Sunday 18 May 2014

சுதந்திர சினிமா



சிறிய வர்த்தகமாக ஆரம்பித்த சினிமா நாளடைவில் வெகுஜனங்களை சென்றடைய, உலகில் உள்ள அனைவரும் சினிமாவை காசு கொடுத்து பார்த்து ரசிக்க ஆரம்பிக்க, சினிமா வர்த்தகத்தின் மதிப்பு வளர ஆரம்பித்தது. அதற்கேற்ப அதை தயாரிக்கும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.
ஒரு படம் தயாரிக்கவே நிறைய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உழைப்பு தேவைப்பட்டது. இவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்க படப்பிடிப்பு நிலையங்கள், ஸ்டுடியோக்கள் உருவாக ஆரம்பித்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிக்கும் சினிமாத்துறைக்கென்றே ஒவ்வொரு தலைமை இடங்கள் உருவாக ஆரம்பித்தது.
தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப சௌகரியங்களுக்காக அந்த தலைமை இடங்களில் ஸ்டுடியோக்கள் நிறைய உருவாகி வளர்ந்தது. தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ அதிபர்களானார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் கலைஞர்கள், தொழில்நுட்பம் அனைத்தும் இருந்தது. அவற்றைக்கொண்டு தொடர்ந்து படங்கள் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளுக்கு வினியோகிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது.
நாளடைவில் ஸ்டுடியோக்கள் அல்லாத தயாரிப்பு நிறுவனங்கள் உருவாகியது. கலைஞர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் படங்களைவிட பெயர் வாங்க ஆரம்பித்தார்கள்.
நிரந்தர ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக ஸ்டுடியோக்கள் அல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது. பலரும் ஸ்டுடியோ வேலைகளை பார்க்க நிரந்தர ஸ்டுடியோவில் உள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற தொழில் நுட்பத் தளங்களை வாடகைக்கு எடுக்கும் முறை நிலவில் வந்தது. 
கலைஞர்களை நிரந்தரமாக மாதச்சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யும் முறை இல்லாமல் போயி படத்துக்கு படம் ஒப்பந்தம் செய்து பணியாற்றும் முறை நிலவில் வந்தது. இதனால் பல திறமையான கலைஞர்களுக்கும் பல படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையும் அமோகமாக வளர்ச்சியடைந்தது.
சினிமா என்பது ஒரு பெரிய வியாபாரம் என்றாகிவிட அதன் பகுதிகளான தயாரிப்பு, வினியோகம், திரையிடல் என்பது எல்லாமே ஒரு சில பிரபலங்களின் வட்டத்துக்குள்ளேயே இருக்க நேரிட்டது. இப்போதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் புதியதாக சினிமாவில் சாதிக்கவரும் துடிப்பான கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் கையிலிருக்கும் சிறு முதலீட்டில் இந்த ஸ்டுடியோ அல்லது பெரிய நட்சத்திரங்களின் துணையில்லாமல் மிகவும் சிறிய பட்ஜெட்டில் படமெடுத்து தங்கள் திறமையை வெளிகாட்ட ஆரம்பித்தனர். இப்படி சுதந்திரமாக எடுக்கும் படங்களை சுதந்திர சினிமா என்று அழைத்தனர்.
ஹாலிவுட்டில் இது போன்ற சுதந்திர சினிமாக்களை இன்டீஸ் என்று அழைக்கின்றனர். இந்த படங்களுக்காகவே தனிப்பட்ட விழாக்களும் வியாபாரச் சந்தையும் நடைபெற்று வருகின்றன. அதுபோல அவ்வப்போது நம் நாட்டிலும் பல சுதந்திர சினிமாக்கள் உருவாகி வந்தது. இன்றும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அவற்றில் பலவும் வெற்றி பெற்று அதில் பணியாற்றிய நடிகர்களும் இயக்குநர்களும் பெரும் புகழ் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் இது போன்ற சுதந்திர சினிமாக்கள்தான் திறைத்துறையில் பல சாதனையாளர்களை வளர்த்து வந்தது. வளர்த்தும் வருகின்றது.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post