மனிதனும் மத்தளமும்
ஒரு மத்தளம்தான் மனிதனுக்கு நல்லது,
மனிதனவனுக்கு ஒரு மத்தளம்தானே!
மத்தளத்திற்கு திறமை அதிகம்!
மனிதனுக்கோ காதுகள் கேட்பதில்லை!
மத்தளம் தோலால் இழுத்து
கட்டிவைக்கப்பட்டிருக்கும்
மனிதனுக்கு இருக்கிறது சொந்தமாக
தோல், மத்தளம் படுப்பதுபோல
மனிதனும் படுத்திருப்பான்!
ரோஷத்தால் மனிதன் அதை
அடிப்பான், மத்தளம் ‘டும் டும்’
சத்தமிட்டு புலம்புகிறது, உடனே
மனிதன் சுடலை நடனம் ஆடுகிறான்!
அவனுக்கு முகம் கருக்கிறது
இழுக்கிறது மத்தளம் அவனை
ஏளனம் செய்கிறது, அவன்
கூச்சலிட்டு வீட்டை உலுக்குகிறான்!
‘அடடா மத்தளம்
அடடா மத்தளம்”
இவ்வளவு ஏளனம் எதற்கு?
என்னை மடையன் என்று நினைத்தா?
குத்துகிறாயா உன் நாக்கால்?
‘உதவாக்கரை
நீ என்னை
எதற்கு அவமானப்படுத்துகிறாய்?
அடிபட்டால் புலம்புகிறாய்?
கட்டியஇடத்தில் தொங்குகிறாய்?’
உன்னை நான் ஒரு மரத்தில்
இருந்தொரு நல்ல மத்தளமாய்
எடுத்து ஏற்றிக்கொண்டேன் என்றா?
நீ தானே வளர்ந்தாய் என்றா?
அடிக்கும்போது ஓடவேண்டும் நீ,
நான் பாடும்போது தாளம்
பிடிக்கவேண்டும், நான் சிரித்தால்
நீ அழவேண்டும்!
அவன் அந்த மத்தளத்தை திட்டினான்!
ரோஷம் அதிகமாகி விடாமல்
தொடர்ந்தடியடியடித்தது, மத்தளம்
உடைந்து சுடுரத்தம் சிந்தும்வரை!
மத்தளமதற்கு மனிதன் இல்லை!
மனிதனவனக்கு ஒரு மத்தளமில்லை!
வேறுஎன்ன? சந்நியாசம் செல்ல
சித்தமாகிறான் மனிதன்!
No comments:
Post a Comment
Let others know your opinions about this post