Wednesday 28 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 95



 

பொருள்நட்பியல்

WEALTH – FRIENDSHIP

                                                                          

95  மருந்து

Marunthu

Medicine

 

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.                           941

Mikinum kuraiyinum nōyseyyum noolōr

Valimuthalaa enniya moonru.                   

மிகுந்தாலும் குறைந்தாலும் நோய்தரும் படித்தவர்

வாதம்முதல் எண்ணிய மூன்று.

Mikunthaalum kurainthaalum nōytharum paditthavar

Vaathammuthal enniya moonru.

The excess or shortage of three, noted by the learned

Start with rheumatism will cause the diseases.

 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி உணின்.                                         942

Marunthena vēndaavaam yaakkaik karunthiya

Thatrathu pōtri unin.                                  

மருந்தென்பது வேண்டாம் உடம்பிற்கு உண்டது

செரித்ததைப் பார்த்து உண்டால்.

Marunthenpathu vēndaam udampirku undathu

Seritthathaip paartthu undaal.

No need of medicine, if eat after ascertain that

The food already had is digested.

 

அற்றால் அறவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.                             943

Atraal alavarin thunka ahthudampu

Petraan nedithuykkum aaru.                     

செரித்தல் அளவறிந்து உண்க அதுடம்பை

நெடுநாள் போற்றும் வழி.

Seritthal alavarinthu unka athudampai

Nedunaal pōtrum vazhi.

Eat knowing the limit of digestion, that is the way

To safeguard the body to live long.

 

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.                                              944

Atra tharinthu kadaippiditthu maaralla

Thuykka thuvarap pasitthu.                      

செரித்ததை அறிந்து கடைப்பிடித்து மாறுபாடின்றி

உண்ணுக நன்றாகப் பசித்து.

Seritthathai arinthu kadaipiditthu maarupaadinri

Unnuka nanraaka pasitthu.

Ensure the digestion by setting a limit without change

And eat only after feeling much hunger.

 

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு.                                     945

Maarupaa dillaatha undi marutthunnin

Oorupaa dillai uyirkku.                  

மாறுபாடு இல்லாது மீறாது மறுத்துண்டால்

இடையூ றில்லை உயிருக்கு.

Maarupaadu illaathu meeraathu marutthundaal

Idaiyoo rillai uyirkku.

No hurdles for life, if eat in a limit without

Difference and exceeding.

 

இழவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.                             946

Izhivarin thunpaankan inpampōl nirkum

Kazhipēr iraiyaankan nōy.                        

குறைவறிந்து உண்பானிடம் இன்பம்போல் நிற்கும்

நிறைய உண்பானிடம் நோய்.

Kuraivarinthu unpaanidam inpampōl nirkum

Niraiya unpaanidam nōy.

As the joy is with one who eat knowing the limit, 

The disease is with one who eat more.

 

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.                                           947

Theeyala vanrit theriyaan perithunnin

Nōyala vinrip padum.                                 

பசித்தீயின் அளவைப் பார்க்காமல் பெரிதுண்டால்

நோய் அளவின்றி வரும்.

Pasittheeyin alavai paarkkaamal perithundaal

Nōy alavinri varum.

No limit for diseases, if eat more without knowing the

Limit and the magnitude of hunger pangs.

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.                                   948

Nōynaadi nōymuthal naadi athuthanikkum

Vaaynaadi vaayppac cheyal.                    

நோய்பார்த்துக் காரணம்பார்த்து அது தணிக்கும்

வழிபார்த்துப் பொருந்தச் செய்க.

Nōypaartthu kaaranampaartthu athu thanikkum

Vazhipaartthu poruntha cheyka.

Find out the disease, the cause for it, the method

To cure and then treat accordingly.

 

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.                                         949

Utraan alavum piniyalavum kaalamum

Katraan karuthis seyal.                  

நோயுற்றான் வயதும் நோயளவும் காலமும்

கற்றவன் ஆராய்ந்து செய்க.

Nōyutraan vayathum nōyalavum kaalamum

Katravan aaraaynthu seyka.

The learned should treat, knowing the age of patient,

Severity of disease and the season.

 

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்

றப்பானாற் கூற்றே மருந்து.                                   950

Utravan theerppaan marunthuzhais selvaanen

Rappaanaar kootrē marunthu.                   

நோயுற்றான் தீர்ப்பான் கொடுப்பான் மருந்தென

நால்வகை உடையது மருத்துவம்.

Nōyutraan theerppaan koduppaan marunthena

Naalvakai udaiyathu marutthuvam.

The patient, physician, medicine and the nurse

Are the four parts of medical treatment.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post