அறம் – இல்லறவியல்
VIRTUE – FAMILY LIFE
5 இல்வாழ்க்கை
Ilvaazhkkai
(குடும்ப வாழ்க்கை)
(Kutumba Vaazhkkai)
Family
Life
இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின்
நின்ற துணை. 41
Ilvaazhvaan enpaan
iyalpudaiya moovarkkum
Nallaatrin ninra thunai.
பெற்றோர் மனைவி மக்கள் மூவர்க்கும்
இல்வாழ்வான்
நிலைபெற்ற துணை.
Petror manaivi makkal moovarkum
Ilvaazhvaan nilaipetra thunai.
Family man is the permanent
companion for
Parents, spouse and the
children.
துறந்தார்க்கும்
துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான்
என்பான் துணை. 42
Thuranthaarkkum thuvvaa
thavarkkum iranthaarkkum
Ilvaazhvaan enpaan thunai.
துறந்தார்க்கும்
வறியார்க்கும்
இறந்தார்க்கும்
தனக்கும்
இல்வாழ்வான்
என்பவன் துணை.
Thuranthaarkkum variyaarkkum iranthaarkkum thanakkum
Ilvaazhvaan enpavan thunai.
Familyman is the companion
for the renounced,
Poor, ancestors and himself.
தென்புலத்தார்
தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43
Thenpulatthaar dheyvam
virunthōkkal thaanenraanku
Aimpulatthaaru ōmpal thalai.
இறந்தார்தெய்வம்
விருந்தினர்
சுற்றத்தார்
தானென்ற
ஐவகையிடத்தும்
அறமாற்றல் கடமை.
Iranthaardheyvam virunthinar sutratthaar thaanenra
Aivakaiyidatthum aramaatral kadamai.
Serving the dead, God, guest,
relative and
Self, is the duty of a
familyman.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44
Pazhiyanjip paatthoon
udaitthaayin vaazhkkai
Vazhiyenjal enjaanrum il.
பழியஞ்சிப் பொருளீட்டிப் பகுத்துண்டால் வாழ்வில்
ஒழுக்கம் குறைவ தில்லை.
Pazhiyanjip poruleetti pakutthundaal vaazhvil
Ozhukkam kuraiva thillai.
The discipline in life will not be lost, if one fear of blame,
Earn wealth and share the
food.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45
Anpum aranum udaitthaayin
ilvaazhkkai
Panpum payanum athu.
அன்பும் அறனும் வேண்டும் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் பெற்றிட.
Anpum aranum vēndum
ilvaazhkkai
Panpum payanum petrida.
To get the quality and
result, the family life
Shoud have love and virtues.
அறத்தாற்றின்
இல்வாழ்க்கை
ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன். 46
Arathaatrin ilvaazhkkai
aatrin puratthatrin
Pō-oyp peruva thevan.
அறநெறியில் இல்வாழ்க்கை ஆற்றும்பயன் ஒருவன்
பிறநெறியில்
பெறுவது இல்லை.
Araneriyil ilvaazhkkai aatrumpayan oruvan
Piraneriyil peruvathu illai.
What will get from other
ways, more than getting
From the virtuous domestic
life.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 47
Iyalpinaan ilvaazhkkai
vaazhpavan enpaan
Muyalvaarul ellaam thalai.
இலக்கண முணர்ந்து இல்வாழ்க்கை வாழ்பவன்
பல்வழி முயன்றோரில் சிறந்தவன்.
Ilakkana munarnthu ilvaazhkkai vaazhpavan
Palvazhi muyanrōril
siranthavan.
Family man, who live formally
is the greatest among
Others, who live in many
ways.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48
Aatrin ozhukki aranizhukkaa
ilvaazhkkai
Nōrpaarin nōnmai udaitthu.
அறவழிநடந்து
பிறரையும் நடத்துபவன் இல்வாழ்க்கை
தவம் செய்வோரினும் மேல்.
Aravazhinadanthu piraraiyum
nadatthupavan ilvaazhkkai
Thavam seyvōrinum mēl.
Life of one, who follow the virtuous way and lead others,
Is better than the monks, who
pray.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப
தில்லாயின் நன்று. 49
Aranenap pattathē ilvaazhkkai ahthum
Piranpazhippa thillaayin
nanru.
அறனெனச் சொல்வதே இல்வாழ்க்கை அதுவும்
பிறர்பழிப்பது
இல்லையெனில்
நன்று.
Aranena cholvathē ilvaazhkkai
athuvum
Pirarpazhippathu illaiyenil nanru.
Family life is the virtuous
life and it is better,
If devoid the criticism.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள்
வைக்கப் படும். 50
Vaiyatthul vaazhvaanku
vaazhpavan vaanuraiyum
Dheyvatthul vaikkap padum.
வையத்தில் நெறிபோற்றி வாழ்பவன் வானுலக
தெய்வத்தினும்
மதிக்கப் படுவான்.
Vaiyatthil neripōtri
vaazhpavan vaanulaka
Dheyvatthinum mathikkap paduvaan.
One who lives righteously on
the earth, will be adored
More than the God of heaven.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post