Thursday 14 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 13லுசிந்தா
ஒரு கதைப்பாடல்

ஆனந்தத்தை மணந்த வாழ்க்கை
என்றே தோன்றியது ஆடுபவர்கள்தன்
பாதசலனங்களின் தாளலயங்களை
காண்கையில்! சந்தோஷக்கூத்தாட
தாங்களே பொறுப்பெற்றவர்கள் அதற்காக
நியமிக்கப்பட்டவர்களென தோன்றுவதுபோல.

சிவந்தபன்னீர்ப் பூக்கன்னங்கள் மேலும்
சிவக்கிறது, இதயரத்தத்தின்
பயணம் வெகு வேகமாகிறது,
பலமோகங்கள் அதன் தாக்கங்கள்,
தூரதேசங்களில் செல்வதற்கு
ஆத்மாவை அழைக்கிறது!

இங்கே அன்பு பிரபுவாக கடவுளாக
நிற்கிறது! மதபேதங்கள்
பதவிகள் இடையில்வரும் சண்டைகள்
எங்கோபோய் மறைகிறது! சகலமும்
ஒரு வட்டத்தில் அடங்குகிறது! இதய
நட்பின் சங்கமவேளை இதுதானே!

ஆனால் இது வெறும் சோம்பல் கனவு!
மென்மையுணர்ச்சிச்சூடான இதயங்களை
ஒன்றுசேர்க்கும் கனவு! பூமியில்
இருந்து இந்த தூசி அலைகளில்
நின்றுயர்ந்த தெய்வீக ஆகாயங்களுக்கு
பறந்துசெல்லும் ஒரு கனவு!

பூமியில் உதயம்கொண்ட மனதிற்கு
சொர்க்கம்செல்ல பாலம் கட்ட
முடியும் என்ற மூடசந்தோஷத்தில்
ஒரு மனிதன் நினைக்கமாட்டான்
ஒருநாளும் அதப்படி கண்டுபொறுத்திட
தேவதைகளால் முடியாதல்லவா!

மக்கள்கூட்டத்தில் நடந்துவந்து
கையில் நீட்டிய வாளும் கத்தியும்
கொண்டவிருந்தினன்! கவுரவபாவனை!
அக்னியில் நெஞ்சம் எரிந்திட,
யாரும் காணாமல் அவன் இதயம்
அவமரியாதையில் துடிக்கிறதாம்!

அவனுடைய உயிராம்! அன்பாய்
இருந்தவள் இன்றிங்கே இதோ புது
மணப்பெண்ணாக நறுமாலையுடன்
நிற்கிறாள்! முன்பு தனக்கவள் இதயம்
தானே சமர்ப்பித்தவள்! காதலின்
புனிதசபதம் பலமுறை செய்தவள்!


அவன்மீது மிகுந்த நம்பிக்கையுடன்
நன்மைகள் பெற்றிட யுத்தம் செய்திட
அவன் விடைபெறுகிறான்!
தேவதைகள் அவன் பாதையில்
பூமழை பெய்தன!
பெருமையுடன் வெற்றிபெற்றது
கருமமும் உயர்ந்த வீரமும்!

அவன் திரும்பி வருகிறான் பூப்புகழ்
முடிசூட்டி, தன் அமைதி அசையா
நகரத்தில், தன் ஆசைகளும்
ஆனந்தங்களும் ஆஹா! கூவி
அழைக்குமிடத்தில், மனம் கவர்ந்த
ஒரு ரத்தினம் ஒளி வீசுமிடத்தில்!

போர்க்களங்கள் தெரிகிறது முன்னால்
இதயம் துடிக்கிறது அவசரமாக!
தாமதம் இல்லை இனி ஆசைகள்
நிறைவேறும், தனது நூறுகனவுகள்
இங்கு இனி உண்மைகளாய்; மாறும்!

அதிவேகம் பாய்கிறவனும்
அன்பெழும் அந்த வீட்டின் முற்றத்திற்கு
வந்திட! பல தீபங்களின்
ஒளியால் அவ்விடம் ரம்மியம்!
அதற்கிடையில் விருந்தினர்அங்குமிங்கும்
உற்சாகத்தோடு ஒழுகுகின்றனர்!

அங்கு ஒருஆளில்லா மூலையில் நிற்கும்
காவல்காரன் ஒருவன் கைகளால்
அவனை விலக்கினான்: கண்ணில்லா
குருடன்போல் நீ பாய்வது எங்கே?
புதியவன் நீ கூரைமீது ஏறிச்
செல்லத்தான் முற்படுகிறாயா?”

ஏய் மனிதா! அழகானவள்
லுசிந்தாவைத்தான் நான் தேடுகிறேன்
அந்த பதில் கேட்டதும் காவல்காரன்
கண்விழித்துற்று பார்க்கிறான்: லுசிந்தாவை
என்றால் யாரும் பார்க்கலாம் இங்கே!
இன்றவள் தானே புதுமணப்பெண்!

வந்தவன் பேரிடி விழுந்ததைப்போல
நின்றான்! பயிற்சிகளால் கலம்வாய்ந்த
கட்டுடல் காற்றில் துரும்புபோல
ஆடி உலைந்தது! விழிகள் ஒருமுறை
பெரிதாய் திறந்தது! முன்கதவை
நோக்கி திரும்பி நடந்தான் சோர்ந்து!

முரட்டுத்தனமான ஒரு குரல்- காவல்
காரனின் குரல் கேட்டது பின்னால்,
நீ இங்கு மரியாதை விருந்தினனாக
வந்தமர்ந்திட பண்டிகைவேஷம்
அணியவேண்டும், சென்றுடுத்தி வா!
திருமணமண்டபம் இதென்பதை மறந்திடாதே!

கௌரவத்துடனும் மரியாதையுடனும்
அவன் அவசரத்தால் திரும்பினான்,
அறிமுகமான பாதையில் நடந்தான்?
விம்மி அழுதது இதயம்.
அனுதாபத்தால், ரோஷத்தால்!
கண்களில் ஆத்திரம் நடனமாடியது!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post