்றி பேச இருப்பதால் நீங்களும் இந்த சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன்.
இந்த நிகழ்வில் உங்களுடைய படத்தைப்பற்றி பேச இருப்பதால் நீங்களும் இந்த சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறேன்.
இதையே எங்கள் அழைப்பிதழாக ஏற்று இந்த
சங்கமத்தில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post