Tuesday 20 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 2



 

அறம் பாயிரம்

VIRTUE  -   PREFACE

 

2  வான் சிறப்பு

Vaan Sirappu 

(மழையின் சிறப்பு)

 (Mazhaiyin Sirappu)

Glory of Rain

 

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.                    11

Vaaninr ulakam vazhanki varuthalaal                 

Thaanamizhtham enrunarar paatru.

மழையால் உலகம் வாழ்வதால் உயிருக்கது

அமிழ்தம் எனப்போற்றத் தகும்.

Mazhaiyaal ulakam vaazhvathaal uyirukkathu

Amizhtham enappōtrat thakum.

As the world is living with the rain, it can be

Praised as the heavenly food.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.                                         12

Thuppaarkku thuppaaya thuppaakki thuppaarkkut

Thuppaaya thooum mazhai.                                  

உண்போர்க்கு உணவாகி உழுவோர்க்கும் உணவுக்கும்

உணவாக இருப்பது மழை.       

Unporkku unavaaki uzhuvōrkkum unavukkum

Unavaaka iruppathu mazhai.

Rain is the food for one, who eat, who produce

As well as for the food itself.

 

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.                                               13

Vinninru poyppin virineer viyanulakatthu         

Ulninru udatrum pasi.                  

மழைநீர் பொய்த்தால் கடல்சூழ் பேருலகின்

உள்ளேயும் பசிக்கொடுமை வாட்டும்.

Mazhaineer poytthaal kadalsoozh pērulakin

Ullēyum pasikkodumai vaattum.

If the rain fails, hunger will torture the world,

Eventhough surrounded by the seas.

 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.                                  14

Ērin uzhaar uzhavar puyalennum                        

Vaari valankunrik kaal.     

உழவரும் ஏர் உழமாட்டார் வான்

மழைவளம் குன்றிய போது.

Uzhavarum ēr uzhamaattaar vaan

Mazhaivalam kunriya pōthu.

Even the farmers will not plough the land, 

If the sky failed to rain.

 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.                               15

Keduppathooum kettaarkkus saarvaaymat raankē

Eduppathooum ellaam mazhai.

பெய்யாமல் கெடுப்பதும் வளமின்றி கெட்டு

நொந்தோரைக் காப்பதும் மழை.

Peyyaamal keduppathum valaminri kettu

Nonthōrai kaappathum mazhai.

Rain is that will spoil by the absence and will

Resurrect all who lost and hurt.

 

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.                                16

Visumpin thuliveezhin allaalmat raankē            

Pasumpul thalaikaanpu arithu.

ஓரறிவு பசும்புல்லும் தலைகாட்டாது துளியேனும்

வான் பெய்யாது விடின்.

Ōrarivu pasumpullum thalaikaattaathu thuliyēnum

Vaan peyyaathu vidin.

Even the fresh blades of grass will not seed, unless 

The sky rains, atleast a drop.

 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.                                         17

Nedunkadalum thanneermai kunrum thadinthezhili                   

Thaannalkaa thaaki vidin.

பெருங்கடலும் வளம் குன்றிவிடும் வான்பருகி

அதன்மீதே பெய்யாது போயின்.

Perunkadalum valam kunrividum vaanparuki

Athanmeethē peyyaathu pōyin.

Even the ocean will lose its fertility, if the sky

Didn’t drink and pour on it.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.                  18

Sirappodu poosanai sellaathu vaanam                                               

Varakkumēl vaanōrkkum eendu.

வானம் வறண்டு விட்டால் உலகில்

வானோர்க்கும் வழிபாடு இல்லை.

Vaanam varandu vittaal ulakil

Vaanōrkkum vazhipaadu illai.

No rituals even for the Gods in heaven, 

If the rain in the world had dried.

 

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.                                 19

Dhaanam thavamirandum thankaa viyanulakam           

Vaanam vazhankaa thenin.                     

தானம் தவமிரண்டு மிருக்காது பேருலகில்

வானம் பெய்யா தெனில்.

Dhaanam thavamirandu mirukkaathu pērulakil

Vaanam peyyaa thenil.

No charity and penance in this world,

If the sky fails to rain.

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.                   20

Neerinru amaiyaathu ulakenin yaaryaarkkum   

Vaaninru amaiyaathu ozhukku.

நீரின்றி அமையாது வாழ்க்கை யாருக்கும்

வானின்றி அமையாது ஒழுக்கம்.

Neerinri amaiyaathu vaazhkkai yaarukkum

Vaaninri amaiyaathu ozhukkam.

No life without the water, nobody have

Discipline without the rain.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post