Wednesday 16 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 3




மீண்டும் ஜென்னிக்கு

ஒன்று

நீயெடுத்துக்கொள், அன்பு உன்
பாதங்களில் சமர்ப்பிக்கும்
இந்த கீதங்களையெல்லாம்
என்னிலிருந்தெடுத்துக்கொள்;!

ஒழுகிவருகிறது இதோ அந்த
ஆத்மா அந்த கீதங்களில்,
ஒரு வாத்திய ராகத்தில், ஒளியில்!
இந்தபாட்டின் எதிரொலிக்காகத்தானென்றால்,
எதிர்பார்ப்பை அன்பாம் தலங்களில்
உருக்கியெழுப்பிட, தன்மானமாக
உன் இதயத்திடம் அசைந்தாடுவதற்கு
தகுந்தபடியென் நாடியை துடிக்கவைக்க!
லாகவத்துடன் வெற்றி உன்னையும்
ஏற்றிச்சென்றிட, தூரத்தில் நின்றபடி
நான்அதன் சாட்சியாகிறேன் அப்போது!
மிகுந்த பயமின்மையுடன் போராடுவேன்
நான், குதித்து வருமென் ராகாலாபனை!
சுதந்திரமானபோது முன்னால்வரும்,
உருவமாற்றம்பெற்ற என் சங்கீதம்!
இனிமை துக்கங்களில் என் வீணை அழுதிடும்!

இரண்டு

உன் கண்களைப்போல விலை
உயர்ந்ததாக எனக்கொன்றுமில்லை
தூரக்கரைகள், தேசங்களும்,
எல்லாம் காலடியில் கொண்டுவந்து
தூரத்தில் எட்டும்படி கொண்டாடி
ஆனந்தமாக ஆடும்.
பூமியில் புகழ் எதுவும் இணையாகாது
அவற்றிற்கு அந்தவிழி முழுமையொளியாக,
ஆனந்தத்தின் நிறைவில் இதயம் இளம்சூடாகிட
பாட்டில் நிறையும் உணர்ச்சியாம்
அந்தகண்கள் சுரந்த இருட்டில்
உயிர் கொள்ளும் கண்ணீர் பொழிந்திட!
இந்த வீணையின் இனிமைராக
மூச்சின்வழியில் என்னாத்மாவை நான்
ஊதிப் பறக்கவைப்பேன்,
இறக்கும் பெரியவனாகவே நான்
என் லட்சியம் நிறைவேற்ற முடிந்தால்
மிகப்பெரும் அழகான பரிசை அது
பெற்றுவிட்டால், உன்னில்

ஆனந்த வருத்தங்களை ஒரேபோல தாங்கிட !

No comments:

Post a Comment

Let others know your opinions about this post