Wednesday 13 July 2016

இலக்கிய நிகழ்வுகள் ஆரம்பம்


திரைப்ப இலக்கியச் சங்கமத்தின் சார்பாக இதுவரை சினிமா பற்றிய நிகழ்வுகளை மட்டுமே நடத்திவந்துள்ளேன். தற்பொழுது இலக்கிய விழாக்களையும் நடத்த ஆரம்பித்திருப்பதை நினைக்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

எளியகுறள்நூலை வெளியிட்டபின் சில வருடங்களாக மீண்டும் திரைப்படம் சார்ந்த பணிகளிலேயே கவனம் செலுத்தி வந்திருந்த நேரத்தில் பஷீர் பற்றிய ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பதால் தான் மீண்டும் இலக்கிய உலகில் பணியாற்ற ஆரம்பித்தேன்.

பஷீரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் நான் முதன்முதலாக உரைநடையில் எழுதினேன். இருந்தாலும் சில காரணங்களால் வேறு இரண்டு புத்தகங்கள்தான் என்னுடைய நூல்களாக முதலில் வெளியாகின. (தற்பொழுது பஷீரின் வாழ்க்கை வரலாறு வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு கூடுதல் சந்தோஷம்.)

இந்த நிலையில் இலக்கிய சந்திப்புகளை நடத்;தலாம் என்று நினைத்தபோது, இப்போதும் பஷீர்தான் என் துணைக்கு வந்திருக்கிறார். பஷீருக்கும் எனக்கும் ஏதோ ஒரு ஜன்ம பந்தம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்!

பஷீரின் நினைவுநாளையொட்டி ஒரு நிகழ்வை டிஸ்கவரி புக் பேலசுடன் இணைந்து வரும் 17-7-16 அன்று நடத்த திட்டமிட்டுள்ளேன். இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகள் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் சார்பில் தொடரும் என்பதில் ஐயமில்லை.


திரைப்ப நிகழ்வுகளைப் போலவே இவற்றையும் வெற்றிபெறச்செய்ய நண்பர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment

Let others know your opinions about this post