Saturday 16 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 19



மாற்றம்

எவ்வளவு பதட்டம் என் விழிகள்!
எவ்வளவு வெளிறியதென் கன்னம்!
எவ்வளவு சோர்வென் தலையில்!
என்ன ஒரு பேய்க்கதையின் உலகம்!

எவ்வளவோ பாறைகள் இருந்தும்
ஆழமான நீரோடைகள் இருந்தும்
இந்த கடல்களை தாண்ட
வீரசாகசம் ஆசைப்பட்டேன் நான்!

உயரங்களுக்கு பறக்கும்
சிந்தனைகள் தன் சிறகின்மீது
நான் பிடித்து தொங்கிப்பறந்தேன்!
காற்று கர்ஜித்தது, நான் மறுத்தேன்!

என் பாதங்கள் தடுமாறவில்லையிங்கே
என்றுமென் பயணம் தொடா;ந்தது,
எல்லையில்லா வீதியில் ஏதோ
காட்டுமிருகத்தின் பார்வையுடன்!

கடல்கன்னி அழகு மிகுந்த
இனிமையுடன் பாடினாள் என்றாலும்,
யாரும் அதில் மயங்கலாம் என்றாலும்,
நான் அதற்கு காது கொடுக்கவில்லை!

காதில்வரும் மெல்லிய ஸ்வரங்களுக்கு
என்காது கொஞ்சமும் வரவேற்பு தரவில்லை
என்னுள்ளம் மேலும் சிறந்த
எதற்காகவோ ஆசைப்பட்டது.

அலைகள் பாய்கிறது பாய்கிறது தினமும்,
தெரிவதில்லை இவர்கள் ஓய்வு எதுவுமே,
பார்க்கக்கூடாத வேகத்தில் அவை
உயர்ந்து தாழ்ந்து பாய்ந்தடிக்கிறது!

வார்த்தைகளால் கவர்ந்திழுக்க
பார்த்தேன் நான், மந்திரதந்திரங்களால்
அலைகள் அப்பொழுதும் உரத்தகுரலில்
கூச்சலிட்டு சென்றது கண்மறையும்வரை!


பாய்ந்துவரும் வௌ;ளத்தில் யாரோ
கொடூரகாட்சியை கண்ட தலைசுற்றலுடன்
தடுமாறிவிழுந்தேன் அந்த கூட்டத்திலிருந்து நான்
பனிமூடிய இரவின் மார்பில்!

கடைசியில் பலனற்ற முயற்சியிலிருந்து
ஒருவிதமாக நான் துடித்தெழுந்திட,
சக்தியெல்லாம் சிந்திசோர்ந்தது போல!
இதயத்தின் ஒளி அணைந்தது போல!

ஆஹா! நடுங்கிவெளிறி வெகுநேரம்
என்நெஞ்சில் நான் உற்றுப் பார்த்தேன்!
என் இதயவலியை அணைக்கவில்லை
இன்று எந்த மெல்லியகீதங்களும்

பாய்ந்துபோனது என் பாடல்கள் எங்கோ,
மறைந்து போனது என் இனிமையான கலை!
எந்த கடவுளிதை திருப்பித்தருவார்?
எந்த அமரக்கருணை? எதுவுமில்லை!

முன்பு நிமிர்த்திய சிரசுடன் நின்ற
ஒருபாறை முழுவதும் இடிந்துபோனது!
தீயின் ஒளியும் மறைந்திடும் எந்தன்
உள்ளத்திற்குள்ளே சூனியமானது!

உந்தன் ஒளிவட்டம் எழுகிறது உடனே
தூய்மையான ஆத்மாவின் பிரகாசமாக!
நடனபதங்களால் சொர்க்கங்கள் இங்கே
ஆஹா! பு+மியை வட்டமிடுகிறது!

கட்டிப்போடப்பட்;டு நான் அந்த வேளையில்
என் பார்வையும் புனிதமான தீபமானது!
இருட்டில் எந்தன் தேடுதல் என்ன
என்ன இருந்ததென்பதும் நான் கண்டேன்!

அவ்வளவு கலங்கிய எந்தன் இதயத்தின்
ஆழமான பள்ளங்களில் பலம்கொண்டு
சுதந்திரமாய் துடித்துயருகிறது அதோ
சொர்க்கத்தில்; வெற்றியின் ஆனந்த நாதங்கள்!

உயரங்களுக்கு பறந்து போகின்ற
எந்தன் உயிரில் உற்சாகபாரம்!
நான் அதன் வேகப்பதையை இங்கொரு
மந்திரவாதியைப்போல செலுத்தினேன்!

ஆர்ப்பரிக்கும் அலைகளை தன்வழி
ஆளும் பிரளய வௌ;ளத்தைவிட்டேன்,
சிலை மகுடங்களில் விழுந்துடைந்தேன்,
உயிர்த்த தீ அணையாமல்!

கடவுளால் வழிநடத்தப்படும் ஆத்மாவின்
தேடுதலில் பெற்றிட முடியாத என்
இதயம் இன்று இதோ பெறுகிறது கருணை
இனிமயான உன் பார்வையால்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post