Monday, 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 34



அறம்துறவறவியல்

VIRTUE - SAINT LIFE

                                                                          

34  நிலையாமை

Nilaiyaamai

Instability

 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.                                       331

Nillaatha vatrai nilaiyina enruunarum

Pullari vaanmai kadai.

நிலை இல்லாதவற்றை நிலையெனக் கருதும்

அற்ப அறிவுடைமை இழிவு.

Nilai illaathavatrai nilaiyena karuthum

Arpa arivudaimai izhivu.

The low knowledge of thinking the instable

As the stable is the worst.

 

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.                                   332

Kootthaat tavaikkuzhaat thatrē perumselvam

Pōkkum athuvilin thatru.

கூத்தரங்கில் கூட்டம் போல் பெருஞ்செல்வம்

வரும் பின்கலைந்து செல்லும்.

Koottharankil koottam pōl perumselvam

Varum pinkalainthu sellum.

Just as the crowd in a theatre, huge wealth

Will accumulate and then disperse.

 

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.                                          333

Arkaa iyalpitrus selvam athupetraal

Arkupa aankē seyal.

நிலையற்றது செல்வம் அதைப் பெற்றதும்

நிலையான அறங்களைச் செய்திடு.

Nilaiyatrathu selvam athai petrathum

Nilaiyaana arankalai seythidu.

Wealth is instable, so, do the stable virtueous

Things immediately when you got it.

 

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.                                      334

Naalena onrupōr kaatti uyireerum

Vaala thunarvaarp perin.

நாளென்ற ஒவ்வொன்றும் ஆயுளை அறுக்கும்

வாளென்று உணர்வார் அறிஞர்.

Naalenra ovvonrum aayulai arukkum

Vaalenru unarvaar arinjar.

The wise will realize that each day is a sword

To minimize the life span.

 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.                                  335

Naacchetru vikkulmēl vaaraamun nalvinai

Mērsenru seyyap padum.

நாவியங்காது விக்கல் வரும்முன் நற்செயல்

விரைந்து செய்திடல் வேண்டும்.

Naaviyankaathu vikkal varummun narseyal

Virainthu seythidal vēndum.

Before the tongue stuck up by the hiccups,

Do the good things fast.

 

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.                                336

Neruna lulanoruvan inrillai ennum

Perumai udaitthiv vulaku.

நேற்று இருந்தவன் இன்றில்லை என்னும்

பெருமை பெற்றதிவ் வுலகு.

Nētru irunthavan inrillai ennum

Perumai petrathiv vulaku.

The world has this greatness, that one lived

Yesterday is not living today.

 

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.                                                   337

Orupozhuthum vaazhva thariyaar karuthupa

Kōdiyu malla pala.

உயிருடல் கூடியிருத்தல் நொடிப்பொழுதென அறியார்

எண்ணுவார் எண்ணங்கள் கோடி.

Uyirudal koodiyirutthal nodippozhuthena ariyaar

Ennuvaari ennankal kōdi.

Those without knowig that life in body is momentary,

Will think of crores of thoughts.

 

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு.                                      338

Kudampai thanitthozhiyap pulparan thatrē

Udampō duyiridai natpu.

முட்டையிலிருந்து பொறிந்தகுஞ்சு பறப்பதைப் போன்றே

உடம்புக்கும் உயிருக்கும் நட்பு.

Muttaiyilirunthu porinthakunju parappathaip pōnrē

Udampukkum uyirukkum natpu.

Friendship between the body and soul is like

The bird fly away from the shell.

 

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.                                     339

Urankuvathu pōlum saakkaa duranki

Vizhippathu pōlum pirappu.

உறங்குவது போல இறப்பு உறங்கி

விழிப்பது போல பிறப்பு.

Urankuvathu pōla irappu uranki

Vizhippathu pōla pirappu.

Death is like sleeping, birth is

Like waking up again.

 

புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சி லிருந்த உயிர்க்கு.                                           340

Pukki lamainthinru kollō udampinul

Thucchi liruntha uyirkku.

என்றும் இருக்க இடமில்லை உடம்புக்குள்

சிலகாலம் தங்கிய உயிருக்கு.

Enrum irukka idamillai udampukkul

Silakaalam thankiya uyirukku.

No permanent place for the soul to stay in a body, 

Where it had stayed for a brief time.

 

 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post