Saturday 27 May 2017

திரைக் கலைஞர்கள் வட்டம் - ஆரம்பம்



அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும்என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது!

தற்பொழுது, திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக, இத்துறையில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய, மேலும் பல எண்ணங்களுடன் நமது சங்கமம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.    
அந்த இலக்குகளை எட்டுவதன் முதல்படியாக திரைத் துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்காகவும், வெற்றியைத் தேடுபவர்களுக்காகவும், சினிமாவை ரசிப்பவர்களுக்காகவும், சினிமாவை எடுப்பவர்களுக்காகவும் திரைக் கலைஞர்கள் வட்டம்’  (CINE ARTISTS CIRCLE) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலக்குகள்

அனைத்து கலைஞர்களையும் (நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள்) ஒரு நட்பு வட்டத்திற்குள் இணைக்க வேண்டும்!
அனைவரது பெயர் மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் (திரைப்பட இலக்கியப் பெயர்காட்டி) சேர்க்க வேண்டும்!
வாரம் ஒரு சந்திப்பு, மாதம் ஒரு விழா என ஒருவரையொருவர் சந்திப்பதற்கான களம் அமைக்க வேண்டும்!
ஒன்றிணைந்து திரைப்படத்தை ரசிக்க, அறிந்துகொள்ள, கற்றுக்கொள்ள, பயிற்சியெடுக்க, பகிர்ந்துகொள்ள, வெற்றிபெற வழி வகுக்க வேண்டும்!
நல்ல படங்களையும், நல்ல திறமையாளர்களையும் தேர்ந்தெடுத்து பாராட்ட, உதவிசெய்ய மற்றும் ஊக்குவிக்க வேண்டும்!

செயல்கள்

கலைஞர்கள் வட்டத்தில் இருந்த படக்குழுக்களை (நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்) உருவாக்குவது!
அவர்கள் குறும்படங்களை அல்லது திரைப்படங்களை எடுக்க உதவி செய்வது, அனைவரையும் ஒருங்கிணைப்பது!
புதியதாக வெளிவரும் படங்கள் மற்றும் குறும்படங்களில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து, ஆராய்ந்து, அவற்றின் பாடைப்பாளிகளை பாராட்டுவது மற்றும் படைப்புகளை விமர்சிப்பது!
திரைத்துறையில் நடப்பவற்றையும், திரைத்துறைக்கு தேவையானவற்றையும் அறிந்துகொள்வது மற்றும் பகிர்ந்துகொள்வது!
அதற்காக தொடர்ந்து கருத்தரங்கம், பயிலரங்கம், குறும்பட ஆய்வரங்கம் மற்றும் திரைப்பட ஆய்வரங்கம் நடத்துவது!

திரைப்பட. இலக்கிய உலக நண்பர்களே. இந்த
நட்பு வட்டத்தில் இணைந்திடுங்கள்
அனைவரும் ஒன்றுகூடுவோம்
ஒவ்வொருவரும் வெற்றிபெறுவோம்


கமலபாலா பா.விஜயன்

No comments:

Post a Comment

Let others know your opinions about this post