Saturday 16 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் – 14



சீறிவரும் தேரைப்போல
அவன் தன் வீட்டை அடைந்தான்!
முன்கதவை அடித்துஉதைத்து
திறந்தான், தாசியிடமிருந்து எரியும்
மெழுகுவர்த்தியை தட்டிப்பறித்து
கைநடுங்கியதை மறைத்துநின்றான்!

நெற்றியில், சொல்லாத வேதனை
அடித்து உடைக்கும் நெற்றியில்
முத்துக்கள்போல குளிர்ந்த வேர்வையின்
துளிகள் மின்னித்துடிக்கிறது!

கண்கூசும் கடும் சிவப்பின்
வண்ணம் நிறைந்த மேலங்கியெடுத்து
எதற்கிப்போது நீ அணிகிறாய்?
தங்க வளையல் ஆபரணங்கள்
அணிவது எதற்கு? உன் தலைமுடி
அவிழ்ந்து பின்னால் உலைகிறது!

தான் ஆராதித்தவளின் புகழுக்காக
போராடிய தங்கப்பிடி வாள்
தன்மார்பில் சோ;த்து பத்திரமாய்
வைக்கிறான் தன் திடத்துடன்!
காற்றின் சிறகுகளி;ன்மேலே திரும்பி
பாய்கிறான் அவன் ஆனந்தத்தின்
ஆலயமாம் மாளிகைக்கல்ல
கடிவாளம் இதயத்திற்கு, சிவந்த
கண்களில் நொடிமரணம்தரும்
மின்னல்கீற்றுகள் துடிக்கிறது!

குழைந்துபோன கால்களுடன்
கதவைத்தாண்டி அவன்அடைந்தான்,
தீபங்கள் நிறைகதிர் வீசும்
அகத்தளத்தில்! பலிமிருகம் ஏதென
சொல்லிடு நீ விதிதேவதை, சாபக்
கணைகள் நீ அதன்மேல் பெய்திடு!
ராஜகீய கம்பீரமான தன் மேலங்கியில்
பெருமையுடன்தான் என்றாலும் உள்ளே
உஷ்ணத்துடன், குனிந்து வணங்கும்
சிரசுடன் அவனிடம் அடையும்போது,
அந்த முகபீதிபாவனை கண்டு
விருந்தினர் பயந்து நடுங்கி நின்றனா;!

ஆட்கள் நிறைந்த சாலையில் ஒரு
ஒற்றை யானைபோல, ஆவியைப்போல
பலமாய் பாதம் ஊன்றி நடக்கிறான்
அவன், நடனமாடியவர்கள் சென்றிட,
ஆனந்தத்தின் தங்கபாத்திரத்தில்
சிவந்த நுரை உதிரும்வரை!

ஒன்றுசேர்ந்து நிறைய நடனமங்கைகள்
இருக்கின்றனா; நடுவில் லுசிந்தாவாம்,
அழகிற்குஅழகாக ஜொலிப்பவள்!
மெல்லிய பட்டாடைவழியாக கவர்ச்சி
அழகில் அவளுடைய மார்பக
மணிகள் உயர்ந்து துடிக்கிறது!

ஆடியலைந்துவரும் அழகிய திரு
உருவம் போன்றாம் அவளை
காணும் கண்களில்; எல்லாம், கத்தி
எரிகிறது ஒரு அமைதிப்பேராசை!
விழுந்து மயங்குகின்றனர் சர்வமும்
கவரும் சக்தியில் விருந்தினரெல்லாம்!

அவள் விழிகளில் மதுவின் சலனம்
அலையடிக்கிறது, நித்தியஒளியாம்
அவள் இனியபுன்னகை, பலவண்ண
மனம் மயக்கும் நடனஅரங்கம்,
அவள் உடல்கொடியழகில் முன்னோக்கி
செல்கிறது ஆனந்த தாண்டவம்!

எளிமை பணிவு நடனபாதங்களில்
அவள் தன்னருகில் சென்றிட,
அவன் விழவில்லை, சோh;வு
கொள்ளவில்லை! நடனமங்கையின்
அருமை கன்னப்பனிநீர்பு+ வாடுகிறது
அவ்விழிகளில் ஒளி மங்குகிறது!

மக்கள்கூட்டத்திற்கு சென்றிட
வந்தவனை விட்டுவிலகிட
நினைக்கிறான் அவள் என்றாலும்
ஏளனத்தின் ஒரு கூக்குரல்!
ஆஹா! சலனமற்றவளானாள்
ஏதோ தெய்வீக சாசனத்தால்;! 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post