Tuesday 9 July 2013

நம்பிக்கை- தன்னம்பிக்கை


நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் ஆரம்பிக்கும்போது முதலில் சங்கமம் நடத்துவதற்கான மண்டபத்தையும் தேதியையும் நிச்சயித்தபின் தான் அனைவரையும் அழைக்க ஆரம்பித்தேன். அப்போது சிறப்பு விருந்தினர்களாக யாரையுமே நான் அழைத்திருக்கவில்லை.
அனால் என்னுடைய இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்று திரு பாலுமகேந்திரா அவர்கள் தானாகவே முன்வந்து இந்த சங்கமத்தை சிறப்பித்தார்கள்.
அதற்குப்பின் பல பிரமுகர்களை தொடர்ந்து நடந்த  சங்கமங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தேன். அவர்களும் வந்து சிறப்பித்தார்கள். அதிலும் பலரும் நான் தொலைப்பேசி வழியாக அழைத்ததுமே வண்டு சிறப்பித்தார்கள்.
அந்த சமயத்தில் தான் கடந்த வாரம் பதினோராவது சங்கமத்திற்கு இயக்குனர் திரு விகரமன் அவர்களை அழைக்க சென்றிருந்தேன். அவரும் விழாவிற்கு வர ஒப்புக்கொண்டார். ஆனால் குறிப்பிட்ட நாளில் ஒரு வேளை வெளியூர் செல்ல வேண்டிவருமோ என தயங்கினார். அழைப்பிதழில் பெயர் போடவேண்டம் நான் வருகிறேன் என்றார். அதைக்கேட்டு நான் சற்று தயங்க, உடனே அவர் “கல்யாணத்திற்கு அழைக்கும்போது யாரும் விருந்தினார்கள் பெயர் போடுவதில்லை, அதுபோல நீங்களும் ஒரு நல்ல விஷயத்தை செய்கிறீர்கள் அதில் பெயர் போடவேண்டிய அவசியமில்லை, நானே வருகிறேன் என்றார்!
  திரையுலகில் நட்புக்கு புது இலக்கணம் (பது வசந்தம்) படைத்த விக்ரமன் அவர்கள் வந்தால் முதன் முதலாக நடக்கவிருக்கும் திரைப்படத் தொழமைச் சங்ககமத்திற்கு பொருத்தமாக இருக்குமே என்றுதான் அவரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால் அவர் சொன்ன வார்ததைகள் தன்னம்பிக்கைக்கு புது இலக்கணமாக தெரிந்தது.
அவர் தந்த நம்பிக்கை எனக்குள் இருந்த தன்னம்பிக்கையை மேலும் தூண்டிவிட்டது. முதல் சங்கமத்தை நடத்திய அதே தைரியத்தை என் உள்ளத்தில் மிண்டும் விதைத்தது. அதனாலேயே தற்பொழுது நடக்க இருக்கும் சங்கமத்திற்கான அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்கள் பெயர் போடாமலேயே விட்டிருக்கிறேன்.

சினிமாவை நேசிக்கும் அனைவரும் இலக்கியத்தை மதிக்கும் அனைவரும் இந்த சங்கமத்தில் பங்குபெறுவார்கள் என்று நம்புகிறேன். இருதுறைகளிலும் உள்ள பிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக வந்து கவுரவிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை ஊட்டிய திரு விகரமன் அவர்களுக்கு நன்றி.   

No comments:

Post a Comment

Let others know your opinions about this post