Wednesday, 24 May 2017

இரட்டைமாட்டுவண்டிப்பாதை








இதுவரை வந்தவழியை திரும்பிப்பார்த்துகிடைத்த அனுபவங்களை முழுவதுமாக எடைபோட்டுப்பார்த்துதிரைத்துறையிலும் இலக்கியத்திலும் இதுவரை வருடக்கணக்கில் பணியாற்றியதை ஆராய்ந்துபார்த்து, 2011 முதல் திரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தியதில் கண்டுகொண்ட நண்மைதின்மைகளை எண்ணிப்பார்த்துதற்பொழுது வாழ்க்கைப்பயணத்தை முன்னோக்கி செலுத்தும்போது கண்முன்னால் தெரிவது ஒரு இரட்டைமாட்டுவண்டிப்பாதை மட்டும்தான்.
திரைப்பட இலக்கியச் சங்கமம் மற்ற அனைத்து பணிகளுக்கும் அஸ்திவாரமாக மாறியிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லைஇதுவரை அதை நான் கண்டுகொள்ள மறுத்தேன் என்பதுதான் நிஜம்சங்கமம் வேறுஎன்னுடைய திரைப்பட இலக்கிய பணிகள் வேறு என்றுதான் இதுவரை நினைத்து வந்தேன்ஆனால் காலம் அந்த எண்ணத்தை முழுமையாக மாற்றிவிட்டது.
தற்பொழுது என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் பலரும் அறிவுருத்தியபடி இந்த சங்கமத்தை தொழில்முறையாக நடத்த முடிவுசெய்தபோது தான் இந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானதுநான் எத்தனைநாள் இதை காணாமல் தாமதம் செய்திருக்கிறேன் என்று புரிகிறதுஇந்த சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கு முழுமூச்சாக பணியாற்றினால் அதுவே என்னுடைய மற்ற பணிகளுக்கும் பலன்தரும் என்பது தற்பொழுது தெரிகிறது.
அதனாலேயே இச்சங்கமத்தின் ஏழாவது ஆண்டு முயற்சியாக திரைக் கலைஞர்கள் வட்டம் ஆரம்பித்துள்ளேன். 
அதே நேரத்தில் திரைப்பட பணிகளுக்கென்றே கமலபாலா ஸ்க்ரிப்ட்ஸ் மற்றும் திரைப்படத் தோழமை தயாரிப்பு’ ஆகிய இரண்டு சேவைகள் இச்சஙகமத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளனஇந்த இரண்டு சேவைகளுக்கும் ஒரே நேரத்தில் நல்லதொரு அஸ்திவாரம் அமைக்கும் விதமாக புதியதொரு கூட்டுத்தயாரிப்பு முறையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்’ கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டு பாதைகளும் வெவ்வேறானதல்லஇரண்டுமே ஒரே மாட்டுவண்டிப்பாதையின் தடங்கள்தான்இரண்டும் இணையானவைஒரே சீறாக செல்பவைசெல்லவேண்டியவை!
அதனால் என் பயணத்தை இந்த இரட்டைப்பாதையில் செலுத்த உள்ளேன்ஒரே நேரத்தில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளை நடத்திக்கொண்டுபொன்னியின் செல்வன் படத்தின் பணிகளையும் தொடர்ந்து செய்துவருகிறேன்.

திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நிகழ்வுகளைப்பற்றியும்பொன்னியின் செல்வன் படப்பணிகள் பற்றியும் தொடர்ந்து அடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்..

Saturday, 20 May 2017

திரைப்பட இலக்கியப் பெயர்காட்டி



திரைப்படத் துறையினர் மத்தியில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கவும், திரைப்படத் துறைக்கும் இலக்கியத் துறைக்கும் மத்தியில் ஒரு பாலமாக அமையவும்தான் நான் திரைப்பட இலக்கியச் சங்சமத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.
இந்த சங்கமங்களில் திரைப்படங்களின் உள்ளடக்கம், படைப்பாக்கம், தொழில்நுட்பம், தயாரிப்பு, வியாபாரம் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சங்கமத்தை மேலும் ஆக்கப்பூர்வமானதும் பயனுள்ளதாகவும் ஆக்கிடும் முயற்சியின் அடுத்த கட்டமாகத்தான் ஒரு சிறப்பு திரைப்பட இலக்கியப் பெயர்காட்டியை (Film Literature Directory) உருவாக்க திட்டமிட்டேன்.
மொழி எல்லைகளைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து திரைத்துறையினரையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாகத்தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக குறைந்தபட்சம் ஒரு பெயர;காட்டியிலாவது திரைத்துறையினர் அனைவருடைய பெயரையும் இணைக்க ஆசைப்படுகிறேன்.
எடுத்தோம் கவுத்தோம் என்று திரைத்துறையினர் அனைவருடைய பெயர் மற்றும் தொலைபேசி எண்களை இந்த பெயர்காட்டியில் சேர்க்க நான் விரும்பவில்லை. காரணம் இதை ஒரு சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
அதனால் படிப்படியாக ஒவ்வொருவரையும் திரைக் கலைஞர்கள் வட்டம் அல்லது எழுத்தாளர்கள் வாசகர்கள் வட்டத்தில் இணைத்து, அவர்களுடைய அனுமதி பெற்று, அனைவருடைய அலுவலக எண்களை (Official numbers) மட்டுமே இந்த பெயர்காட்டியில் இணைக்க இருக்கிறேன்.
பிரபலமான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் போன்றோர் தங்கள் அலுவலக எண், மேனேஜர; அல்லது உதவியாளர; எண்களை இந்த பெயர்காட்டியில் இணைக்க தருவதுதான் நல்லது.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் ஒரு படியாக நான் ஆரம்பித்த என்னுடைய இந்த வலைப்பூவில் ஒரு பகுதியாக, திரைத்துறைக்கு செய்யும் ஒரு சேவையாகத்தான் நான் இந்த திரைப்பட இலக்கியப் பெயர்காட்டியை ஆரம்பித்தேன். 
திரைப்பட இலக்கியத்துறை நண்பர;கள் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறுவார்கள் என நம்புகிறேன்.
தயாரிப்பாள்ர்களையும் படைப்பாளிகளையும் புரொபஷணலாக மாற்றுவதற்கு இது முதற்படியாக விளங்கும். 

Film Literature Directory

The content will be filled soon.

Disclaimer

I am writing the articles and compiling the Film Literature Directory in this site as a service to the film and literary fields.
Mistakes if any found in these posts will be corrected, deleted or changed according to the suggestions of the concerned persons properly.
This Directory and Articles are only for just introduction to the persons or matters and to get contact numbers of the persons or institutions.
The contact numbers and details for the directory and contents for the articles are collected from the persons concerned, and already became member of Cine Artists Circle or Writers and Readers Circle. 
I will not be responsible in any manner, if anyone made any contact, relationship or business using this directory or articles.
The readers must check the truthfulness and authenticity of the matters at their own risk. 

Monday, 15 May 2017

தொழிலாளர்களின் உரிமையும் பொதுமக்கள் அவதியும்..


Related image


இன்று 15-5-17 அன்று முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். அது அவர்கள் உரிமை. அதில் நியாயம் இருக்கலாம். முதலிலேயே அறிவித்ததால் பொதுமக்களும் அதை எதிர்கொள்ள தயாராக இருந்திருப்பார்கள்.

ஆனால் நேற்று 14-5-17 அன்று மாலையிலேயே பல இடங்களில் அவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டனர். எதிர்பாராதவிதமாக ஆரம்பித்த இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எப்படி அவதிப்படுவார்கள் என்று இவர்கள் யோசித்தார்களா? இதை நடத்தும் தொழிற்சங்கங்கள் இதை யோசிக்க வேண்டாமா?

நேற்று நான் கே.கே.நகர் பகுதியில் ஒரு முழுநாள் நிகழ்வை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கு என் மகளும் வந்திருந்தாள். மதியம் சாப்பிடச் சென்ற அவள் திரும்பி வரும்போது, வடபழனி பேருந்து நிறுத்தத்தில் மாட்டிக்கொண்டுவிட்டாள். எங்கு செல்லவும் பேருந்து கிடைக்கவில்லை.

என் மனைவி மவுலிவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிலிருந்து சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு செல்ல பேருந்துக்காக அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் பேருந்து கிடைக்கவில்லை. இருவரும் இரவு ரயிலில் கோவைக்கு செல்லவேண்டும். அது ஏற்கனவே திட்டமிட்ட பயணம். வரும் பேருந்துகள் எல்லாம் பக்கத்தில் உள்ள டிப்போக்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன.

எனக்கு செய்தி கிடைத்ததும் நான் என்னுடைய நிகழ்வை சீக்கிரமாக முடித்துவிட்டேன். அதற்காக சிறப்பு விருந்தினர்களைக்கூட அழைத்து நிகழ்வுக்கு வரவேண்டாம் என்று நானே சொல்ல வேண்டியதாயிற்று. காரணம் என்னால் நிகழ்வில் மனநிம்மதியாக இருக்க முடியவில்லை.

உடனே ஒரு குடும்ப நண்பரை அழைத்து, அவர் தன்னுடைய வேலையை  பெர்மிஷன் போட்டு, காரை எடுத்துக்கொண்டு வந்து, என் மகளை வடபழனியிலிருந்து அழைத்துக்கொண்டு, மவுலிவாக்கம் வந்து என் மனைவியையும் அழைத்துக்கொண்டு, ரயில் நிலையத்திற்கு சரியான நேரத்துக்கு சென்று சேர்ப்பத்தார். அவர்களுக்கு ரயில் கிடைத்தது.
நான் ஷேர் ஆட்டோக்களில் மாறி மாறி ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

இது என்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவம். கார் வைத்த ஒரு நண்பர் இருந்ததால் எங்களால் நேரத்திற்கு செல்ல முடிந்தது, முடியாதவர்கள் நிலை?

வீடுவரும் வழியில் பலரும் அவதிப்படுவதை நேரடியாக பார்த்தேன். காலையில் வேலைக்கு வந்தவர்கள் வீடுகளுக்கு திரும்ப கஷ்டப்படுகின்றனர். பஸ்சுக்கு மட்டும் கையில் காசு வைத்துள்ளவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறமுடியாமல் நடக்கின்றனர். தூரத்திற்கு செல்ல எந்த வசதியும் இல்லை.

வழக்கமாகவே விருகம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு அஞ்சுநிமிஷத்துக்கு ஒரு பஸ் வரும். அவ்வளவு கூட்டம் இருக்கும். நேற்று இரவு வரும் பஸ் எல்லாம் ஐயப்பன்தாங்கல் டிப்போ வரைக்கும்தான் போகும் என்று கண்டக்டர்கள் சொன்னார்கள். அப்படியிருக்க அந்த பஸ்சில் ஏறவேண்டுமா, ஐயப்பன்தாங்கலிலிருந்து எப்படி செல்வது என்று பெண்கள், குழந்தை குட்டிகளுடன் பஸ்சுக்காக நிற்பவர்கள் தடுமாறுகின்றனர். இதெல்லாம் ஒரு உதாரணம் மட்டும்தான். சொல்லாத அவதிகள் இன்னும் எத்தனையோ..


டிரைவர், கண்டக்டர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களுக்கு அவர்கள் உரிமைமட்டும்தான் முக்கியம்.. அப்படியென்றால் அவர்களுக்கு பொறுப்பு இல்லையா.. (அரசு சேவை அரசு வேலையான மாறிவிட்டதால்தானோ!)

ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரியுது. பொதுவுடமைவாதம், தொழிலாளர்நலம் போன்றவற்றில் பொதுமக்களுக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது. ஆனால் பொதுமக்களை துன்புறுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொழிற்சங்கங்கள் மீது பொதுமக்கள் கொண்ட வெறுப்பை அதிகரிக்கத்தான் செய்கிறது.

மெரினா புரட்சிக்குப் பின்னும் தொழிற்சங்கங்கள் திருந்தவில்லை என்றால், மக்களுக்கு பிடித்தபோராட்ட வடிவங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மீது அனைவருக்கும் வெறுப்புத்தான் வரும்.

இதுக்கெல்லாம் ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடியும்னு காட்டின ஜெயலலிதா மாதிரி ஆளுங்கதான் ஆட்சிக்கு வரணும்என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இது நேற்று ஷேர் ஆட்டோவில் ஒருவர் சொல்ல கேட்டது. அது சரியா தவறா என்பது வேறுவிஷயம். ஆனால் நானும் அதை நேற்று இரவு ஆமோதித்தேன் என்பதுதான் உண்மை! அதனால் தான் இந்த பதிவு.

தொழிற்சங்கங்கள் சிந்திக்கட்டும். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் அதைமீறி எப்படி செல்வது என்பதுபற்றி நாம் யோசிக்கலாம்!



Tuesday, 9 May 2017

Continuous Practice Scheme





Dear friends,

I am very proud to announce that our Film Literature Confluence, which had been started with the thoughts like ‘the film and literature fields should be united together and a friendship circle among film fraternity should be created’, has been conducting successfully for more than six years continuously!

Now, our confluence is going forward with many more thoughts like ‘should find solution for some problems in the film field, should guide for alternate views in film field, a few basic changes should be brought as everyone working in the film field will be benefitted’.

‘Continuous Practice Scheme’ had been introduced as to reach those objectives and as the next step of the development of our confluence! By this, a way will be opened for all in the film and literature fields to join together, to share their experience together and to help one another!

Weekly a meet, monthly a festival and some special programs are going to be conducted under this scheme. And classes on ‘Cinema, an introduction’ also had been planned to conduct for the new comers to the film field as writers, actors, directors, technicians and producers.

These will be very useful for who search for chance and search for success.

This scheme will give will give chance for each one to be introduced to many new persons, to develop the contacts, to screen and analyze short films,  and to bring those to the proper places.

It will help all to enjoy the films, to know about the films, to learn how to make a film.

Please join this scheme which is useful for all.

-Kamalabala B.Vijayan

 9446376497

Film Literature Confluence – Monthly Meet May 2017 (



Film Literature Confluence – Monthly Meet May 2017
(Continuous Practice Scheme Inauguration)

Date: 14-5-2017 Sunday

Venue: Maha Mahal, 17 Anna Main Road, Near MGR Nagar Market, Chennai-78

10.00AM:  Short Film Analysis Meet
(Screening and Analysis) Selected Films

Guests: S.S.Stanly, Kavithabharathi, Vediyappan

2.00PM: Screening
Film –Chemmeen
(The first South Indian film, which won the Gold medal from the President for the best film in India)
Seminar: From Chemmeen to Bahubali

6.00PM: Film Analysis Meet
Films: Pa.Pandi & Bahubali-2
Guests: Trotsky Maruthu, Murugeshbabu, Velkannan
(The details of the short films will be announced soon)

Come on friends of Film and Literature world..
Let us join together.. and Let us win together

With love
Kamalabala B.Vijayan