திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்களே, குழுவினர்களே, அமைப்பினரே,
அன்புடையீர்,
திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்கவேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஐந்து வருடங்களைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு, வரும் ஜனவரி மாதத்தில் ஆறாவது ஆண்டுவிழாவை காண இருப்பது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது.
இந்த சங்கமத்தின் இலக்குகளை எட்டவும்,
மேலும் பல
சிறப்புக் கூட்டங்களையும் மற்ற நிகழ்வுகளையும் பெரிய அளவில் நடத்தவும்,
இச்சங்கமத்தை ஒரு சுதந்திர திரைப்பட இயக்கமாக வளர்க்கவும், தொடர்ந்து முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் அஸ்திவாரமாகவும், ஆரம்பமாகவும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து,
படைப்புகளின் தரம், இலக்கியம், வெற்றி தோல்வி மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு
தொழிற்சங்கம்
அல்லாத களம் ஒன்று தேவைப்படுகிறது. இதை செயல்படுத்த ஒரு திரைப்பட இலக்கிய மையம் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது!
அதன் முதல்படியாக திரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து நண்பர்களையும் இந்த சங்கமத்தில் இணைக்க விரும்புகிறேன். இதன்பொருட்டு நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து விளக்கவும்,
இச்சங்கமத்தின் புரவர்களாக சேர்க்கவும் ஆசைப்படுகிறேன். அதற்காக தங்கள் உதவியை நாடுகிறேன்.
தங்களை தனியாகவோ,
தங்கள் குழுவினரை ஒரே நேரத்திலோ சந்திக்க எனக்கு நேரத்தை ஒதுக்கித் (Appointment) தாருங்கள்.
இச்சங்கமத்தை வளர்க்கவும், திரைப்பட இலக்கிய மையம் அமைக்கவும் தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளைச் செய்து இச்சங்கமத்தின் புரவலர்களாக ஒத்துழைப்பு தாருங்கள்.
இந்த முயற்சியை வெற்றிபெறச்செய்து உதவுங்கள்.--- கமலபாலா பா.விஜயன்
உதவித் தொகையை நேரிலோ அல்லது ‘B.Vijayan, SB a/c no: 602852861, Indian Bank, Saligramam
Branch, IFSC code IDIB000S082’ என்ற வங்கிகணக்கிலோ செலுத்தலாம்.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post