பொருள் – நட்பியல்
WEALTH – FRIENDSHIP
79 நட்பு
Natpu
Friendship
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. 781
Seyarkariya yaavula natpin
athupōl
Vinaikkariya yaavula kaappu.
நட்புபோல் அரியபொருள் ஏது அதுபோல்
செயற்கரிய காவல் ஏது.
Natpupōl ariyaporul ēthu athupōl
Seyarkariya kaaval ēthu.
Which is rarer than the
friendship and what is a
More powerful guard than
friendship.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. 782
Niraineera neeravar kēnmai piraimathip
Pinneera pēthaiyaar natpu.
அறிவுடையார்
நட்பு வளர்பிறை போன்று
அறிவிலார் நட்பு தேய்பிறை.
Arivudaiyaar natpu valarpirai pōnru
Arivilaar natpu thēypirai.
The friendship of the
intelligent is like waxing moon
And that of ignorant is like
waning moon.
நவில்தொறும்
நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. 783
Navilthorum noolnayam pōlum payilthorum
Panpudai yaalar thodarpu.
நூல்பொருள் கற்கக்கற்க இன்பம் பண்புடையார்
நட்பு பழகப்பழக இன்பம்.
Noolporul karkakkarka inpam panpudaiyaar
Natpu pazhakappazhaka inpam.
The friendship with cultered men are like learning books,
That taste sweeter when learn
more and more.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. 784
Nakuthar poruttanru nattal
mikuthikkan
Mērsen riditthar poruttu.
மகிழும் பொருட்டல்ல நட்பு தவறினை
முன்சென்று கண்டித்தல் பொருட்டு.
Makizhum poruttalla natpu thavarinai
Munsenru kanditthal poruttu.
The friendship is not meant
for mere joy, but to
Criticize when doing
mistakes.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். 785
Punarcchi pazhakuthal vēndaa unarcchithaan
Natpaam kizhamai tharum.
புணர்ந்து பழகுதல் வேண்டாம் நட்பிற்கு
உணர்ச்சியே உரிமை தரும்.
Punarnthu pazhakuthal vēndaam
natpirku
Unarchiyē urimai tharum.
No need of physical contacts
for friendship,
Feelings alone will give the
rights.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. 786
Mukanaka natpathu natpanru
nenjat
Thakanaka natpathu natpu.
முகம்மலர கொள்வது நட்பல்ல நெஞ்சத்து
அகம்மலர கொள்வதே நட்பு.
Mukammalara kolvathu natpalla nenjaathu
Akammalara kolvathē natpu.
The friendship with smile on
the face is not friendship
That which springs from the
heart is friendship.
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. 787
Azhivi navaineekki aaruyt
thazhivinkan
Allal uzhappathaam natpu.
தீயவை நீக்கி நல்வழிசெலுத்தி அழிவில்
உடன் அனுபவித்தல் நட்பு.
Theeyavai neekki nalvazhiselutthi azhivil
Udan anupavitthal natpu.
Avoiding the bad, steering in
the right way and
Accompanying in defeats is
friendship.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788
Udukkai izhanthavan kaipōla aankē
Idukkan kalaivathaam natpu.
ஆடை இழந்தவன் கைபோல அவ்விடம்
துன்பத்தை நீக்குதல் நட்பு.
Aadai yizhanthavan kaipōla avvidam
Thunpatthai neekkuthal natpu.
Like the hands of one who
lost his dress, friendship
Is that which remove the
distress there.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789
Natpirku veetrirukkai
yaathenir kotpinri
Ollumvaay oonrum nilai.
நட்பின் சிம்மாசனம் யாதெனில் மறுப்பின்றி
முடிந்தவரை உதவும் நிலை.
Natpin simmaasanam yaathenil maruppinri
Mudinthavarai uthavum nilai.
The throne of friendship is
that the state of helping
Wherever possible without
hesitation.
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. 790
Inaiyar ivaremak kinnamyaam
enru
Punaiyinum pullennum natpu.
இத்தகைய அன்பர் அன்புடையோம் என்று
புகழ்ந்தாலும்
குறைந்திடும்
நட்பு.
Itthakaiya anpar anpudaiyōm enru
Pukazhnthaalum kurainthidum natpu.
The friendship will be
diminished, even if elaborates
Like ‘how much dear’ and
‘being dear’.
No comments:
Post a Comment
Let others know your opinions about this post