Wednesday 28 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 132

 


இன்பம்கற்பியல்

LOVE - CHASTE LOVE

 

132  புலவி நுணுக்கம்

Pulavi Nunukkam

(ஊடல் நுணுக்கம்)

 (Ootal Nunukkam)

Finesse of Feigning

 

பெண்ணியலார் எல்லாரும் கண்ணில் பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.                             1311

Penniyalaar ellaarum kannil pothuvunpar

Nannēn paratthanin maarpu.                                 

பெண்மையுடையார் எல்லாம் கண்ணால் உண்பதால்

பொருந்தேன் பாவைநானுன் மார்பை.

Penmaiyudaiyaar ellaam kannaal unpathaal

Porunthēn paavainaanun maarbai.

As all the feminine eyes are  swallowing you,

I, the girl will not embrace your chest.

 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.                                1312

Oodi irunthēmaat thumminaar yaamthammai

Needuvaazh kenpaak karinthu.                

ஊடியிருக்கையில் தும்மினார் யாம் தம்மை

நீடுவாழ்கென சொல்வோம் என.

Oodiyirukkaiyil thumminaar yaam thammai

Needuvaazhkena solvōm ena.

He sneezed when I was in feighned anger, expecting

That I will wish his longevity.

 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.                                            1313

Kōttuppooc choodinum kaayum orutthiyaik

Kaattiya soodineer enru.                            

கிளைமலர் சூடினும் காய்வாள் ஒருத்திக்குக்

காட்டவே சூடினீர் என்று.

Kilaimalar soodinum kaayvaal orutthikkuk

Kaattavē soodineer enru.

Eventhough wear a flower of a branch, she will scold

As “You wear it to show her”.

 

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.                                     1314

Yaarinum kaathalam enrēnaa oodinaal

Yaarinum yaarinum enru.                          

யாரைவிடவும் காதலித்தோம் என்றான் ஊடினாள்

யாரைவிட யாரைவிட என்று.

Yaaraividavum kaadhalitthōm enraan oodinaal

Yaaraivida yaaraivida enru.

He told “I love you more than any one”, she quarreled

By asking “ than whom, than whom”.

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.                                  1315

Immaip pirappil piriyalam enrēnaak

Kannirai neerkon danal.                            

இப்பிறப்பில் பிரியோம் என்றான் வரும்பிறப்பில்

பிரிவதாய்க் கண்ணீர் கொண்டாள்.

Ippirappil piriyōm enraan varumpirappil

Pirivathaayk kanneer kondaal.

He said that he would not leave her in this birth,

She cried as he will leave in the next birth.

 

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.                                         1316

Ullinēn enrēnmat renmarantheer enrennaip

Pullaal pulatthak kanal.                             

நினைத்தேன் என்றேன் மறந்தீரோ ஏன்மறந்தீர்

என்றென்னைத் தழுவாமல் ஊடினாள்.

Ninaithēn enrēn marantheerō ēnmarantheer

Enrennait thazhuvaamal oodinaal.

I said “I remember you”, she retreated by stop hugging

And ask “did you forgot, why did you forget”.

 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.                                1317

Vazhutthinaal thumminēn aaka azhitthazhuthaal

Yaarullit thummineer enru.                                   

தும்மினேன் நூறாண்டு வாழ்த்தினாள் பின்அழுதாள்

யார்நினைக்க தும்மினீர் என்று.

Thumminēn noorandu vaazhtthinaal pinazhuthaal

Yaarninaikka thummineer enru.

She wish my longevity when I sneezed, then she cried

And ask “Who thinks of you to bring the sneeze”.

 

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைந்திரோ என்று.                                 1318

Thummus seruppa azhuthaal numarullal

Emmai maraitthirō enru.                            

தும்மல் அடக்கிட அழுதாள் உம்மவர்

நினைப்பதை மறைக்கிறீரோ என்று.

Thummal adakka azhuthaal ummavar

Ninaippathai maraikkireerō enru.

As I controlled my sneezing, she cried saying

“You want to hide her thinking of you”.

 

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரார் ஆகுதிர் என்று.                                          1319

Thannai unartthinum kaayum pirarkkumneer

Inneerar aakuthir enru.                               

தன்னை உணர்த்தினும் காய்வாள் பிறருக்கும்

இத்தன்மை யானவரா நீரென்று.

Thannai unartthinum kaayvaal pirarukkum

Itthanmai yaanavaraa neerenru.

Even I pacify and make her feel me, she will scold

“Are you like this to others also”.

 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.                                 1320

Ninaitthirunthu nōkkinum kaayum anaitthuneer

Yaarulli nōkkineer enru.                            

நினைத்திருந்து நோக்கினும் காய்வாள் யாரைநினைத்து

ஒப்புமை பார்க்கிறீர் என்று

Ninaitthirunthu nōkkinum kaayvaal yaaraininaitthu

Oppumai paarkkireer enru.

Eventhough I think and look at her, she will scold

“ With whom you are comparing me”.

 

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post