Monday 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 20


 அறம்இல்லறவியல்

VIRTUEFAMILY LIFE

                                                                          

20  பயனில சொல்லாமை

Payanila Sollaamai

Useless Talking

 

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.                                        191

Pallaar muniyap payanila solluvaan

Ellaarum ellap padum.

பலர் வெறுக்க பயனில்லாததைப் பேசுபவன்

எல்லோராலும் இகழப் படுவான்.

Palar verukka payanilaathathaip pēsupavan

Ellōraalum ikazhap paduvaan.

Who speak useless words insulting others,

Will be despised by all.

 

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.                                     192

Payanila pallaarmun sollal nayanila

Nattaarkat seythalir reethu.           

நண்பரிடம் வெறுப்புச் செய்தலினும் தீமையே

பயனிலாது பலர்முன் பேசுதல்.

Nanparidam veruppu seythalinum theemaiyē

Payanilaathu palarmun pēsuthal.

Speaking useless in the public is worse than

Doing adverse deeds to a friend.

 

நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.                                          193

Nayanila nenpathu sollum payanila

Paarit thuraikkum urai.        

பயனிலாச் சொல்லை விளங்கச் சொல்லுதல்

பயனற்றவன் என்றுரைக்கும் உரை.

Payanilaa sollai vilankas solluthal

Payanatravan enruraikkum urai.

Explaining the useless words will indicate that

The speaker himself an useless.

 

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.                               194

Nayansaaraa nanmaiyin neekkum payansaaraap

Panpilsol pallaa rakatthu. 

அறம்சாராது நற்குணம் நீக்கிடும் பயன்சாராது

பண்பிலாச்சொல் பலரிடம் பேசின்.

Aramsaaraathu narkunam neekkidum payansaaraathu

Panpilaacchol palaridam pēsin.

Speaking useless words indecently to many persons,

Will destroy the character and virtue.

 

சீர்மை சிறப்பொடு நீக்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.                                   195

Seermai sirappodu neekkum payanila

Neermai yudaiyaar solin.  

பண்புடையார் பெருமையும் போய்விடும் பயனிலாச்

சொல்லைச் சிறந்தவர் பேசின்.

Panpudaiyaar perumaiyum pōyvidum payanilaa

Chollai siranthavar pēsin.

Even the cultured men will lose the fame,

By speaking the useless words.

 

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.                                                196

Payanilsol paaraattu vaanai makanenal

Makkat pathadi yenal.

பயனிலாச்சொல் பலமுறை பேசுவானை மனிதனல்ல

மனிதரில் பதர் எனலாம்.

Payanilaasol palamurai pēsuvaanai manithanalla

Manitharil pathar enalaam.

Who speak useless words manytime, can be called

As not a human but a chaff among them.

 

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.                               197

Nayanila sollinum solluka saanrōr

Payanila sollaamai nanru.  

நன்மையில்லா சொல் சொல்லினும் சான்றோர்

பயனில்லா சொல்லாமை நன்று.

Nanmaiyillaa sol sollinum saanrōr

Payanilaa sollaamai nanru.

The great should not speak useless words even if

They speak virtueless words.

 

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.                                  198

Arumpaya naayum arivinaar sollaar

Perumpaya nillatha sol.

அரும்பயன் ஆராயும் அறிஞர் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

Arumpayan aaraayum arinjar sollaar

Perumpayan illaatha sol.

The wise, who analyze worth of things will not

Speak words which give no result.

 

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.                                                  199

Porultheerntha pocchaanthum sollaar marultheerntha

Maasaru kaatchi yavar.

பொருளற்றதை மறந்தும் சொல்லார் மயக்கமில்லா

மாசற்ற அறிவு உடையார்.

Porulatrathai maranthum sollaar mayakkamillaa

Maasatra arivu udaiyaar.

Who are conscious and had clear knowledge will never

Speak useless words, even by mistake.

 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.                                200

Solluka sollir payanudaiya sollarka

Sollir payanilaas sol.  

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லைச்

சொல்லாதே பயனில்லாச் சொல்.

Solluka sollil payanudaiya sollai

Sollaathē payanillaa sol.

Speak the usefull word among the words,

Don’t speak the useless word.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post