Saturday 19 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 4


மூன்று

மீண்டும் ஒருமுறை நடுங்கிமரத்த
இவ்வெண்தாள்கள் பறந்துபறந்து
உன்பக்கத்தில் வந்துவிட்டால்!
மூடபயங்களால், விரகத்தின் வருத்தத்தால்,
குறைந்து விட்டதென் உணர்ச்சியாக,
வெறுமனே என் ஆத்மவஞ்சனையின்
மென்மையான கற்பனைகளில்
இன்றந்த வீரப்பாதைகளில் தனியாக அலைகிறது!
உயரத்தை வெற்றிபெற என்னால் முடிவதில்லை!
நம்பிக்கை இனி மிச்சமில்லை கொஞ்சமும்!
ஆசைகள் அடர்த்தியாய் வாழுமென்
அன்பில்லத்தில் நானொவ்வொரு
திசையிலிருந்து வரும்போது, அழகியே,
புணர்ச்சிமாலைகள் உன்னில் அணிவிக்க
காத்திருப்பான் காதலன் மிகப்பெருமையுடன்!
பிறகு? வருத்த ஞாபகங்கள் இடித்தீயாக
என்மீதப்போது விழுந்துருண்டு செல்லும்!

நான்கு

அதை நீ பொறுத்திடு,
ஆபத்தைத்தருபவனின் தூற்றல்!
அபராதம் ஏற்கமுடியாத ஆத்மாவுக்கு ஆசைகள்!
பாடகனின் திறமை சுட்டெரியட்டும்,
சொந்த பேராசைகளின் சிறுசுடர்கள் பறந்தசெல்ல!
அமைதி, பதட்டம், நானின்றெனக்கு எதிராக
நிற்கமுடியுமா? பாடகனின் பெயரையும்
ஏளனம் செய்யவேண்டுமா?
நேசிக்காமல் இருக்கணுமா,அன்பே,
உன்முகமொருமுறை பார்த்தபின்?
ஆத்மாவின் பிரம்மைகள் இன்றிவ்வளவுயரத்தில்
ஆசையை நடத்துகிறது,
எனக்குமேல் மகோன்னதமாக 
நிற்கிறாய் நீ!
உன் கண்ணீர்த்துளிகளை மட்டும் ஆசைப்படுகிறேன் நான்! என் கீதங்களை நீமட்டும் ரசித்ததினால்,
அவற்றிற்கிந்த அழகும்
இவ்வலங்காரங்களும்!
இனிமேலிவையெல்லாம்
சென்று மறையட்டும் சுத்த சூனியத்தில்!

                                                --1936 அக்டோபர்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post