Wednesday 13 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 10


நட்சத்திரங்களுக்கு ஒரு பாடல்

கண்ணடிக்கும் கதிர் வெளிச்சத்தில்
நீங்கள் வட்டமிட்டு ஆடுகிறீர்கள் எங்கும்!
எவ்வளவுபோ; நீங்கள் எவ்வளவுபேர்?
எண்ணிக்கையற்றவர்கள் ஏராளம்!

இங்கு மிகவும் நல்லதாம் ஆத்மா
உடைகிறது, அழகானதொரு இதயம்
இருதுண்டுகளாம் ஒரு ஆபரணம்போல,
காயம் ஆற்றுகிறது மரணவலியை!
இங்கு நிர்பந்தமாய் ரகசியமாய்
உங்களை உற்றுப் பார்க்கிறது.
உங்களிலிருந்து ஒரு குழந்தையைப்போல
நிரந்தரத்தை, மோகத்தை, முகர்ந்திடலாம்.

எந்த சொர்க்க ஒளியையும்விட
மிகவும் சுலபமான தீ யொளி!
சொர்க்கவாசிகள் யாரும் உங்களில்
சொந்தமாம் அக்னியை சேமிக்கவில்லை!

பொய்யான பிரதிபிம்பங்கள் நீங்கள்,
ஒளியாம் சிகரத்தின் முகங்கள்,
கருணை, இதயத்தின் சிறுசூடும்,
ஆத்மாவும் உங்களுக்காகத்தானே!

நீங்களின்று கா;மதாப ஆசைகளின்
ஒளியல்ல விளையாட்டு!
நெஞ்சின் அக்னிகீதங்களுள் ஆசைகள்
உங்களில் உடைந்திடுகிறது!

வயதாகி நரைத்து விடுகிறோம் நாம்
எல்லையில்லா அழகில், நிராசையில்,
பார்த்துவிடு, சொர்க்கமும் பூமியும் நிலை
யானதென்ற ஒரு நகைச்சுவைஆட்டமும்!

நாம் துடித்திடும்போது, உலகங்கள்
நமது உள்ளங்களில் மூழ்கி இறந்திட,
எந்த மரக்கிளையும் அறுந்துவிழவில்லை
எந்த நட்சத்திரமும் ஆழத்தில் மூழ்கவில்லை!

இன்னொரு விதத்தில் நீங்கள் மரணத்தில்,
பிணக்குழியாம் உங்களுக்கு கடல்,
கதிர்களெல்லாம் மாய்ந்துவிடும், உங்களில்
எரிந்துநின்ற தீயெல்லாம் அணைந்துவிடும்!

உண்மையை அமைதியாய் சொல்லிடு, மரண
ஒளியில் கண்மூடி நின்றிடாமல்!
தெளிவாக தெரியவேண்டிய, நீங்கள் தன்

சுற்றுவட்டாரத்திற்கு இரவாம்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post