Friday 26 May 2017

பொன்னியின் செல்வன் - பிள்ளையார் சுழி




தெலுங்கில் ராஜமௌலி எடுத்த பாகுபலி 1 மற்றும் 2’ இந்திய திரை உலகத்தையே கலக்கிவிட்டது. தற்பொழுது பட்ஜெட் படம் என்றால் இனி பாகுபலி படங்களுடன் ஒப்பிடாமல் இருக்க யாராலும் முடியாது.
பலரும் பாகுபலியின் வெற்றியை பின்பற்றி பெரும்பட்ஜெட் படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ரெண்டாமூழம் (மகாபாரதம்)’ 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. தமிழில் சங்கமித்ராஆரம்பித்துவிட்டார்கள்.
எந்திரன் 2.0’ விரைவில் வெளியாக இருக்கிறது. அது வெற்றிபெற்றால் பெரிய பட்ஜெட் படங்களில் வருகை இன்னும் அதிகரிக்கும்.

இப்படி பெரியபட்ஜெட் படங்கள் பற்றி பேசும்போதெல்லாம் தமிழ் ரசிகர்கள் மனதில் எழும் ஒரு பெயர்தான் பொன்னியின் செல்வன்’.
ஏன் இந்த கதையை யாரும் பிரம்மாண்டமான ஒரு படமாக எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவது சகஜம்.

அந்த கேள்விக்கான ஒரு பதில்தான் இந்த முயற்சி. இது ஒரு நாளில் எடுத்த முடிவு அல்ல. பல வருடங்கள் யோசித்து வரைவுசெய்யப்பட்ட ஒரு திட்டம்.

இது காலத்தின் கட்டாயம். இது பற்றிய கூடுதல் விபரங்கள் தொடரும் பதிவுகளில்… 

No comments:

Post a Comment

Let others know your opinions about this post