Monday 26 October 2020

Thirukkural Eliyakural Selected Chapters - 40





 

பொருள்அரசியல்

WEALTH – POLITICS

                                                                          

40  கல்வி

Kalvi

Education

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.                                                   391

Karka kasadarak karpavai katrapin

Nirka atharkut thaka.

படி பிழையின்றி படிப்பவை படித்தபின்

நட அதன் படி.

Padi pizhaiyinri padippavai paditthapin

Nada athan padi.

Learn thoroughly, after learned what to be learned

Follow the learned.

 

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.                            392

Ennenpa aenai yezhutthenpa ivvirandum

Kannenpa vaazhum uyirkku.   

எண்ணென்ற எழுத்தென்ற இவ்விரண்டும் கண்கள்

என்பார் வாழும் உயிர்க்கு.

Ennenra ezhutthenra ivvirandum kankal

Enpaar vaazhum uyirkku.

Both the numbers and alphabets are called as  

Eyes for the living beings.

 

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.                                 393

Kannudaiya renpavar katrōr mukatthirandu

Punnudaiyar kallaa thavar.            

கண்ணில்லாக் கற்றவர் கண்ணுடையார் முகத்திரண்டு

புண்ணுடையார் கல்லா தவர்.

Kannillaa katravar kannudaiyaar mukatthirandu

Punnudaiyaar kallaa thavar.

The learned have eyes, even blind, the illiterates

Have two wounds in the face.

 

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.                                 394

Uvappat thalaikkoodi ullap pirithal

Anaitthē pulavar thozhil. 

பழகிட மகிழ்ந்து பிரிந்திட வருந்தச்

செய்தலே புலவர் தொழில்.

Pazhakida makizhnthu pirinthida varuntha

Seythalē pulavar thozhil.

The job of scholar is to make enjoy when together and

Make them feel when departing.

 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.                                          395

Udaiyaarmun illaarpōl aekkatrum katraar

Kadaiyarē kallaa thavar.

அறிவுடையார்முன் இல்லார்போல் பணிந்து கற்றவர்

உயர்ந்தார் கல்லாதார் இழிந்தார்.

Arivudaiyaarmun illaarpōl paninthu katravar

Uyarnthaar kallaathaar izhinthaar.

Who learned by obedience as the poor, are

The masters and others are wretched.

 

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.                                      396

Thottanait thooru manarkēni maantharkkuk

Katranait thoorum arivu. 

தோண்டிட ஊறும் மணல்கேணிபோல் மனிதர்க்கு

கற்றிட ஊறும் அறிவு. 

Thōndida oorum manalkēnipōl manitharkku

Katrida oorum arivu.

As the sand well oozes when digging, the

Intelligence will spring when learned.

 

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.                            397

Yaathaanum naadaamaal ooraamaal ennoruvan

Saanthunaiyum kallaatha vaaru.

கற்றார்க்கு யாதும்நாடே யாதும்ஊரே என்றிருக்க

கடைசிவரைக் கற்காததும் ஏனோ.

Katraarkku yaathumnaadē yaathumoorē enrirukka

Kadaisivarai karkaathathum ēnō.

Since the countries and villages are for the learned,

Why not learn till the end?

 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து.                              398

Orumaikkan thaankatra kalvi oruvar

Kezhumaiyum aemaap pudaitthu.

ஓர்பிறப்பில் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு

ஏழ்பிறப்பும் உதவும்திறன் கொண்டது.

Orpirappil thaankatra kalvi oruvarkku

Ēzhpirappum uthavumthiran kondathu.

The education got from single birth will have the

Capacity to serve one in seven births.

 

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.                                       399

Thaamin puruva thulakin purakkandu

Kaamuruvar katrarin thaar.           

தன்கல்வி பிறர்க்கும் இன்பம்தரும் எனக்கண்டு

கற்றவர் காதலிப்பாரதை மேலும்.

Thankalvi pirarkkum inpamtharum enakkandu

Katravar kaathalippaarathai mēlum.

Seeing that educaton of self gives joy for others too,

The wise will love it more.

 

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.                                        400

Kēdil vizhucchelvam kalvi yoruvarku

Maadalla matrai yavai. 

அழியாத செல்வம் கல்வி ஒருவர்க்கு

அதுபோல சிறப்பல்ல மற்றவை.

Azhiyaatha selvam kalvi oruvarkku

Athupōla sirappalla matravai.

Permanent wealth is education, for one,

Nothing is greater than that.

 


No comments:

Post a Comment

Let others know your opinions about this post