Sunday 20 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 6


மந்திரவீணை

காதில் அவ்வளவழகாக அபூர்வமாக
பாடுகிறது ஆனந்தமாம்
வீணைபோல, நடுங்கும் கம்பிபோல!

விழுந்துறங்கும் பாடகனை எழுப்புகிறது:
உன் இதயத்திடம் ஏனிதுபோல
பயந்து துடிக்கிறது?”

என்ன அது கேட்கின்ற ஒலிகள்? நட்சத்திர
ராசியின் லயம்நிறைந்த சங்கீதமும்
ஆழுகின்ற ஆத்மாக்களின் நாதமும் போல?
அவன் எழுகிறான் தன்னுள்ளேயிருந்தொரு
அலையைப்போல துள்ளியெழுகிறான்!
நிழல்எழும் திசையில் அந்தமுகம்
திரும்புகிறது தங்கக்கம்பிகள் காண்கிறது.
வந்துவிடு பாடகா! மேலேயும் கீழேயும்
அடியெடுத்துவைத்திடு, காற்றில் உயர்ந்தும்
இங்கே தாழ்ந்தும் அசைந்திடு! ஆனால்
உன் விரல்களால் தொடமுடியாது வீணையை

அவனதை காண்கிறான்: கம்பிகளாய் பரவி
வளர்கிறது, தன்னுடைய ஆத்மாவிற்கு மடியின்
ஆழத்தில் பதட்டத்தை ஏற்றுகிறான்!
வளர்கிறது காற்றில் அந்த ஒலி
பின்தொடர்கிறான் அவனின்று அதன்
மந்திரசக்தியால் பயத்தின் தொடர்கள்
ஏறியிறங்குகிறான், இங்கேயும்
அங்கேயும் எங்கேயும்!
நிறுத்துகிறான் அவன், ஆடியலைந்து
விசாலமாம் முன்கதவை திறக்கிறான்.
உள்ளேயிருந்துவரும் சங்கீதத்தின் அலையின்
வேகத்தில் அவன் பாய்ந்தொழுகுகிறானா?

அங்கே ஏழுவண்ண ஒளிமின்னும்
வீணையை பார்க்கிறான், இரவுபகல்
இணையில்லா சங்கீதநிதியாக! ஆனால்
அங்கே யாருமில்லை அதைமீட்ட!
ஆசையைப்போல அழலைப்போல அந்த
வீணை அவனை கட்டியணைக்கிறது,
வீங்கி மார்பகம் வீங்கி துடிக்கிறது இதயம்!
கட்டுப்பாட்டை இழந்ததுபோல!
இந்த வீணை பாடுவது இன்றென்
உயிரில்தான் அதன் பெருந்துயரம்
நான்தான் என் ஆத்மாவிலிருந்துதான்
இந்த பாடலின் புதுவெள்ளமும்!
அவன் ஒரு ஆனந்ததாண்டவத்தில், வீணையின்
சிறுகம்பிகளை உடைத்தெடுக்கிறான்,
நடுங்குகிறது உரத்த ஸ்வரங்கள் அந்த
மலைமேலே எழுந்த நீர்அருவிகள்
கடைசியில் ஆழத்தில் வந்துவிழுவதுபோல!
பரவுகிறது என் பாடல் எங்கும்!
ரத்தமும் குதித்து வந்து ஓழுகுகிறது!
இதயத்தையாளும் ஆசைதுக்கங்கள்
அதைவிட சக்திவாய்ந்ததல்ல என்றுமே!

அவன் அதன்பின் இவ்வுலகை பார்த்ததில்லை!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post