Saturday 16 November 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 20


மாலுமியின் பாடல்

தனியாக எந்தன் தோணியின்
சுற்றும் தாளம் பிடித்திடுங்கள்!
தத்திவிளையாடுங்கள் நீங்கள்
பொழுதுபோக்குங்கள்!

என் லட்சியத்திற்கு என்னை
கொண்டுசெல்லுங்கள் நீங்கள்
இன்றும் என் பிரஜைகள்!
கடலின் நீல நினைவுகளே!

கீழே எந்தன் அன்புத்தம்பி
இருக்கிறான் இங்கே!
நீங்கள்தானே ஆழங்களுக்கு
அவனை கொண்டுசென்றது?

அவனுடைய எலும்புகள்
உங்களுக்கு உணவானது!
நான் அன்றொரு சிறுவன்
இன்றல்லவே! சாகசமாக

அன்றொருநாள் கடலுக்கு
அவன் தோணியைசெலுத்தி சென்றான்!
சென்றிடித்தான் மணற்திட்டில்
தோணி மூழ்கிப்போனது!

உப்புத்தன்மை கொண்ட
கடல் அலைகளே! உங்கள்
மீது ஆணையாக நான்
அதுபோல சத்தியம் செய்தேன்!

உங்களை நான் பழி
வாங்குவேன்! எந்தன்
சவுக்கால் அடித்து உங்களை
நான் தொடர்ந்து தாக்குவேன்!

சொன்ன வார்த்தை எந்தன்
ஆத்மாவின் சபதமும் நான்
நிறைவேற்றுவேன்! அவை
என்னை ஒருபோதும்
ஏமாற்றியதில்லை!

சவுக்கால் அடித்து நான்
அழுத்தினேன் உங்களை!
எவ்வளவு ஏளனம் தெரியுமா
நான் கரையில் இருந்தகாலம்!

பாய்மரத்தை உலைத்து
காற்று ஆh;ப்பரிக்கும்போது
கோபுரத்தின் மணி இரு
புறமும் ஆடும்போது,

என் படுக்கையை விட்டெழுந்தேன்
நான் பத்திரமும் சூடானதுமான
எந்தன் வீட்டை விட்டு
மிக அமைதியானதுமாக

என் வீட்டையும் விட்டு
தீவிரவாதம் துள்ளும் இந்த
பெருங்கடலில் என் தோணியை
இறக்குகிறேன் நான்!

போராடுவேன் அலைகளுடன்,
எதிர் காற்றுடன், பிறகு
சொர்க்கத்தை ஆளும்
பிதாவிடம் வேண்டுவேன்!

என்னுடைய தோணிச்சிறகுகள்
காற்றில் வளர்ந்தது என்
வழி காட்டித்தருவதற்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!

பெருமூச்சு விடும் திருப்தியுடன்
சக்தி கிடைக்கட்டும்! மரண
விளையாட்டில் நெஞ்சில்
பாடல் உற்சாகமாகட்டும்!

தனியாக எந்தன் தோணியின்
சுற்றும் தாளம் பிடித்திடுங்கள்!
தத்திவிளையாடுங்கள் நீங்கள்
பொழுதுபோக்குங்கள்!

என் லட்சியத்திற்கு என்னை
கொண்டுசெல்லுங்கள் நீங்கள்
இன்றும் என் பிரஜைகள்!
கடலின் நீல நினைவுகளே!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post