Monday 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 30



 

அறம்துறவறவியல்

VIRTUE - SAINT LIFE

                                                                          

30  வாய்மை

Vaaymai

(உண்மை)

 (Unmai)

Veracity

 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந்

தீமை யிலாத சொலல்.                                           291

Vaaymai enappaduvathu yaathenin yaathonrum

Theemai yilaatha solal.

வாய்மை என்பது யாதெனில் யாருக்கும்

தீமை இல்லாததைச் சொல்லுதல்.

Vaaymai enpathu yaathenil yaarukkum

Theemai illaathathai solluthal.

Veracity is nothing but uttering words,

Having no bad effect on anyone.

 

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.                                        292

Poymmaiyum vaaymai yidattha puraitheerntha

Nanmai payakku menin.

பொய்மையும் வாய்மைக்குச் சமம் குற்றம்

இல்லாத நன்மை தரின்.

Poymaiyum vaaimaikku samam kutram

Illaatha nanmai tharin.

Even the falsehood is equal to the truth,

If it give crimeless goodness.

 

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.                               293

Thannenj sarivathu poyyarka poytthapin

Thannenjē thannaic chudum.

பிறரறியாதென்று பொய்சொல்லக் கூடாது சொன்னபின்

தன்மனமே தன்னைச் சுடும்.

Pirarariyaathenru poysollak koodaathu sonnapin

Thanmanamē thannaic chudum.

One sould not tell lie as nobody will understand it,

If told, his own mind will burn himself.

 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.                                 294

Ullatthaar poyyaa thozhukin ulakatthaar

Ullatthu lellaam ulan.

உள்ளத்தால் பொய் பேசாதிருப்பின் உலகத்தார்

உள்ளங்களில் எல்லாம் இருப்பான்.

Ullatthaal poy pēsaathiruppin ulakatthaar

Ullankalil ellaam iruppaan.

If one avoid telling lies, he will live

In the hearts of all in the world.

 

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.                                   295

Manatthodu vaaymai mozhiyin thavatthodu

Dhaanamsey vaarin thalai.            

மனமார உண்மை பேசுவான் தவத்திலும்

தானத்திலும் சிறந்தாரில் சிறந்தவன்.

Manamaara unmai pēsuvaan thavatthilum

Thaanatthilum siranthaaril siranthavan.

Who speak truth from the heart is superior to

The ascetics of penance and benevolence.

 

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.                                             296

Poyyaamai yanna pukazhillai eyyaamai

Ellaa aramum tharum.

பொய்யாமை போன்ற புகழில்லை அப்பொய்யாமை

எல்லா அறமும் தரும். 

Poyyaamai pōnra pukazhillai appoyyaamai

Ellaa aramum tharum.

No greater praise than avoiding falsehood,

And it will give all the virtues.

 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.                          297

Poyyaamai poyyaamai aatrin arampira

Seyyaamai seyyaamai nanru.

பொய்யாமை அறத்தைப் பின்பற்றினால் அறம்பிற

செய்யாமை செய்தாலும் தவறில்லை.

Poyyaamai aratthai pinpatrinaal arampira

Seyyaamai seythaalum thavarillai.

There is nothing to worry if one follows the path of truth,

Even if he didn’t have any other virtue.

 

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.                                 298

Puranthooymai neera namaiyum akanthooymai

Vaaymaiyaal kaanap padum.

புறத்தின்தூய்மை நீரால் அமையும் அகத்தின்

தூய்மை வாய்மையால் வரும்.

Puratthinthooymai neeraal amaiyum akatthin

Thooymai vaaymaiyaal varum.

Purity of body is by water and purity of

The heart is by veracity.

 

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.                             299

Ella vilakkum vilakkalla saanrōrkkup

Poyyaa vilakkē vilakku.

இருள்போக்கும் விளக்கெல்லாம் விளக்கல்ல சான்றோர்க்கு

பொய்யா விளக்கே விளக்கு.

Irulpōkkum vilakkellaam vilakkalla saanrōrkku

Poyyaa vilakkē vilakku.

All the lights are not the lights, for the greats,

Light of truth is the only light.

 

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.                                               300

Yaameyyak kandavatru lillai ennatthonrum

Vaaymaiyin nalla pira.

மெய்யென கண்டவற்றுள் இல்லை எவ்வகையிலும்

வாய்மையின் சிறந்த அறம்.

Meyyena kandavatrul illai evvakaiyilum

Vaaimaiyin sirantha aram.

Of all the revelations we know, nothing is

Superior to the truthfulness.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post