Monday 13 March 2017

6-வது ஆண்டு சிறப்புச் சங்கமம்- நன்றிகள்..





நமது சங்கமத்தின் 6-வது ஆண்டுவிழா நினைத்தபடியே சற்று வித்தியாசமாக நடத்தப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது! இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் என் நன்றிகள்..
வழக்கமான ஆண்டுவிழாக்களைப்போல பிரபல சிறப்புவிருந்தினர்களை அழைத்து பாராட்ட வைக்கவில்லை. மாறாக வழக்கமான நிகழ்விற்கு அழைப்பது போல நண்பர்களை மட்டும் முகநூல் வழியாக அழைத்து, அவர்கள் முன்பாக இச்சங்கமத்தின் அடுத்தகட்ட இலக்குகள் பற்றி சிறு அறிமுகம் தரப்பட்டது.
அந்தவகையில் கமலபாலா ஸ்க்ரிப்ட்ஸ்மற்றும் திரைப்படத் தோழமை தயாரிப்புஆகிய இரண்டு புதிய சேவைகள் பற்றி முதல்கட்ட அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரண்டு சேவைகளுடன் சேர்ந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மாதநிகழ்வுகளை மேலும் ஆக்கப்பூர்வமாக நடத்துவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்ட.
இந்தப் பணிகளைப்பற்றிய கூடுதல் விபரங்கள் வரும் நாட்களிலும் அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
இந்நிகழ்வினை நடத்துவதிலும் பதிவு செய்வதிலும் எனக்கு உதவியாக இருந்த நண்பர்கள் பாண்டியன், ராஜவேல், எம்.எஸ்.பிரபு ஆகியோருக்கு நன்றிகள்..
நண்பர்களாகவே, ‘எந்த சிறப்பு அழைப்பும் இன்றியும் வந்து, இந்த முயற்சியை வாழ்த்திப் பேசிய எழுத்தாளர்கள் கௌதம சித்தார்த்தன், முருகேஷ்பாபு, தமிழ்பாலன் மற்றும் இயக்குநர் உஷா கிருஷ்ணன் ஆகியோருக்கு இதயம் கனிந்த நன்றிகள்..
(இப்படி சிறப்பு அழைப்பு இல்லாமலேயே நமது நிகழ்விற்கு அவ்வப்போது வந்து நம்மை உற்சாகப்படுத்தும் இவர்களைப் போன்றவர்கள்தான் உண்மையில் இந்த சங்கமத்தை தொடர்ந்து நடத்த ஊக்கத்தை தருகின்றனர்! இவர்களுக்கு சொல்லும் நன்றிகள் வார்த்தைகளில் அடங்குவது அல்ல..)


No comments:

Post a Comment

Let others know your opinions about this post