Wednesday 28 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 86

 


பொருள்நட்பியல்

WEALTH – FRIENDSHIP

                                                                          

86  இகல்

Ikal

(வேற்றுமை)

 (Vētrumai)

Hatred

 

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.                              851

Ikalenpa ellaa uyirkkum pakalennum

Panpinmai paarikkum nōy.                        

வேற்றுமை என்பதெல்லா உயிரிலும் மற்றுயிருடன்

ஒன்றுசேரா நோயை வளர்க்கும்.

Vēturmai enpathellaa uyirilum matruyirudan

Onrusēraa nōyai valarkkum.

Hatred is that which bring the disease of disunion

In own life and other lives.

 

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.                                   852

Pakalkaruthip patraa seyinum ikalkaruthi

Innaasey yaamai thalai.                                          

வேறுபட்டு வெறுக்கும்படிச் செய்தாலும் மாறுபட்டு

துன்பம் செய்யாமை நன்று.

Vērupattu verukkumpadi seythaalum maarupattu

Thunpam seyyaamai nanru.

Eventhough done to feel disagreeable, it is better

To do nothing painful through hatred.

 

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.                                        853

Ikalennum evvanōy neekkin thavalillaat

Thaavil vilakkam tharum.                          

வெறுப்பெனும் துன்பநோய் நீக்கினால் அழிவில்லா

நிலை புகழ் தரும்.

Veruppenum thunpanōy neekkinaal azhivillaa

Nilai pukazh tharum.

If one destroys disease of hatred, it will

Bring him ever lasting fame.

 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.                                  854

Inpatthul inpam payakkum ikalennum

Thunpatthul thunpam kedin.                                 

இன்பத்துள் இன்பம் வரும் வேற்றுமையெனும்

துன்பத்துள் துன்பம் போயின்.

Inpatthul inpam varum vētrumaiyenum

Thunpatthul thunpam pōyin.

If the hatred, the evil of all evils goes out,

The joy of all joys will come.

 

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலூக்கும் தன்மை யவர்.                                   855

Ikalethir saaynthozhuka vallaarai yaarē

Mikalookkum thanmai yavar.                               

வேற்றுமை வந்தாலும் சாய்ந்தொழுகா வல்லாரை

வெல்ல ஆற்றலுடையவர் யார்.

Vētrumai vanthaalum saaynthozhukaa vallaarai

Vella aatraludaiyavar yaar.

Who can win over those, who can stand

Straight, even in the storm of hatred.

 

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.                                   856

Ikalin mikalini thenpavan vaazhkkai

Thavalum kedalum nanitthu.                                

வேற்றுமையின் வெற்றி இனிதென்பவன் வாழ்க்கை

தவறலும் கெடுதலும் விரைவில்.

Vētrumaiyin vetri inthenpavan vaazhkkai

Thavaralum keduthalum viraivil. 

One who thinks that the success of hatred is sweet

Will soon get failure and ruin in life.

 

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.                                              857

Mikalmēval meypporul kaanaar ikalmēval

Innaa arivi navar.                                                    

வெற்றிதரும் மெய்ப்பொருள் அறியார் வேற்றுமை

தரும்             தீயறிவு டையார்.

Vetritharum meyporul ariyaar vētrumai

Tharum theeyarivu daiyaar.

Who have defiant spirit gives the hatred are those

Who didn’t know the meaning of success.

 

இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை

மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.                             858

Ikalir kethirsaaythal aakkam athanai

Mikalookkin ookkumaam kēdu.               

வேற்றுமைக்கு எதிர்கொண்டால் நன்மையும் அதனை

வளர்த்தால் தீமையும் வரும்.

Vētrumaikku ethirkondaal nanmaiyum athanai

Valartthaal theemaiyum varum.

The creation will come by objecting the hatred

And the destruction by bringing up.

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை

மிகல்காணும் கேடு தரற்கு.                                   859

Ikalkaanaan aakkam varunkaal athanai

Mikalkaanum kēdu thararku.                    

நல்லகாலம் வேற்றுமையை மறப்பான் கேடுகாலம்

அதனை வெல்ல நினைப்பான்.

Nallakaalam vētrumaiyai marappaan kēdukaalam

Athanai Vella ninaippaan.

One will forget hatred in the wealthy days and

Will try to overtake it in the bad days.

 

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.                                 860

Ikalaanaam innaatha ellaam nakalaanaam

Nannayam ennum serukku.                                   

வேற்றுமையால் துன்பம் தொடரும் நட்பால்

நல்ல பெருமித நிலை.

Vētrumaiyaal thunpam thodarum natpaal

Nalla perumitha nilai.

All the disasters are caused by hatred, and better

Proud state is by the friendship.

 



No comments:

Post a Comment

Let others know your opinions about this post