அவள் கடைசியில் சுயம்வரித்த
ஆடவன் உடல்வி;ட்டு எழுகிறான்!
வெளிறிய திடகாத்திரத்தில் சென்னீர்
அபிஷேகம்! தாழ்ந்த குரலில் மக்கள்
தங்களுக்குள் ஏதோ சொல்லுகின்றனா;
பயந்து பின்வாங்குகின்றனா;!
நிற்கிறாள் அவள் நீண்டுநிமிர்ந்து ஒரு
தேவதை! அல்ல தன்னழிவின் சிற்பி!
துளைப்பதுபோல அவள் பார்வை
தன்னை வரித்த மனிதன்பால் திரும்பியது!
சர்வமும் சாம்பலாக்கும் ஒரு பார்வை!
பனியைப்போல குளிர்ந்த வெளிறிய
ஏளனத்தின் மொட்டுவிடுவதுபோல
புன்னகையொன்று அவ்விதழ்களில் விரிந்தது,
பின்னால் வரும் பைத்தியத்தின்
நெஞ்சுதுடிக்கும் கதைக்கு ஆரம்பம்
குறிக்கும் ஈனாலாபனை உயர்ந்தது!
ஆனந்த அலைஓய்ந்தது, பாட்டும்
கூத்தும் அடங்கியது, நடனமங்கைகள்
அவ்வழி இவ்வழி பாய்ந்து மறைந்தனர்,
தங்களுக்குள் சண்டையிடும் தாளமும்
எழவில்லை! சூனியம் மங்களவிழா
மேடை இதோ, ஆளில்லா இடம்!
மூன்று சிறிய விளக்குகள்
தூரத்தில் மூன்று விளக்குகள் அமைதியாய்
இனிமையாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது
அரிய நட்சத்திரக் கண்களைப் போல!
காற்றுவந்து கூச்சலி;டலாம், சூறாவளி
ஆர்ப்பரிக்கலாம் ஆத்திரத்துடன் என்றாலும்,
அணைவதில்லை இந்த சிறுதீபங்கள்!
மீண்டும் உயரங்களை அடைய
ஒன்று மேலும் முயற்சி செய்கிறது.
உள்ளத்துடிப்புடன் சொர்க்கத்திற்கு
செல்லவேண்டுமென்பதே அதன் ஆசை!
கண்மூடுகிறது நம்பிக்கையுடன்
கண்டதோ ஜகத்தந்தையை?
கீழே பு+மியில் சாலைகளைக்
காணத்தான் இன்னொன்றின் பார்வை
அங்கே எதிரொலிக்கும் வெற்றிமந்திர
நாதம் அலையடிக்கிறது காதில்!
எந்த மௌனசொற்பொழிவின்
தூண்டுதலாலோ விண்ணிலிருக்கும்
தன் சகோதரிகளை பார்க்கிறது!
கடைசியிலிருக்கும் விளக்கின் முடியில்
செக்கச்சிவந்த தங்கத்தீ எரிகிறது!
ஜுவாலைகள் விரிந்துயர்கிறது, பிறகு
தாழ்கிறது, அலைகள் நெஞ்சில்
பாய்ந்து ஏறுகிறது, பிறகு, பாருங்கள்..
பரவி எரிகிறது ஒரு பு+மரமாக!
மூன்று சிறுவிளக்குகள் அப்படி
மின்னி நிற்கிறது அமைதி நட்சத்திர
கண்களென்பதுபோல மாறி மாறி!
காற்றடிக்கலாம், புயல் ரோஷத்தால்
துள்ளிக்குதிக்கலாம், இருந்தாலும் இப்போது
திருப்தியடைந்திடு ஆத்மாக்களொன்றாக!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post