இன்பம் – களவியல்
LOVE - STEALTHY LOVE
,
109 தகையணங்குறுத்தல்
Thakaiyanankurutthal
(காதல் அறிதல்)
(Kaathal Arithal)
Blabbering
by Love
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. 1081
Anankukol aaymayil kollō kanankuzhai
Maatharkol maalumen
nenju.
தேவதையோ மயிலோ கனங்குழை யணிந்த
மகளிரோ மயக்குதே நெஞ்சை.
Dhēvathaiyō mayilō kanankuzhai yanintha
Makalirō mayakkuthē nenjai.
Is it an angel ! peacock ! or
a belle with
Ear-lobes! perplexing my
heart.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. 1082
Nōkkinaal nōkkethir nōkkuthal
thaakkananku
Thaanaikkon danna
thudaitthu.
நோக்கினாள் நோக்கெதிர் தாக்குந்தேவதை நோக்குதல்
சேனையுடன் தாக்கினாற் போல.
Nōkkinaal nōkkethir
thaakkundhēvathai nōkkuthal
Sēnaiyudan thaakkinaar pōla.
She looks straight as the
Goddess of attack,
Attacking with the army of
looks.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083
Pandariyēn kootren pathanai iniyarinthēn
Pentakaiyaal pēramark kattu.
முன்பறியேன்
எமனென்பதை இன்றறிந்தேன் பெண்மையால்
போரிடும் கண் ணுடையது.
Munpariyēn emanenpathai inrarinthēn penmaiyaal
Pōridum kan nudaiyathu.
Earlier I didn’t know how
‘Yama’ will be, now I know
That is with the killing eyes
of a girl.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண். 1084
Kandaar uyirunnum thōtraatthaal pentakaip
Pēthaik kamartthana kan.
கண்டவர் உயிருண்ணும் கண்கள் தோற்றத்தால்
பெண்மை பேதைமை கொண்டது.
Kandavar uyirunnum kankal thōtratthaal
Penmai pēthaimai kondathu.
The eyes eating the life of
one who met, appears
With the softness of the
feminine.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. 1085
Kootramō kannō pinaiyō madavaral
Nōkkamim moonrum udaitthu.
எமனோ கண்ணோ பெண்மானோ இளையவள்
பார்வை மூன்றும் உடையது.
Emanō kannō penmaanō ilaiyaval
Paarvai moonrum udaiyathu.
Is it ‘Yama’! eyes! or
dazzling doe! look of
Young girl has all these
three.
கொடும்புருவம்
கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண். 1086
Kodumpuruvam kōdaa maraippin nadunkanjar
Seyyala mannival kan.
கோணல்புருவம்
கோணாது மறைத்தால் நடுங்கவைக்கும்
துன்பம் செய்யாதிவள் கண்.
Kōnalpuruvam kōnaathu maraitthaal nadunkavaikkum
Thunpam seyyaathival kan.
If her arching eyebrows
straighten and hide, her
Eyes will not make me
tremble.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 1087
Kadaak kalitrinmēr katpadaam maathar
Padaa mulaimēl thukil.
மதம்கொண்ட யானைமேல் முகபடாம் மங்கையின்
சாயாத மார்புமேல் ஆடை.
Madhamkonda yaanaimēl mukapadaam
mankaiyin
Saayaatha marpumēl aadai.
The clothes covering the firm
breast of ladies are
Like the face shield of
frenzy tuskar.
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. 1088
Ohnuthar kōho udainthathē njaatpinul
Nannaarum utkumen peedu.
ஒளிரும் இவள்நெற்றிக்குத் தோற்குதே போர்க்களத்தில்
பகையஞ்சும் என் வலிமை.
Olirum ivalnetrikku thōrkuthē pōrkkalatthil
Pakaiyanjum en valimai.
My bravery, that my foes
afraid of, in the warfront,
Is loosing to her glittering
forehead.
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து. 1089
Pinaiyēr madanōkkum naanum udaiyaat
Kaniyevanō ēthila thanthu.
பெண்மான் இளம்பார்வை நாணம் உடையாட்குத்
தொடர்பில்லா
அணிகள் எதற்கோ.
Penmaan ilampaarvai naanam udaiyaalkku
Thodarpillaa anikal etharkō.
Why these unsuitable
ornaments for her, while she had
Daunting eyes of the doe and
shyness.
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090
Undaarka nallathu adunaraak
kaamampōl
Kandaar makizhseythal
inru.
குடித்தாரை மயக்கும் கள் காமம்போல
கண்டாரை மயக்குவ தில்லை.
Kuditthaarai mayakkum kal kaamampōla
Kandaarai mayakkuva thillai.
The liquor, intoxicate whom
they consume, will
Never intoxicate at sight,
like the love.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post