Sunday 8 June 2014

திஇச அழைப்பிதழ்


அன்புடையீர்>

       திரைப்படத்துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை வளர்க்க வேண்டும்> அத்துடன் திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற லட்சியத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற இந்த நிகழ்;வை நான் கடந்த மூன்று வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன். 
       இந்த சங்கமத்தில் சிறந்த> புகழ்பெற்ற> விருதுபெற்ற படங்களைப்பற்றியும் இலக்கியங்களைப்பற்றியும் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாக வெற்றிபெற்ற நல்ல படங்களைப்பற்றியும் இலக்;கியங்களைப்பற்றியும் விவாதிக்;கப்படுகின்றது. திரைப்படங்களின் தரம்> இலக்கியம் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் தொழில்நுட்பம்> வியாபாரம்> விளம்பரம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. 
       தற்பொழுது இம்முயற்சியை மேலும் பயனுள்ளதாக்கிட> மொழி எல்லைகளைத் தாண்டி நம் நாடு முழுவதும் உள்ள திரைப்படத்துறையைச் சார்ந்த தயாரிப்பாளர்கள்> படைப்பாளிகள்> கலைஞர்கள்> தொழில்நுட்ப வல்லுநர்கள்> மாணவர்கள் மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் அனைவருடைய பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு திரைப்பட இலக்கியக் பெயர்காட்டி (Film Literature Directory) உருவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 
       இதற்காக www.filmfriendship.com என்ற இணையதளத்தை ஆரம்பித்து, இதில் திரைத்துறை மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த அனைவருடைய பெயர்களையும், தொலைபேசி எண்களையும் இணைத்து வருகின்றேன். மேலும் இதை ஒரு புத்தகமாக வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றேன். திரைத்துறையைச்சார்ந்த அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், அனைவாpடமும் சென்று சேரவும் இந்த பெயர்காட்டி (வலைதளமும் புத்தகமும்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
       இந்த சங்கமத்தின் மூன்றாம் ஆண்டுவிழா 2014 ஜூலை மாதம் நடைபெற உள்ளது. திரைப்படம் மற்றும் இலக்கியத் துறைகளைச் சார்ந்த அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பு மேடையாக இந்த ஆண்டுவிழாவை நடத்த விரும்புகிறேன்.




(இது ஒரு மாதிரி மட்டுமே. இந்த திட்டத்தை மேம்படுத்த உங்கள் அறிவுரைகள் வரவேற்கப்படுகின்றன.)      

      இப்படி ஒரு அழைப்பிதழை அச்சிட்டு இந்த விழாவை வெகு விமரிசையாக நடத்துவதற்கு ஆசைப்படுகிறேன். மேற்குறிப்பிட்டது போல் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஆளுமைகள் அனைவரையும் இவ்விழாவில் பங்குபெறவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான பணிகளை செய்துவருகிறேன்.
ஒருவேளை ஆளுமைகள் மாறலாம். விழா நடைபெறும் நாள், இடம் மாறலாம். ஆனால் கண்டிப்பாக நிகழ்ச்சிகளும்,திரை மற்றும் இலக்கிய உலக பிரமுகர்களை இணைக்கும் விதமும் மாறாது. திரைப்படம் மற்றும் இலக்கியத்துறைகளை இணைக்கும் முயற்சியில் இந்த விழா ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
       இந்த நிகழ்வின் வெற்றி, ஒரே மேடையில் பிற மொழி எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இணைத்து இனிவரும் சங்கமங்களை மேலும் வெற்றிபெறச் செய்ய வழி வகுக்கும். அதுவே இந்த சங்கமத்தின் உண்மையான லட்சியம்.
      ஆகையினால், இந்த பெயர்காட்டியையும் ஆண்டுவிழாவையும் மென்மேலும் வெற்றிபெறச் செய்ய அன்பு நண்பர்களாகவும், புரவர்களாகவும், விளம்பரதாரர்களாகவும் உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டிக்கொள்கிறேன்.    

                                                நன்றியுடன்
             
                                                விஜயன்.பா 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இது திரைப்படத்துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை வளர்ப்பதற்கும் திரைப்படத்துறையினரையும் இலக்கியத்துறையினரையும் ஒன்றிணைப்பதற்குமான
ஒரு முயற்சி

தயாரிப்பாளர்களை இயக்குநர்கள் சந்திக்க..
இயக்குநர்களை தயாரிப்பாளர்கள் சந்திக்க..
தொழில்நுட்பக் கலைஞர்களை
இயக்குநர்கள் சந்திக்க..
இயக்குநர்களை தொழில்நுட்பக்
கலைஞர்கள் சந்திக்க..
இயக்குநர்களை நடிகர்கள் சந்திக்க..
நடிகர்களை இயக்குநர்கள் சந்திக்க..
எழுத்தாளர்களை திரைத்துறையினர் சந்திக்க..
திரைத்துறையினரை எழுத்தாளர்கள் சந்திக்க..
திரைத்துறையினரை திரைப்பட
மாணவர்கள் சந்திக்க..
நண்பர்களை நண்பர்கள் சந்திக்க..
புதிய நண்பர்களை அறிமுகம் செய்திட..
திறமைசாலிகளைத் தேடும்
படைப்பாளிகளுக்கும்
வாய்ப்புக்களைத் தேடும்
திறமைசாலிகளுககும்
வாய்ப்பளிக்கும் ஒரே களம்.




நமது சங்கமங்களில் சிறப்பு விருந்தினர்கள்
இதுவரையில


திரு பாலுமகேந்திரா
திரு ஆர்.சி.சக்தி
திரு என்.கே.விஸ்வநாதன்
திரு ஆர்.கே.செல்வமணி
திரு பிறைசூடன்
திரு கே.குணா
திரு மு.களஞ்சியம்
திரு ஏ.எம்.ஆர்.ரமேஷ்
திரு ஜி.தனஞ்சயன்
திரு கவிதாபாரதி
திரு சீனு ராமசாமி
திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன்
திரு வ.கௌதமன்
திரு பாலி ஸ்ரீரங்கம்
திரு தாமிரா
திரு எஸ்.ராமகிருஷ்ணன்
திரு தமிழ்மகன்
திரு பாஸ்கர்சக்தி
திரு அஜயன் பாலா
திரு பெருதுளசிபழனிவேல்
திரு விஜயமுரளி
திரு ஐகோ
திரு பாலமுரளிவர்மன்
திரு கேபிள்சங்கர்
திரு சுரேகா
திரு மதுமதி
மற்றும்
திரு புண்ணியா



இன்று முதல்

இவர்களுடன் நீங்களும்


என்னை தொடர்பு கொள்ள தொலைபேசி: 09445376497 அல்லது மின்னஞ்சல்: filmfriendship@gmail.com

No comments:

Post a Comment

Let others know your opinions about this post