Saturday 16 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 17



ஜென்னிக்கு இரு கீதங்கள்

1 தேடினேன்:
என்னை கட்டிவைத்தவையிலிருந்தெல்லாம்
இன்று விடுதலையானேன், நான் எழுகிறேன்!
எங்குபோவாய் நீ? கண்டிடுவேன் நான்
இங்கு எனக்காக இனியொரு உலகம்!

சந்தோஷம் தரும் அழகான அமைதியான
அனைத்தும் இங்குதான் இல்லையா?
கீழேஇல்லையா கடல்கள்?
மேலே நட்சத்திர விளையாட்டில்லையா?”

மூடனே, நீ ஒன்றை தெரிந்துகொள்
அக்கரை செல்ல எனக்கில்லை மோகம்!
பெரும் சிலைகளில் சென்றிடிக்கவும்,
விண்ணுக்கு அப்பால் சென்று பார்க்கவும்,
ஒன்றுமில்லை, முயற்சி- அவ்வளவு மௌனமாய்
வலியில் என் பாதங்கள் கொதிக்கிறது,
அவை சொல்லும் அன்பு வார்த்தைகள்
இங்கே ஒரு சங்கிலியாக மாறுகிறது!

என்னிலிருந்து எழுந்திடவேண்டும் உலகம்!
அதுஎன்நெஞ்சில் தானே தலைசாயவேண்டும்!
என்உயிர்உதிரத்தில் நின்றுதானாம்
இன்றதன் ஊற்றுக்கள் உடைகிறது!
என் ஆத்மாவின் மூச்சுதான் அதன்
பெரிதுயர்ந்த சொர்க்க கோபுரம்!

நான் அலைந்தேன் முடிந்தவரை தூரம்
மேல் கீழ் உலகங்கள் நான் வென்றுவந்தேன்
துள்ளிக்குதிக்கிறது அவற்றில் சூரியனும்
வௌ;ளி நட்சத்திரஜாலமும்! பிறகு,
எவ்வளவு மின்னல்கொடிகள் கண்சிமிட்டியது
எவ்வளவு சீக்கிரம் அவை அடங்கியது!

2 கண்டேன்:
எதற்கு இந்த கொடிகள் ஆடுகிறது?
கும்பிடுகிறது மேமாதப்பு+ச்செண்டுகள்?
எதற்கு ஆகாயமேதோ வளைவின்
அழகில் வளைந்துயர்கிறது?
எதற்கு இந்த கீழ்நிலங்கள் மேகம்
மூடிய மேடையில் ஏறிட துடிக்கிறது?

என் சிறகில் நான் துடுப்புடன் ஏறிட
வந்து விழுகிறது பாறைகளிலிருந்து
காற்றின்வழியாக ஏதோ எதிரொலி!
நட்சதித்திர ஒளியும் கண்ணும் உறவு
கொண்டிடுமா? நான் உற்றுப்பார்க்கிறேன்
பார்வையும் நிழல்விழுந்து மூடுகிறது!

சூனியத்திலிருந்து ஆத்மாவில்லாமல்
வண்ண சுதந்திர ஆவேசத்துடன் வந்த
வாழ்க்கையின் அலைகளே! உண்மை
பாதையில் எழும் பாலங்கள் எல்லாம்
நீங்கள் அடித்துடைத்து, உன்னத
அழகில் முன்னோக்கிச் செல்லுங்கள்!

சாகசமாக மீண்டும் என் பார்வை
மெதுவாய் அசையவே, ஏதோ
அருமைநினைவின் தீப்பொறிகள்
சிதறும்போது, உலகங்களைத்தேடி
எங்கு செல்ல! அது உன்வழியாக
இன்றொரு உலகமாய் வளர்ந்ததே!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post