Wednesday 13 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 11


காட்டருவி

காட்டருவி வெள்ளிநுரை சிதறி மெல்லிய
ஓசைபொழியுது மலர்தோட்டத்தில்,
வழிதவறுகிறது, தலைக்குமேலே படர்ந்து
அசையும் வாகை மரங்கள்!

அவற்றை பாருங்கள்: கீழே அதிவேகமாக
ஓய்வில்லமல் ஓடுகிறது காட்டருவி!
காற்றுடன் கடலுடன் இணைந்திட,
குளிர்பிம்பத்தில் உள்ளம் கொதிக்கிறது!

ஆனால் முரட்டு நிலத்தின் மேலிருந்து
ஓடிச்செல்லும் நேரத்தில்,
உரத்தகுரலில் ஒரு இடிமுழக்கம் சிலை
சுவரின்மேல் பலமாய் விழுகிறது
தலைதிரும்பியந்த நீரோட்டம் மௌனமாய்
புகைப்பனி வட்டங்கள் நூற்கிறது!

மீண்டும் பூந்தோட்டங்கள் வழியாக
காட்டருவியின் சோர்ந்த பயணம்!
ஆழத்தில், மரணத்தின் வலியை ஒரே
மூச்சில் குடித்துச் செல்கிறது!
உயா;ந்த மலர்வாகைகள் ஓ! பகல்
கனவுகளை தழுவுகிறது!


மந்திரப்படகு

பாய்ச்சிறகில்லை, வெளிச்சமில்லை, சுற்றிப்
பாய்கிறது ஒரு படகு வேகமாக,
பாய்மரத்திற்கு உண்டு காலப்பழக்கம்,
நீராழியில் விழுந்து நிலா ஒழுகியது

முரடன் மாலுமி ஒருவன்தான் தலைமை,
சிரைகளில் அவனுக்கு ரத்தஓட்டம் இல்லை.
விழிகளில் அவனுக்கு வெளிச்சமில்லை,
தலைக்குள்ளே நினைவுகளும் இல்லை!

அலைகள் ஆடுகிறது கொடூரநடனம்,
படகொரு பாறையில் சென்றிடித்தது,
கொஞ்சம் மூழ்கிடமட்டும், ஆனால், மீண்டும்
சட்டென உயர்ந்து பாய்ந்தது.

கோபம்கொண்ட கடல்நீர் உயர்ந்ததப்போது
ரத்தத்தை அணிந்து ஆடுவதைப்போல,
முன்னால் நிற்க பயந்து நடுங்கி
திரும்புகிறது ஒரு கெட்டசகுனம்!

பழிக்குபழிவாங்க தூண்டும் நாசத்தை குறிக்கும்
அசரிரிகளாக தேவதைகள் அழுகின்றனர்,
வருத்தத்திற்கு கொண்டுசென்றான் மாலுமி,
படகு வேகமாக முன்னோக்கி பாய்கிறது.

தூரத்தில்எழும் நாடுகளை காண்கின்ற படகுகள்,
நிறைய கரைகள், விரிகுடாக்களும்!
தா;ப்பண அக்னியில் ஜொலிக்கிறது,
கடல்களை முத்தமிட்டு அடக்கும்வரை!

இரவு நினைவுகள்
கண்டிடுக நீர்ரதம் ஒன்று
தலைக்கு மேலே நீந்தி
மூழ்குகிறது, அதன் சுற்றிலும்
கழுகுச்சிறகடி!

புயலுக்கு நேராக அது
பாய்கிறது, கனல்ப்
பொரிகள் பெய்கிறது,
காலையின் திசையில்
இருந்து வருகிறது
இரவின் நினைவுகள்!

என்ன ஒரு ஆச்சரிய தீபம்
ஒளிவிட்டெரியும் சிந்தனை,
காலநிலையின் வெளி
மண்டலகுகைகளை
சாபம் தந்ததுபோல
அடித்துடைக்கிறது, கண்
கோளத்திலிருந்து ரத்தம்
சொட்டுகிறது, பயம்
எழுகிறது, கடல் அலையை
துப்புகிறது மேலே சொர்க்க
மேடைகளுக்கு எழும்
கூரைக்கம்புகள் ஒவ்வொன்றாக!

அமைதிநிலா மௌனம்
வெளிச்சூழ்நிலை
சூடான இரும்பின்
பட்டையால் நெற்றியில்
சுற்றி கட்டுகிறது,
ஆயுதங்களின் ஆரவாரம்!

கொடூர இருட்டின்
வயிற்றில் மூழ்கி
காணாமல் போகிறது
மேலே மேகங்கள்,
பூமிக்கு கஷ்டங்கள்
வர சபித்துக்கொண்டே!
ஒரு சொட்டைத்தலையைப்பற்றி

தூரதூரமாம் மேகப்
பாதைகள் மின்னவைக்கும்
ஒளிவட்டத்தின் மகளாம்
மின்னல்கொடி போல,

சீயுசின் சிந்தனை பாரம்
கொண்ட தலையில் நின்று
ஒரு உலகம் வெற்றிபெறும்
பல்லாஸ் அத்தீனா உருவானது!
முற்றிலும் அதுபோல,
மிகுந்த பொழுதுபோக்கில்
அவன் தலைக்குமேலே
பலமாய் குதித்தாள் அவள்!

ஆழத்தில் அவனால்
சென்றிட முடியாதது
யாருக்கும் காணலாம்

ஒளிவீசுகிறது அந்த கபாலத்தில்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post