Tuesday 15 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் -2


ஜென்னிக்கு இரண்டு கீதங்கள்

ஒன்று

ஜென்னி! நீ மீண்டும் மீண்டும் கேட்கலாம்:
ஏன் ஜென்னியை என் கீதங்கள்
முதன்மையாய் அழைக்கிறதென்று?

உனக்காக மட்டும்
வேகமென் நாடிதுடித்திட,
உனக்காக என்கீதங்கள்
நிராசையில் மூழ்கிட,
நீ மட்டும் அவற்றின்
உள்ளத்தூண்டுதல் என்றாகிட,

ஒவ்வொரு வண்ணமும்
உன் பெயரை சொல்லிட,
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்
இனிமை நீ என்றாகிட,
ஒவ்வொரு மூச்சும் கண்ணே,
உன்னிடம் சென்றிட,

அன்புகொள்வது பெயரளவு
இனிமைதான் அதனால்!
அதன் ஆரோகண அவரோகணங்கள்
என்னுடன் அவ்வளவாக உருளுவதால்!
அதவ்வளவழகானது இன்பமானது
ஒளிர்வது, தூரத்தில் துடிக்கிறது
ஆத்மாக்களில் எதிரொலித்து
உருளுவதுபோல தங்கக்கம்பிகள்
இறுக்கிய சித்தேணின் ஸ்வரலயம்போல
மந்திரமாச்சரிய ஆத்மாவின்
உள்ளம்போல அதனால்!

இரண்டு

ஜென்னி! என்றொரே வார்த்தை மட்டுமே
ஒவ்வொரு வரிகளிலும் எழுதி
ஓராயிரம் கட்டுரைகள் படைத்து
முடிக்க என்னால் முடியும்,
அதில் அடங்கிய சிந்தனை உலகம்,
நிரந்;தரவேலை, சஞ்சலமில்லாத ஆசைகள்,
மிகமெல்லிய மோகங்கள்
துடிக்கிற இனியபாடல்களும்

உயர்ந்த ஒளி மண்டலங்கள்
தன் ஒளியெல்லாம், உள்ளத்தில்
பதட்டம்தரும் வருத்தமெல்லாம்,
தெய்வீக ஆனந்தங்களெல்லாம்,
என்னறிவெல்லாம், என் வாழ்க்கையின் சொந்தமானதெல்லாமெல்லாம்!

தூரநட்சத்திரங்களில் என்னாலதை படிக்கமுடியும்!
பரந்த பேரண்டத்தின் மத்தியிலிருந்தெழுந்த
கோஷங்களிலிருந்து என்னிடமது வந்துசேர்கிறது!
வரும் நூற்றாண்டுகள் சாட்சியாகட்டும்,
நான் அதையொரு பல்லவியாக
இங்கே குறிக்கிறேன்,
அன்புதான் ஜென்னி!
ஜென்னியென்பது அன்பின் பெயர்!

-- 1936 நவம்பர்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post