அறம் – இல்லறவியல்
VIRTUE – FAMILY LIFE
13 அடக்கமுடைமை
Adakkamudaimai
Humility
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121
Adakkam amararul uykkum
adankaamai
Aarirul uytthu vidum.
அடக்கம் தேவருள் உயர்த்தும் அடங்காமை
வாழ்வில் இருள்த்தீ செலுத்தும்.
Adakkam dhēvarul
uyartthum adankaamai
Vaazhvil irulthee selutthum.
Humility leads to the Gods, and disobedience
Brings dark fire to the life.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122
Kaakka porulaa adakkatthai
aakkam
Athaninoon killai
uyirkku.
அடக்கத்தை உறுதியாய் காத்திடு அதைவிட
ஆக்கம் உயிர்க்கு இல்லை.
Adakkatthai uruthiyay kaatthidu athaivida
Aakkam uyirkku illai.
Preseve the humility
strongly, nothing is
Important than it in the
life.
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின். 123
Serivarinthu seermai payakkum
arivarin
Thaatrin adankap perin.
நல்லோரால் அறிந்து பாராட்டப்படுவார் அறிவறிந்து
நல்வழியில் அடங்கி நடந்தால்.
Nallōraal arinthu paarattappaduvaar
arivarinthu
Nalvazhiyil adanki nadanthaal.
If follow the good path
humbly, you will be known
And praised by the good
people.
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124
Nilaiyin thiriyaa
thadankiyaan thōtram
Malaiyinum maanap perithu.
தன்நிலை மாறாது அடங்கியவன் உயர்வு
மலையின் உயர்விலும் பெரிது.
Thannilai maaraathu adankiyavan uyarvu
Malaiyin uyarvilum perithu.
The excellence of a humble
and consistant man
Is magnanimous than a
mountain.
எல்லார்க்கும்
நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே
செல்வம் தகைத்து. 125
Ellaarkkum nanraam panithal
avarullum
Selvarkkē selvam thakaitthu.
பணிவுடைமை எல்லார்க்கும் நல்லது செல்வர்க்கு
மற்றொரு செல்வம் போன்றது.
Panivudaimai ellaarkkum nallathu selvarkku
Matroru selvam pōnrathu.
Humility is good for all, it
is an additional
Wealth for the rich.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. 126
Orumaiyul aamaipōl ainthadankal aatrin
Ezhumaiyum ēmaap pudaitthu.
ஒருபிறப்பில்
ஆமைபோல் ஐம்பொறி அடக்குதல்
ஏழ்பிறப்பிலும்
காக்கச் சிறந்தது.
Orupirappil aamaipōl aimpori
adakkuthal
Ēzhpirappilum
kaakka chiranthathu.
Controlling the senses in a
birth as a tortoise,
Is the best to have for seven
births.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127
Yaakaavaa raayinum naakaakka
kaavaakkaar
Sōkaappar sollizhukkup pattu.
காத்திடுக நாவையேனும் காக்கத் தவறினால்
தன்சொல்லே துன்பம் தரும்.
Kaatthiduka naavaiyēnum kaakkat
thavarinaal
Thansollē thunpam tharum.
Atleast, control the toungue,
otherwise, their
Own words will give
sufferings.
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். 128
Onraanum theessol porutpayan
undaayin
Nanraakaa thaaki vidum.
தீச்சொல் பொருட்பயன் ஒன்றாகினும் மற்றவையால்
நன்மை விளையாது போகும்.
Theecchol porutpayan onraakinum matravaiyaal
Nanmai vilaiyaathu pōkum.
Even the meaning of a bad word is single, it will
Make all other good into bad.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129
Theeyinaar suttapun ullaarum
aaraathē
Naavinaar sutta vadu.
தீயினால் சுட்டபுண் உள்ளாறிவிடும் ஆறாது
நாவினால் சுட்ட வடு.
Theeyinaal suttapun vullaarividum aaraathu
Naavinaal sutta vadu.
The wound by the fire can be
healed, but the scar
By the words cannot be
healed.
கதங்காத்துக்
கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130
Kathankaatthuk katradankal
aatruvaan sevvi
Arampaarkkum aatrin
nuzhainthu.
சினங்காத்துக்
கல்விகற்று அடங்கவல்லவனை அடைய
அறம் வழி பார்க்கும்.
Sinamkaatthu kalvikatru adankavallavanai adaiya
Aram vazhi paarkkum.
Virtue will search ways to
reach one, who is learned,
Humble and can control the
anger.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post