Monday 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 42

 


பொருள்அரசியல்

WEALTH – POLITICS

 

 

42  கேள்வி

Kēlvi

Listening

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.                           411

Selvatthut selvam sevicchelvam acchelvam

Selvatthu lellaam thalai. 

செல்வங்களில் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வங்களுக்கு எல்லாம் முதன்மை.

Selvankalil selvam sevicchelvam acchelvam

Selvankalukku ellaam muthanmai.

Wealth among all wealth is listening, that

Wealth is chief of all wealth.

 

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.                                 412

Sevikkuuna villaatha pōzhthu sirithu

Vayitrukkum eeyap padum. 

செவிக்குணவு இல்லாத நேரம் சிறிது

வயிற்றுக்கும் தரப் படும்.

Sevikkunavu illaatha nēram sirithu

Vayitrukkum tharap padum.

When there is no food for ears, a little

Will be served to the stomach.

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.                               413

Seviyunavir kēlvi yudaiyaar aviyunavin

Aanraarō doppar nilatthu.

கேள்வி ஞானமுடையார் மண்ணில் வாழினும்

அமுதுண்ணும் விண்ணோர்க்குச் சமம்.

Kēlvi njaanamudaiyaar mannil vaazhinum

Amuthunnum vinnōrkku samam.

Who had the knowledge of listening in this world are

Equal to the Gods who enjoy nectar in heaven.

 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

கொற்கத்தின் ஊற்றாந் துணை.                            414

Katrila naayinum kētka ahthuoruvar

Korkatthin ootraam thunai.           

கல்லாதிருப்பினும் கற்றவரைக் கேட்டறி அதொருவர்க்கு

தளர்ச்சியில் ஊன்று துணை.

Kallaathiruppinum katravarai kētttari athoruvarkku

Thalarcchiyil oonru thunai.

Eventhough illiterate, listen to the learned, it becomes

Staff, which supports in tiredness.

 

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.                        415

Izhukka ludaiyuzhi ootrukkō latrē

Ozhukka mudaiyaarvays sol.   

வழுக்கும் சேற்றில் ஊன்றுகோல்போல் உதவும்

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

Vazhukkum sētril oonrukōlpōl uthavum

Ozhukka mudaiyaarvaay chol.

The words of men with conduct will support

Like a staff in the slippery place.  

 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.                                            416

Enaitthaanum nallavai kētka anaitthaanum

Aanra perumai tharum.     

சிறிதாயினும் நல்லவை கேட்க அந்தளவு

நிறைந்த பெருமை தரும்.

Sirithaayinum nallavai kētka anthalavu

Niraintha perumai tharum.

Even small, listen to the good things, that

Will bring pride to great extent.

 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.                                            417

Pizhaitthunarntum pēthaimai sollaa rizhaittunarn

Theendiya kēlvi yavar. 

நுணுக்கமாய் கேட்டுணரும் அறிவுடையவர் தவறாய்

உணர்ந்தாலும் பேதைமை சொல்லார்.

Nunukkamaay kēttunarum arivudaiyavar thavaraay

Unarnthaalum pēthamai sollaar.

Even understood wrongly, the scholars have deep

Knowledge of listening, will not bluff.

 

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.                                              418

Kētpinum kēlaat thakaiyavē kēlviyaal

Thōtkap padaatha sevi.     

கேட்டும் கேளாத் தன்மை கேள்வியால்

துளைக்கப் படாத செவி.

Kēttum kēlaat thanmai kēlviyaal

Thulaikkap padaatha sevi.

Ears which has not been pierced with questions

Will hear but will still be deaf.

 

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது.                                                   419

Nunankiya kēlviya rallaar vanankiya

Vaayina raatha larithu.

நுட்பொருள் கேட்டறிவு இல்லாதார் வணங்கிடும்

சொற்களைச் சொல்லுதல் அரிது

Nutporul kēttarivu illaathaar vanankidum

Sorkalai solluthal arithu.

Who had no sharp knowledge of listening

Will rarely tell humble words.

 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினு மென்.                                   420

Seviyir suvaiyunaraa vaayunarvin maakkal

Aviyinum vaazhinu men. 

செவிச்சுவை உணராது வாயுணரும் மக்கள்

இருந்தாலும் இறந்தாலும் என்ன.

Sevicchuvai unaraathu vaayunarum makkal

Irunthaalum iranthaalum enna.

What if they are dead or alive, when they taste the 

Sweetness not thruogh ear but by mouth.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post