Monday, 25 December 2017

அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் – ஒரு பார்வை




திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல்ஒரு பார்வை

திரைப்பட இலக்கிய சங்கமம்  அருவி சிறப்பு ஆய்வரங்கம் மற்றும் கலந்துரையாடல் 17-12-17 ஞாயிறு அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் வெற்றிகரமாக நடைபெற்றது.

திரைப்பட இலக்கிய சங்கமம் ஒவ்வொரு மாதமும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து அதற்கான ஆய்வரங்கத்தை
நடத்துவார்கள். தேர்ந்தெடுக்கும் படங்கள் க்ளாஸ் மாஸ் என இல்லாமல் எல்லா ஜானர்களிலும் இருக்கும். அந்த வரிசையில் இந்த முறையும் நவம்பர் மாதம் வெளியான அறம், தீரன் அதிகாரம் ஒன்று, விழித்திரு ஆகிய படங்களுக்கான கலந்துரையாடல்
கூட்டம் நடத்தத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் அருவி வெளியாகி, நல்ல படம் என்று பலதரப்பினராலும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், ஒரு நல்ல விஷயமாக, அந்த படத்திற்கு செய்யும் ஒரு உதவியாக,  உடனடியாக இந்த படத்திற்கு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இதை நிகழ்ச்சியில் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கமலபாலா பா.விஜயன் அவர்கள் நிகழ்வின் துவக்கத்திலேயே தெரிவித்தார். நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதில் நடித்திருந்த நடிகர்கள் பங்கெடுத்திருந்தனர். நிகழ்வை காணவந்த பலரும் கடைசி வரைக்கும் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டு பார்க்கும் அளவுக்கு அரங்கம் நிறைந்திருந்தது.

முதல் நிகழ்வாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநரின் அப்பா மற்றும் சகோதரி அவர்களை அழைத்து கவுரவித்தனர். அரங்கமே எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தது. அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும், புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இயக்குநரும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சியால் நெகிழ்ந்து போனார்.

படக்குழுவினரை அறிமுகம் செய்ய, முக்கியமாக அதில் நடித்திருந்த நடிகர்களை அறிமுகம் செய்ய சிறப்பு விருந்தினராக
வந்திருந்த, படத்தில் இயக்குநராகவே நடித்த கவிதா பாரதி அவர்கள் அழைக்கப்பட்டார். அவரும் நடிகர்கள், தொழில்நுட்ப
கலைஞர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொகுப்பாளரும்
ஒருங்கிணைப்பாளருமான விஜயன் அவர்கள் ஒவ்வொருவரையும் பேச அழைத்தார். முதலில் அதில் நடித்த நடிகர்களை
பேச அழைத்தார்.

முதலில் படத்தில் அருவியின் அப்பாவாக நடித்திருந்த திருநாவுக்கரசர் பேசினார். பின்னர் சாமியராக நடித்திருந்த நடிகர் மற்றும் அதில் அரசியல்வாதியாக நடித்திருந்த மதன் பேசினார்கள். மூவரும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு இணை இயக்குநர், மற்றும் எடிட்டரை பேச அழைத்தனர். ஆனால் அவர்கள் பேசவில்லை.

அதைத் தொடர்ந்து படத்தை பற்றிய ஒரு பாராட்டுரையை எழுத்தாளர் அகர முதல்வன் வழங்கினார். அதைத் தொடர்ந்து கேபிள் சங்கர் அவர்கள் படத்திற்கான பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரு சேர முன்வைத்தார். அதன் பின் மீண்டும் கவிதா பாரதி பேசினார். ஆனால் இம்முறை சிறப்பு விருந்தினராக பேசினார். படத்தை பற்றியும் அதில் நடித்த
அனுபவங்கள் பற்றியும் குறிப்பிட்டு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்.

கதாநாயகி அதிதி பாலன் அதன் பின் பேச அழைக்கப்பட்டார். படத்தில் பேசியது போல நீளமான வசனங்களாக இல்லாமல் அனைவருக்கும் நன்றி’ தெரிவித்து ஒரு வார்த்தையில் தனது உரையை முடித்தார். அடுத்ததாக இயக்குநர் அருண் பேசினார். பேசுவதற்கு சற்று தயங்கினார். அதனால் கலந்துரையாடலாக நிகழ்வு தொடர்ந்தது. அரங்கத்தில் அமர்ந்திருந்த
நண்பர்கள் கேள்வி கேட்க அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார் இயக்குநர்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசினார். இயக்குநருக்கும் சேர்த்து படத்தை பற்றிய பல விஷயங்களை எடுத்துரைத்தார்.. படங்களுக்கான கதைத்தேர்வு செய்தது, வெளியிடுவதற்கு எவ்வளவு பொறுமை காத்தது, விளம்பரம் செய்தது என அனைத்து விபரங்களையும்
தெளிவாக விளக்கினார். ஜோக்கர் முதல் அருவி வரையில் படத்திற்காக தங்கள் கம்பனி செய்த விளம்பர செலவுகளை கூட வெளிப்படையாக சொன்னார்.. சமகால திரைப்பட தயாரிப்பு பற்றியும், தயாரிப்பாளர்களின் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார். அவரிடமும் நண்பர்கள் கலந்துரையாடினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

அப்படி கேள்வி கேட்கையில் ஒரு நண்பர் இந்த நிகழ்ச்சியை குறித்தும் இதுபோல நிகழ்வுகள் ஏன் பெரிய அளவில் நடப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கையில், திரைப்பட இலக்கிய
சங்கமத்தை பாராட்டியும், இப்படியொரு நிகழ்ச்சி திரைத்துறைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், இதுபோல நிகழ்ச்சிகளை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதையும், நிகழ்ச்சி நடத்துபவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார்.

அவருடனான கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.

விசாரணை, ஜோக்கர், அறம் போன்று அவ்வப்போது நல்ல படங்கள் வெளிவரும்போது அந்த படங்களை பாராட்டும் பல நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே நடந்து வருவது அனிவருக்கும் தெரிந்த விழயம் தான்..
ஆனால் இங்கே புதியதாய் வெற்றிபெற்ற இயக்குநரின் பெற்றோரை அழைத்து பாராட்டியது சற்று புதிய அனுபவமாக இருந்தது. மனதிற்கு இதமாகவும் இருந்தது. மேலும் எல்லா பாராட்டு கூட்டங்களிலும் இயக்குநர் மற்றும் நடிகர்களை தான் அனைவரும் அழைப்பார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட.. ஆனால் திரைப்பட இலக்கிய சங்கமத்தில் மட்டும் தான்
இப்படி நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் அழைத்து சிறப்பித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் அதுதான்.
மீண்டும் இதுபோல் ஒரு நல்ல படத்துடன் இந்த சங்கமத்தில் சந்திக்க புதுப்படம் எடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும், தொடர்ந்து நடத்த இந்த சங்கமத்திற்கும் வாழ்த்துக்கள்..

விஜிலா விஜயன்



17-12-17 அன்று நடந்த நிகழ்வில் போடோக்களையும் எடுத்து, நிகழ்வை பற்றிய ஒரு ரிப்போர்ட்டையும் அளித்த விஜிலாவுக்கு நன்றி..
நிகழ்வை படம் பிடித்து தந்த (சற்று தாமதமாக தந்தாலும்..) peoples consent network நந்தகுமாருக்கும் குழுவினருக்கும் நன்றி..
(அவர்களுக்கும் இது ஆரம்பம் தான்.. அதனாலேயே இந்த தாமதம்.. அதுவுமில்லாமல் எஸ்.ஆர்.பிரபு பேசுவது முழுமையாக பதிவாகவில்லை.. பேட்டரி தீர்ந்துவிட்டதாம்.. அதையும் மன்னிப்போம்.. குறிப்பாக பிரபு சாரை மன்னிக்கும்படி கேட்டுகொள்கிறேன்..)

-- கமலபாலா பா.விஜயன்     

Tuesday, 19 December 2017

சினிமா குருகுலம் - அறிமுகம் 31-12-17



அருவி படத்தின் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து நமது சங்கமத்தின் அடுத்த முயற்சி..

சினிமா குருகுலம் - அறிமுகம் 

முதல் வகுப்பு - அருவி & புத்தாண்டுத் திட்டங்கள்


31-12-17 ஞாயிறு காலை 10.30 மணிக்கு 

இடம்: மஹாமஹல், 17அண்ணாமெயின்ரோடு, எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில், (கணேஷ் பவன் மாடியில்), சென்னை-78

அனைவரும் வாருங்கள்.. அனுமதி இலவசம்..


அன்புடன் 
கமலபாலா பா.விஜயன் 


குறிப்பு:

சினிமா குருகுலம் – அருவி

பாராட்டும் நேரம் முடிந்து விட்டது...
விமர்சனத்திற்கான வேளையும் கடந்து விட்டது...
இது கற்றுக்கொள்ள வேண்டிய காலம்...

அத்துடன் புத்தாண்டில் இணைந்து பணியாற்றவேண்டிய சில நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது..

(அரங்கம் முடிவு செய்வதற்கு முன்பே அழைத்து ஊக்கம் தந்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..)


Following the grand success of ARUVI - Discussion
the next attempt of our Confluence..

CINEMA GURUKULAM – an introduction

Introductory Class: Aruvi & New Year Plans

31-12-2017 Sunday 10.30 AM

Venue: Maha Mahal, 17 Anna Main Road, Near MGR Nagar Market, (upstairs: Ganesh Bhavan), Chennai-78

All are welcome.. Entry free..

With love

KamalabalaB.Vijayan

Saturday, 2 December 2017

அருவி - சிறப்பு ஆய்வரங்கம் & கலந்துரையாடல்



திரைப்படஇலக்கியச்சங்கமம்
அருவி - சிறப்பு ஆய்வரங்கம் & கலந்துரையாடல் 

படம்: அருவி
கலந்து கொள்பவர்கள்: தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலைஞர்கள்..

17-12-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி

டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கேகே நகர், சென்னை

அனைவரும் வாருங்கள்அனுமதி இலவசம்

அன்புடன்
கமலபாலா பா.விஜயன்


(ஏற்கனவே மாதந்திர நிகழ்வாக நடத்துவதற்காக திட்டமிடப்பட்டது.. ஒரு நல்ல படத்திற்கு செய்யும் மரியாதையாக.. உடனடியாக நிகழ்வு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே தேர்ந்தெடுத்த படங்களுக்கான ஆயவரங்கம் பிறகு நடத்தப்படும்.. நண்பர்கள் அனைவரையும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்..)

Film Literature Confluence
Aruvi – Special Seminar & Discussion

Film: ARUVI
Participants: Producer, Director and Artists

17-12-2017  Sunday 5.30 PM

Discovery Book Palace, Munusamy Rod, KK nagar, Chennai

All are welcome.. Entry free..

With love
KamalabalaB.Vijayan



(Already the program was planned as regular monthly meet.. As a respect to a good movie, the program is changed immediately.. The seminar on the films selected already will be conducted later.. I request all friends to co-operate..)

Monday, 20 November 2017

Weekly meets from 26-12-2017 onward





Our confluence is going to celebrate its eighth anniversary on January 2018. As a part of it, the timing and schedule of our Weekly meets are fixed freshly.

By learning from the past experience, decided to conduct more discussions on creativity than reviews. It is the need of the time and required in the industry. There are many platforms for reviewing films, especially good hit films. 

The weekly meets will be conducted of every Sunday at 3.30 PM. 
Everyone is working from Monday to Saturday for their own areas. So the weekly meet will be a platform for sharing their experience one another as to guide the friends and help them to create.

And the weekly meets will encourage everyone to follow the objectives of our confluence to reach their targets.

From now onward, no direct invitation for weekly meets. (Invitation will be only for special meets.) 
But the report, photos or videos of the programs will be uploaded here or facebook or youtube later.

Monday, 13 November 2017

அசோகவனம் ASHOKAVANAM



நண்பர்களே..

இலக்கியத்தையும்  திரைப்படத்தையும் இணைக்கும் பாலம் தான் நாடகம்...

இலக்கியத்துறையையும் திரைப்படத்துறையையும் இணைக்கவேண்டும், திரைத்துறையில் ஒரு நட்புவட்டத்தை உருவாக்கவேண்டும் போன்ற இலக்குகளுடன் பயணிக்கும் நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தனது எட்டாவது ஆண்டுவிழாவில் அந்த பாலத்தில் பயணத்தை தொடர உள்ளது...

எட்டாவது ஆண்டுவிழாவின் ஒரு பகுதியாக 'அசோகவனம்' என்ற மேடை நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறது..

இலக்கியம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட படைப்பாளிகளையும், கலைஞர்களையும், உதவியாளர்களையும் இந்த முயற்சியில் எங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற அழைக்கிறோம்..

வாருங்கள்..
தமிழ் நாடக உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்குவோம்..

அன்புடன்..
கமலபாலா பா.விஜயன்

Dear Friends...

Play is the bridge uniting the Literature and Cinema together...

Our Film Literature Confluence, travelling with the objectives like ' the film and literature fields should be united together and a friendship circle among film fraternity should be formed', is planning to travel on that bridge in its eighth anniversary. 

A play 'ASHOKAVANAM'' will be staged as a part of the anniversary..

We are inviting all creators, artistes and assistants, who are interested in literature, plays and cinema to work together in this attempt

Come on, 
Let us make turning point in the field of Thamizh plays..

with love
Kamalabala B.Vijayan